ஆந்திரா சிறப்பு அந்தஸ்து விவகாரம் தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் YSR காங்கிரஸ் பங்கேற்காது என தகவல்கள் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக நேற்று ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆந்திரா சிறப்பு அந்தஸ்து தொடர்பாக முக்கிய முடிவு எடுக்க அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்தார். ஆனால் இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் YSR காங்கிரஸ் பங்கேற்காது என தகவல்கள் வெளியாகியுள்ளது.


ஆந்திரா-விற்கு சிறப்பு அந்தஸ்து வழங்வது தொடர்பாக மத்திய அரசு மற்றும் ஆந்திர மாநில அரசியல் கட்சிகளுக்கும் இடையே கடும் மோதல் நடைப்பெற்று வருகிறது. இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தெலங்கு தேசம்கட்சி, கூட்டணியில் இருந்து வெளியேறியது. 


மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரவும் ஆந்திர கட்சிகள் முடிவு செய்தது. இதனையடுத்து மத்திய அரசுக்கு எதிராக தங்களது எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் ஆந்திர மாநில MP-க்கள் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக அவை நடவடிக்கையை முடங்கிய நிலையில் உள்ளது. 


இந்நிலையில் ஆந்திரா-விற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குதல் விவகாரம் தொடர்பாக YSR காங்கிரஸ் MP-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின. மேலும் பாராளுமன்ற கூட்டத்தின் கடைசி நாள் அன்று அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.



இதனையடுத்து முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறப்பு அந்தஸ்து தொடர்பாக முக்கிய முடிவு எடுக்க அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடன் பேசிய தெலுங்கு தேச MP ரமேஷ் தெரிவிக்கையில்., YSR காங்கிரஸ் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பதாக தெரியவில்லை, அவர்களிடம் தெளிவான முடிவும் இல்லை. அவர்கள் கூறியது போல் அவர்களது MP-களை ராஜினாமா செய்த பிறகே அவர்களது உன்மையான நிலைபாடு என்ன என்பது தெரியும் என தெரிவித்துள்ளார்!