புதுடில்லி: இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனமான Zee குழுமம், இந்திய தலைவர்களுடன் கலந்துறையாடும் வகையில் மாபெரும் கூட்டத்தை இன்று ஏற்பாடு செய்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கூட்டத்தில், தலைவர்கள் பலரும் கலந்துக்கொண்டு தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர். இந்த சிறப்பு நிகழ்விற்கான நோக்கமானது, இந்தியா எப்படி முன்னேற்றப் பாதைக்கு கொண்டுச் செல்வது, மாற்றங்களின் எதார்த்தம் என்ன? எதிர்க்கட்சித் தலைவர்கள் தற்போதைய அரசாங்கங்க செயல்பாடுகள் என்ன? அவர்களின் செயல்திறன்களை மீது தங்களின் கருத்துக்கள் என்ன என்பதினை குறித்துப் பகிர்ந்து கொண்டனர். 


நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் அமித் ஷா சிறப்பு விருந்தாளராக கலந்துக்கொண்டு பேசினார். அதேப்போல் பாஜக கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணி சுவாமி அவர்களும் கலந்துக்கொண்டு பேசினார்.


நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் இந்து மற்றும் இஸ்லாமியர்கள் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் நாட்டின் முன்னேற்றத்தினை குறித்து நாம் வருத்தப்பட தேவை இல்லை என தெரிவித்தார். அதேப்போல் தெலுங்கு தேச கட்சியில் பிரிவு பாஜக வை ஒரு வகையிலும் பாதிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



இந்த சந்திப்பின் போது அயோத்தி விவகாரம் மற்றும் திரிபுரா தலாக்கைப் பற்றியும் பேசப்பட்டது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தரகண்ட் முதல்வர் ட்ரவிட்ர சிங் ராவத், ஜம்மு காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா, மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி, மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜீவாலா, நாகாலாந்து முதல்வர் ரியோ, மேகாலயா முதலமைச்சர் கனரா ஒரு சங்மா, திரிபுரா பாஜக தலைவர் ப்ரபாரி சுனில் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சியின் காணோலி இணைப்பு உங்களுக்காக...