2000 Rupee Note: வங்கியை தவிர வேறு எங்கெல்லாம் 2000 ரூபாய் நோட்டை மாற்றலாம்?

2000 Rupee Note: இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.  மே 23 முதல் ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறவும் ரிசர்வ் வங்கி உத்தரவினை பிறப்பித்து இருக்கிறது.  

Written by - RK Spark | Last Updated : May 20, 2023, 12:32 PM IST
  • வங்கிக் கணக்கு இல்லாதவர்களும் இனி ஒரே நேரத்தில் ரூ.2000 நோட்டுகளை மாற்றலாம்.
  • மே 23 முதல் ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெற ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
  • செப்டம்பர் 30, 2023க்குள் எந்த வங்கிக் கிளையிலும் நீங்கள் வைத்திருக்கும் ரூ.2000 நோட்டுகளை மாற்றலாம்.
2000 Rupee Note: வங்கியை தவிர வேறு எங்கெல்லாம் 2000 ரூபாய் நோட்டை மாற்றலாம்? title=

2000 Rupee Note: கடந்த 2016-ம் ஆண்டு ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் பொருட்டு  இந்திய ரிசர்வ் வங்கியால் செல்லாததாக்கப்பட்டது, இந்த பணமதிப்பிழப்பு அறிவிப்பை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.  பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது.  இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி இன்று புழக்கத்தில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.  இதையடுத்து உடனடியாக அமலுக்கு வரும் வகையில், 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிட வேண்டாம் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதுதவிர, மே 23 முதல் ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறவும் ரிசர்வ் வங்கி உத்தரவினை பிறப்பித்து இருக்கிறது.  இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த புதிய முடிவின்படி, வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் தாங்கள் வைத்திருக்கும் ரூ.2000 நோட்டுகளை மாற்ற முடியாதோ என்கிற பயம் வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.  இதுகுறித்து வங்கி கணக்கு இல்லாதவர்கள் பயப்பட வேண்டிய தேவையில்லை, இதற்கான ஏற்பாடுகளையும் ரிசர்வ் வங்கி செய்துள்ளது. அதாவது வங்கிக் கணக்கு இல்லாதவர்களும் இனி ஒரே நேரத்தில் ரூ.2000 நோட்டுகளை வங்கிக்குச் சென்று மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெளிவாக தெரிவித்து இருக்கிறது.  ரூ.2000 நோட்டுக்களை மாற்றுவது தொடர்பாக ரிசர்வ் வங்கி சில தகவல்களை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | செப்டம்பர் 30க்கு பிறகு ரூ.2000 நோட்டு செல்லுமா? RBI சொன்ன முக்கிய தகவல்!

 

- மே 23 முதல் எந்த வங்கியிலும் நீங்கள் ரூபாய் நோட்டுகளை மாற்றலாம் அல்லது டெபாசிட் செய்து கொள்ளலாம்.

- செப்டம்பர் 30, 2023க்குள் எந்த வங்கிக் கிளையிலும் நீங்கள் வைத்திருக்கும் ரூ.2000 நோட்டுகளை மாற்றலாம்.

- ஒரே நேரத்தில் ரூ.20,000 மாற்றலாம் அல்லது வங்கியில் டெபாசிட் செய்து கொள்ளலாம்.

- இந்திய ரிசர்வ் வங்கியின் 19 கிளைகளிலும் நோட்டுகளை மாற்றி கொள்ளலாம்.

- இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் பிற அனைத்து வங்கிகளிலும் ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியும்.

- ரூ. 20000-ஐ திரும்பப் பெறலாம் அல்லது ஒரே நேரத்தில் பரிமாற்றி கொள்ளலாம்.

- நீங்கள் மாற்றும் மொத்தத் தொகை ஒரே நேரத்தில் ரூ.20,000-க்கு மேல் இருக்கக்கூடாது.

ரூ.2000 நோட்டின் புழக்கம் குறைவதை ஒருவகையில் மினி பணமதிப்பிழப்பு என்றும் கூட சொல்லலாம்.  இதனால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படாமல் இருக்க, ரூபாய் நோட்டுகளை மாற்றவோ அல்லது திரும்பப் பெறவோ வங்கிகள் இன்னும் சிறிது காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ரூ.2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்து, இந்த வைப்புத் தொகைக்கு எதிராக பணத் தேவைகளைப் பெறலாம்.  2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றவோ அல்லது டெபாசிட் செய்யவோ விரும்பும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்க ஏற்பாடு செய்ய வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எந்த வங்கிக் கிளையிலும் ஒரே நேரத்தில் ரூ.2,000 ரூபாய் நோட்டுகளை ரூ.20,000 வரையில் கணக்கு வைத்திருக்காதவர் மாற்றிக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.  பரிமாற்ற வசதியைப் பெறுவதற்கு பொது மக்கள் எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்றும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க | PPF: தினமும் ரூ. 300 முதலீடு செய்தால்... ஓய்வு பெறும்போது ரூ. 2. 36 கோடி கிடைக்கும் - எப்படி தெரியுமா?

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News