DA Arrears: 18 மாத டிஏ அரியர் தொகை வருதா? தேர்தலுக்கு முன் 2 குட் நியூஸ்?

DA Arrears Update: மத்திய அரசு உழியர்களும் ஓய்வூதியதாரர்களும் கொரோனா பெருந்தொற்றின் போது முடக்கப்பட்ட அகவிலைப்படி அரியர் தொகையை விரைவில் பெறவுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 8, 2024, 01:11 PM IST
  • 18 மாத டிஏ அரியர் தொகை: நிதி அமைச்சருக்கு கடிதம்.
  • இந்த தொகை எப்போது வரும்?
  • இது பற்றிய விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
DA Arrears: 18 மாத டிஏ அரியர் தொகை வருதா? தேர்தலுக்கு முன் 2 குட் நியூஸ்? title=

7th Pay Commission, DA Arrears Latest Update: அகவிலைப்படி அதிகரிப்பு மற்றும் அகவிலைப்படி அரியர் தொகை ஆகியவற்றின் சமீபத்திய அப்டேட்டிற்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. கூடிய விரைவில் ஊழியர்களின் வங்கிக் கணக்கில் ஒரு மிகப்பெரிய தொகை வரவு வைக்கப்படும். இதில் அகவிலைப்படி அதிகரிப்பு தொகை மற்றும் 18 மாத அகவிலைப்படி அரியர் தொகையின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அகவிலைப்படி அதிகரிப்புக்கான அறிவிப்பு மார்ச் மாதம் வரும் என கூறப்படுவதால், அதில் ஓரளவுக்கு தெளிவு உள்ளது. ஆனால், 18 மாத டிஏ அரியர் தொகை (18 Month DA Arrear) குறித்த குழப்பம் இன்னும் இருக்கிறது. இந்த நிலையில். இது தொடர்பாக தற்போது வந்துள்ள புதுப்பிப்பு என்ன? இந்த தொகை எப்போது வரும்? இது பற்றிய விவரங்களை இந்த பதிவில் காணலாம். 

18 மாத டிஏ அரியர் தொகை: நிதி அமைச்சருக்கு கடிதம்

மத்திய அரசு உழியர்களும் ஓய்வூதியதாரர்களும் கொரோனா பெருந்தொற்றின் போது முடக்கப்பட்ட அகவிலைப்படி அரியர் தொகையை விரைவில் பெறவுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Finance Minister) அவர்களுக்கு ஒரு கடிதமும் எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்தக் கடிதத்தில், பாரதிய பிரதிக்ஷா மஸ்தூர் சங்கத்தின் பொதுச் செயலாளர் முகேஷ் சிங், அகவிலைப்படி முடக்கப்பட்ட காலத்திற்கான, அதாவது 18 மாத காலத்திற்கான அகவிலைப்படி நிலுவைத் தொகையை மத்திய அரசு (Central Government) வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.  

மேலும் படிக்க | ரேஷன் அட்டை இல்லனாலும் ஜாக்பாட் தான்.. ரூ.6,000 வழங்க அரசு முடிவு

அகவிலைப்படி ஏன் முடக்கப்பட்டது?

கொரோனா பெருந்தொற்றின் போது உலகம் முழுவதும் அசாதாரண சூழல் ஏற்பட்டது. அப்போது நலிந்த மற்றும் தேவையில் இருந்த மக்களுக்கான செலவுகளை செய்யவும், அப்போது உருவான அசாதாரண நிலையை சமாளிக்கவும் மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) அகவிலைப்படி முடக்கப்பட்டு அந்த தொகை இந்த பணிகளுக்கான செலவழிக்கப்பட்டது.   2020 ஜனவரி முதல் 2021 ஜூன் வரை ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படவில்லை. நிலைமை சற்று சரியானவுடன் முடக்கம் நீக்கப்பட்டது. எனினும், அகவிலைப்படி (Dearness Allowance) நிறுத்தப்பட்ட 18 மாதங்களுக்கான நிலுவைத் தொகை ஊழியர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. இதை வழங்கவேண்டும் என ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 

தற்போது இது குறித்த ஒரு நல்ல முடிவு எடுக்கப்படலாம் என வட்டாரங்கள் கூறுகின்றன. இது குறித்த பேச்சுவார்த்தைகளும் நடந்துவருவதாக தெரிகிறது. குறிப்பாக, இன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்தல் (Lok Sabha Election) நடக்கவுள்ள நிலையில்,  மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களை (Pensioners) ஈர்த்து அவர்களை மகிழ்விக்கும் வகையில், மத்திய அரசு 18 மாத டிஏ அரியர் (DA Arrears) தொகையை ஒரு பிரம்மாஸ்திரமாக பயன்படுத்தலாம் என கூறப்படுகின்றது. எனினும், இது குறித்து அதிகாராப்பூர்வமாக அரசு இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

4% டிஏ ஹைக்

சமீபத்தில் டிசம்பர் மாத ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் (AICPI Index) வெளியாகியுள்ளன. இவற்றின் அடிப்படையில் ஜனவரி 2024 முதலன அகவிலைப்படி அதிகரிப்பு (DA Hike) 4 சதவிகிதம் இருக்கும் என தெரிகிறது. அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரித்தால் ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவை 50 சதவிகிதமாக உயரும். இது ஊழியர்களின் மாத சம்பளத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் ஹோலி பண்டிகையை ஒட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் படிக்க | NPS Withdrawal Rules:பணம் எடுக்கும் விதிகளில் முக்கிய மாற்றம்.!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News