DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 மிகப்பெரிய பரிசுகள், மாத சம்பளத்தில் ஏற்றம்

DA Hike in 7th Central Pay Commission: சமீபத்தில் வெளிவந்த டிசம்பர் மாத ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் 2024 ஜனவரி முதல் ஊழியர்களின் அகவிலைப்படியும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணமும் 4% அதிகரிக்கும் என்பது தெளிவாகியுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 7, 2024, 03:02 PM IST
  • அகவிலைப்படி அதிகரிப்பு.
  • ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிப்பு.
  • அகவிலைப்படி அரியர் தொகை.
DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 மிகப்பெரிய பரிசுகள், மாத சம்பளத்தில் ஏற்றம்

7th Central Pay Commission, DA Hike For Central Govt Employees: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இப்பொழுது மிக நல்ல செய்தி வரவுள்ளது. ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருந்த முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சில நாட்களில் ஊழியர்களுக்கு மூன்று பெரிய பரிசுகள் கிடைக்கவுள்ளன. அவற்றைப் பற்றிய இந்த பதிவில் காணலாம்.

Add Zee News as a Preferred Source

அகவிலைப்படி அதிகரிப்பு (DA Hike)

சமீபத்தில் வெளிவந்த டிசம்பர் மாத ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில் 2024 ஜனவரி முதல் ஊழியர்களின் அகவிலைப்படியும் (Dearness Allowance) ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணமும் 4% அதிகரிக்கும் என்பது தெளிவாகியுள்ளது. இதன் மூலம் மொத்த அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 50% ஆக உயரும். இதனால் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். எனினும் இதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் வரும் என்று கூறப்படுகிறது.

ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிப்பு

நீண்ட நாட்களாக மத்திய அரசு ஊழியர்கள் Central Government Employees) ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அதிகரிக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஊழியர்களின் இந்த கோரிக்கைக்கு மத்திய அரசு (Central Government) விரைவில் செவி சாய்க்கலாம் என்று நம்பப்படுகின்றது. தற்போதுள்ள நிலவரப்படி ஏழாவது குழுவின் (7th Pay Commission) கீழ், ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக உள்ளது. இதன் கீழ் குறைந்த பட்ச அடிப்படை சம்பளம் 18,000 ரூபாயாக உள்ளது.

மேலும் படிக்க | டபுள் வருமானம், பணத்திற்கு 100% பாதுகாப்பு: அசத்தலான தபால் அலுவலக சேமிப்பு திட்டம்

ஃபிட்மெண்ட் ஃபாக்டரை (Fitment Factor) 2.57 மடங்கிலிருந்து 3 மடங்காக உயர்த்த வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 3 மடங்காக அதிகரிக்கப்பட்டால், அடிப்படை சம்பளம் 18,000 ரூபாயிலிருந்து 21,000 ரூபாயாக உயரும். இதனால் ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் ஏற்றம் இருக்கும். 

ஃபிட்மெண்ட் ஃபாக்டரால் ஊழியர்களின் ஊதியத்தில் எவ்வளவு சம்பள ஏற்றும் இருக்கும் என்பதை இந்த கணக்கெட்டின் மூலம் காணலாம்.

- ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 மடங்காக இருந்தால், ரூ. 18,000 அடிப்படை சம்பளம் உள்ள மத்திய ஊழியருக்கு, கொடுப்பனவுகளைத் தவிர்த்து சம்பளம் - ரூ.18,000 X 2.57 = ரூ. 46,260 ஆக இருக்கும். 

- ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 3 மடங்காக இருந்தால், சம்பளம் ரூ. 21,000 X 3 = ரூ 63,000 ஆக உயரும். 

அகவிலைப்படி அரியர் தொகை

கொரோனா பெருந்தொற்றின் போது ஏற்பட்ட அசாதாரண நிலையை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் வரை முடக்கப்பட்டது. நிலைமை சற்று சரியானவுடன் இந்த முடக்கம் நீக்கப்பட்டது. எனினும் இந்த காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படியின் நிலுவைத்தொகை ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. இந்த நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலில் (Lok Sabha Election) ஊழியர்களை மகிழ்விக்கும் வகையில் மத்திய அரசு டிஏ அரியரை (DA Arrears) வழங்கலாம் என நம்பப்படுகின்றது. அப்படி நடந்தால், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் (Pensioners) கணக்கில் பெரும் தொகை வரவு வைக்கப்படும்.

மேலும் படிக்க | CBDT வரி செலுத்துவோருக்கு அளித்த நல்ல செய்தி: இந்த வரி வழக்குகள் மூடப்படும்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News