8th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட், விரைவில் 50% டிஏ, ஊதிய உயர்வு

8th Pay Commission Latest News: அகவிலைப்படியை (DA Hike) மீண்டும் ஒருமுறை உயர்த்த மத்திய அரசு (central government) திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இந்தச் செய்திக்கு முன்னரே மற்றொரு பெரிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 27, 2023, 06:42 AM IST
  • ரேட்டிங்கிற்கு ஏற்ப சம்பளம் அதிகரிக்கும்.
  • எந்த அடிப்படையில் சம்பளம் மறுஆய்வு செய்யப்படும்?
  • அகவிலைப்படி இருமுறை உயர்த்தப்பட்டுள்ளது.
8th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட், விரைவில் 50% டிஏ, ஊதிய உயர்வு title=

8வது ஊதியக் குழுவின் சமீபத்திய செய்திகள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு (Central government employees) ஒரு முக்கிய செய்தி உள்ளது. கூடிய விரைவில் லட்சக்கணக்கான மத்திய ஊழியர்களின் (central government) சம்பளம் பம்பரமாக உயர்த்தப்பட உள்ளது. அந்தவகையில் அகவிலைப்படியை (DA Hike) மீண்டும் ஒருமுறை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இந்தச் செய்திக்கு முன்னரே தற்போது மற்றொரு பெரிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்த நேரத்தில் ஊழியர்கள் ஏழாவது ஊதியக் குழுவின் கீழ் சம்பளம் பெற்று வரும் நிலையில், தற்போது 8 வது ஊதியக் குழுவில் மிகப்பெரிய அப்டேட் ஒன்று வந்துள்ளது. அதன்படி எட்டாவது ஊதியக் குழுவை எப்போது அரசாங்கம் கொண்டு வரவுள்ளது என்று அறிவித்துள்ளது.

அகவிலைப்படி உயர்வு
இந்தியாவில் 8வது சம்பள கமிஷன் மூலமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை ஆண்டுக்கு இரு முறை உயர்த்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு அகவிலைப்படி 4 சதவீதமாக உயர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது அகவிலைப்படி 42 சதவீதமாக இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரிக்கு பின் அது 50 சதவீதத்தை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

8வது ஊதியக்குழு பற்றிய தகவல்கள்
இந்நிலையில் கூடிய விலையில் எட்டாவது ஊதியக் குழுவை அரசு அமல்படுத்தலாம் என்று கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பல வகையான செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது 8-வது ஊதியக்குழு தொடர்பாக அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நிதித்துறை இணை அமைச்சராக இருக்கும் பங்கஜ் சவுத்ரி, மாநிலங்களவையில் இது குறித்து தெளிவான அப்டேட்டை வழங்கியுள்ளது. அதன் விவரத்தை கீழே விரிவாக காண்போம்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலையில் ஜாலிதான்.... அதிரடி டிஏ ஹைக் நிச்சயம்.. உற்சாகத்தில் ஊழியர்கள்

அகவிலைப்படி இருமுறை உயர்த்தப்பட்டுள்ளது.
இதனிடையே மத்திய அரசு 2014 ஆம் ஆண்டு 7வது ஊதியக் குழுவை ரிலீஸ் செய்திருந்தது, இந்த நேரத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வும் வழங்கப்படுகிறது. பொதுவாக 7வது ஊதியக் குழுவின் படி DA 50 சதவீதத்தைத் தாண்டினால் புதிய ஊதியக் குழுவைக் கொண்டு வர வேண்டும். இது குறித்து மத்திய அரசு பதில் அளித்துள்ளது. அதாவது 8-வது ஊதியக் குழு அமைப்பது தொடர்பான எந்த முன்மொழிவும் தற்போது தங்களிடம் இல்லை என்று நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. இது குறித்து மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபாவில் நிலைமை சீரானது
இது தொடர்பாக மாநிலங்களவையில் நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி விளக்கம் அளித்து கூறியதாவது, பொதுவாக, ஊதியக்குழு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டு வரப்படுகிறது, எனவே தற்போது 10 ஆண்டுகளுக்கு முன் இதில் எந்த வகையிலும் பரிசீலிக்கும் திட்டம் அரசுக்கு இல்லை. மேலும் தற்போது, ​​பர்ஃபார்மன்ஸ் அடிப்படையிலான அமைப்பை கொண்டு வர உள்ளோம் என மத்திய அரசு ஏற்கனவே பலமுறை கூறியுள்ளது.

ரேட்டிங்கிற்கு ஏற்ப சம்பளம் அதிகரிக்கும்
பர்ஃபார்மன்ஸ் அடிப்படையிலான அமைப்பில், ஊழியர்களுக்கு அவர்களின் பணிக்கு ஏற்ப மதிப்பீடு கிடைக்கும், அதன் அடிப்படையில் சம்பளம் உயர்த்தப்படும். ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், சலுகைகளை மற்றும் ஓய்வூதியத்தின் கட்டமைப்பை மாற்ற புதிய கமிஷன் அமைக்க தேவையில்லை.

எந்த அடிப்படையில் சம்பளம் மறுஆய்வு செய்யப்படும்?
மறுபுறம் அனைத்து கொடுப்பனவுகள் மற்றும் சம்பளங்கள் Aykroyd ஃபார்முலாவின் அடிப்படையில் மறுபரிசீலனை செய்யப்படலாம் என்று நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி ஒருமுறை நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 7th Pay Commission: விரைவில் 50% டிஏ, அதன் பிறகு 8வது ஊதியக்குழு... மொத்தத்தில் பண மழை!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News