Business Idea: லட்சங்களில் வருமானத்தை அள்ளித் தரும் காளான் வளர்ப்பு!

Mushroom Cultivation: காளான் அறை வெப்ப நிலையிலேயே அதிக நாட்கள் கெடாமல் இருப்பதோடு, இறைச்சிக்கு இணையான சுவை கொடுக்கக்கூடியது என்பதால், சந்தையில் காளானுக்கு நல்ல டிமாண்ட் உள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 4, 2023, 01:45 PM IST
  • காளான் வளர்ப்பு மற்றும் பதப்படுத்துதல் தொழில் மூலம் நலல் லாபம் ஈட்டலாம்.
  • காளான் வளர்ப்புக்கு வெப்பநிலை மிக முக்கியமானது.
  • வெப்பம் அதிகமாக இருந்தால் பயிர்கள் கருகும் அபாயம் உள்ளது.
Business Idea: லட்சங்களில் வருமானத்தை அள்ளித் தரும் காளான் வளர்ப்பு! title=

புதுடெல்லி: குறைந்தபட்ச முதலீட்டில் கணிசமான வருமானத்தை அளிக்கும் உங்களின் சொந்த தொழில்முனைவு பயணத்தை நீங்கள் தொடங்க விரும்பினால், இந்த தோட்டக்கலை தயாரிப்பு சாகுபடியை நீங்கள் தொடங்கலாம்.  அதில காளான் வளர்ப்பு மிகுந்த லாபம் தரும் தொழிலாக இருக்கும். சைவ உணவுக்கு ஈடான சுவையுடன், சைவ உணவில் முதலிடம் வகிக்கிறது, காளான். சிப்பிக்காளான், பட்டன் காளான், பால்காளான் என காளானில் பல வகைகள் உள்ளன. அறை வெப்ப நிலையிலேயே அதிக நாட்கள் கெடாமல் இருப்பதோடு, இறைச்சிக்கு இணையான சுவை கொடுக்கக்கூடியது என்பதால், சந்தையில் காளானுக்கு நல்ல டிமாண்ட் உள்ளது.

குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு காளான் வளர்ப்பு சிறந்த தொழில் யோசனையாக (Business Idea) இருக்கும். வெறும் ரூ. 2 லட்சம் முதலீட்டில், காளான் வளர்ப்பு மற்றும் பதப்படுத்துதல் தொழில் மூலம் நலல் லாபம் ஈட்டலாம். வளர்ந்து வரும் அயல்நாட்டு சைவ சந்தையில், காளான் விற்பனையில் நல்ல வருமானத்தை எதிர்பார்க்கலாம். சமீபத்திய ஆண்டுகளில் காளானின் சந்தை மற்றும் தேவை அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. நாமும் நமது வீட்டு அறை, மாடியில் அல்லது வீட்டு அருகே உள்ள சிறிய இடத்தில் மிகவும் குறைந்த முதலீட்டில் காளான் வளர்ப்பை தொடங்க முடியும். குறைந்தபட்சமாக 6 அடி நீளம், 6 அடி அகலம் கொண்ட இடம் இருந்தால் போதும். அதனை சூரிய ஒளி படாத இடமாக மாற்றி கொள்ள வேண்டும். அதையே கொஞ்சம் பெரிய அளவில் காளான் பயிரிட்டு முறையாக பதப்படுத்தி விற்பனை செய்தால், லட்சங்களில் லாபம் ஈட்டலாம். 

காளான் வளர்ப்புக்கு வெப்பநிலை மிக முக்கியமானது. வெப்பம் அதிகமாக இருந்தால் பயிர்கள் கருகும் அபாயம் உள்ளது. சாகுபடிக்கு ஈரப்பதம் 80-90 சதவீதம் இருக்க வேண்டும். நல்ல காளான்களை வளர்க்க, நல்ல உரம் இருப்பதும் அவசியம்.  ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காளானில், கலோரி, கொழுப்பு ஆகியவை குறைவாக உள்ளதாலும்  பெரும்பாலானோரின் விருப்ப உணவாக உள்ளது.

மேலும் படிக்க | Business Idea: லட்சங்களில் வருமானம் தரும் ஆலோவேரா ஜெல் பிஸினஸ்... நீங்களும் தொடங்கலாம்!

காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (KVIC) காளான் வளர்ப்பு தொடர்பான திட்ட அறிக்கையில், காளான் வளர்ப்பு மற்றும் பதப்படுத்துதல்  தொழிலுக்கு  பின்வரும் வகையில் நிதி தேவை இருக்கும்.

காளான் வளர்ப்பு மற்றும் பதப்படுத்தும் தொழிலுக்கான திட்ட செலவு

1. நிலம் வாடகைக்கு/சொந்தமானது.

2. கட்டிடம் & குடிமைப்பணி (2000 சதுர அடி): ரூ 5 லட்சம்

3. தொழிற்சாலை மற்றும் இயந்திரம்: ரூ 8 லட்சம்

4. மரச்சாமான்கள் மற்றும் சாதனங்கள்: ரூ. 69,000

5. தொழிலை தொடங்குவதற்கான செலவுகள்: ரூ 50,000

6. தொழில் மூலதனத் தேவை: ரூ 5.81 லட்சம்

மொத்தம்: 20 லட்சம்

காளான் வளர்ப்பு மற்றும் பதப்படுத்தும் தொழிலுக்கான நிதியை பெறும் வழிகள்:

சொந்த பங்களிப்பு @10%: ரூ 2 லட்சம்

வங்கிக் கடன் : ரூ 12.77 லட்சம்

பணி மூலதன நிதி: ரூ 5.22 லட்சம்

மொத்தம்: 20 லட்சம்

KVIC வெளியிட்டுள்ள திட்ட அறிக்கையின்படி, முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு, நான்காம் ஆண்டு மற்றும் ஐந்தாம் ஆண்டு ஆகியவற்றில் முறையே  ரூ. 76.95 லட்சம், ரூ. 93.83 லட்சம், ரூ. 107 கோடி, ரூ. 120 கோடி, மற்றும் ரூ. 134 கோடி, என்ற அளவில் மொத்த விற்பனையை எதிர்பார்க்கலாம். 

KVIC வெளியிட்டுள்ள திட்ட அறிக்கையில்,  நிகர லாபம் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு, நான்காம் ஆண்டு மற்றும் ஐந்தாம் ஆண்டு ஆகியவற்றில் முறையே, ரூ.8.90 லட்சம், ரூ.11.32 லட்சம், ரூ.14.51 லட்சம், ரூ.17.55 லட்சம், ரூ.20.44 லட்சம் என கூறப்பட்டுள்ளது.

"இன்றைய கால கட்டத்தில்,  CFTRI-யால் உருவாக்கப்பட்ட   தொழில்நுட்ப உதவியுடன் நாட்டின் எந்தப் பகுதியிலும் பயிரிட முடியும். தொழில்நுட்பம் CFTRI உடன் உள்ளது. அத்தகைய தொழில் அமைப்பி ஒன்றை நிறுவ PFA சட்டத்துடன் இணங்குவது அவசியம்," எனவும் KVIC வெளியிட்டுள்ள தொழில் சாத்தியக்கூறு அறிக்கை கூறுகிறது. 2006ம் ஆண்டின் FSS சட்டத்தின் கீழ் வணிகம் வருவதால், காளான் வளர்ப்பு வணிகத்திற்கான சட்டப்பூர்வ அனுமதி உங்களிடம் இருக்க வேண்டும். இது FSSAI உரிமப் பதிவு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Business Tips: வெறும் ரூ.10,000 முதலீடு செய்தால் போதும்.. மாதம் 40,000-50,000 வரை சம்பாதிக்கலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News