Corona இருந்தா என்ன? கோடியில் சம்பாதித்த சாதனையாளர்கள்

தொற்றுநோய் கொரோனா உலகத்தையே பணமற்றவர்களாக, வேலையற்றவர்களாக மாற்றியது. ஆனால் பெரும்பாலனவர்களை வறியவர்களாக்கிய கொரோனா வைரஸ், சொற்ப எண்ணிக்கையில் சிலரை மட்டும் கோடீஸ்வரர்களாக்கியிருக்கிறது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 29, 2020, 05:24 PM IST
  • கொரோனாவால் உலகமே பாதிக்கப்பட்டுள்ளது
  • பலரின் வாழ்வாதரமே பறிபோய்விட்டது
  • ஆனால் சிலரின் வருமானம் எகிறியிருக்கிறது
Corona இருந்தா என்ன? கோடியில் சம்பாதித்த சாதனையாளர்கள் title=

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பலர் வேலை இழந்தாலும், சிலரின் செல்வத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஃபோர்ப்ஸின் அறிக்கையின்படி, உலகெங்கிலும் இருந்து 50 மருத்துவர்கள், விஞ்ஞானிகள் (Scientists) மற்றும் சுகாதாரத் துறை தொழில்முனைவோர் இந்த தொற்றுநோய்களின் போது புதிய பில்லியனராக மாறியுள்ளனர். இந்த 28 விஞ்ஞானிகளில் பெரும்பாலானவர்கள் சீனாவைச் சேர்ந்தவர்கள். 4 பில்லியனர்கள் இந்தியாவில் வசிப்பவர்கள். இந்த முக்கிய நபர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

தொற்றுநோய் கொரோனா (Cornavirus) உலகத்தையே பணமற்றவர்களாக, வேலையற்றவர்களாக மாற்றியது. ஆனால் எந்தவொரு விஷயத்திற்கும் மற்றொரு பக்கம் இருப்பதைப் போல, பெரும்பாலனவர்களை வறியவர்களாக்கிய கொரோனா வைரஸ், சொற்ப எண்ணிக்கையில் சிலரை மட்டும் கோடீஸ்வரர்களாக்கியிருக்கிறது. அதுவும் கொஞ்சம் நஞ்சமல்ல, பில்லியனர்கள் என்ற பட்டியலில் இடம் பிடிக்கும் அளவுக்கு நிறைய பணம் சம்பாதித்த சில தொழிலதிபர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அந்த 50 பேர் கொண்ட பட்டியலில் 4 இந்தியர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

Also Read | தங்கத்தின் விலை கற்பனை செய்யமுடியாத உச்சத்தைத் தொடும்…

பிரேம்சந்த் கோதா (Premchand Godha) இந்திய மருந்து நிறுவனமான இப்கா லேப்ஸின் (Ipca Labs) தலைவராக உள்ளார். அவருடைய நிகர சொத்து (Asset) மதிப்பு 10,000 கோடி ரூபாயும். உண்மையில், கொரோனா வைரஸ் காரணமாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (Hydroxychloroquine) மருந்துக்கான தேவை வேகமாக அதிகரித்தது. இந்த காரணத்திற்காக, நிறுவனத்தின் சொத்துக்களின் மதிப்பு அதிரடியாக அதிகரித்தன.

ராஜேந்திர அகர்வால்
ராஜேந்திர அகர்வால், பன்வாரிலால் பாவ்ரி மற்றும் கிர்தாரி லால் பாவ்ரி ஆகிய மூன்று சகோதரர்கள். 1986 ஆம் ஆண்டில், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் மேக்லியோட்ஸ் பார்மாசூட்டிகல்ஸ் (Macleods pharmaceutical company) என்ற மருந்து நிறுவனத்தை நிறுவினார். இந்த நிறுவனம் காசநோய், ஆஸ்துமா, நீரிழிவு மற்றும் பிற நோய்களுக்கான மருந்துகளை (Medicine) தயாரிக்கிறது. கொரோனா காலத்தில், இந்த மருந்துகளின் பயன்பாடு அதிகரித்து, நிறுவனத்தின் நிகர மதிப்பு 9,559 கோடி ரூபாய் என்ற அளவை எட்டியது.

Also Read | இனி 30 நிமிடங்களில் வீட்டுக் கடன், கார் கடன்; இந்த வங்கி புதிய வசதியை அறிமுகம்

சீனாவின் (China) புதிய பில்லியனர்களில் மிக முக்கியமானவர் BioNtech-இன் இணை நிறுவனர் உர் சாஹின் (Ur Sahin) மற்றும் மாடர்னாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பன்செல். பயோனோடெக், பிஃபைசர் (Pfyzer) நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கியது. ஃபைசர் மற்றும் மாடர்னா (Moderna) இரண்டும் தடுப்பூசி உருவாக்கத்தில் வெற்றி பெற்றுள்ளன.   ஃபைசருடனான கூட்டுக்குப் பிறகு, BioNtech-இன் பங்கு விலை 160% அதிகரித்துள்ளது. மாடர்னாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் புன்செல் 30,147 கோடி ரூபாய் சொத்துக்களை வைத்துள்ளார்.

கனடாவின் பணக்கார பெண்ணாக மாறினார் யுவான் 

மற்றொரு சீன நிறுவனமான ஷென்ஜென் காங்டாய் உயிரியல் தயாரிப்புகளில் 24 சதவீத பங்குகளைக் கொண்ட யுவான் லிப்பிங்-இன் (Yuan Liping) சொத்துக்களின் மதிப்பு கணிசமான அதிகரித்தது.   ஜூன் மாதம் தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்ற பிறகு, Yuan Liping-இன் மொத்த சொத்து மதிப்பு 30,147 கோடி ரூபாயாக இருந்தது. இதன் காரணமாக, யுவான் கனடாவின் பணக்கார பெண்ணாகவும் ஆனார். 

Also Read | மூட்டு வலிக்கான ருசியான நிவாரணம், மஞ்சள் ஊறுகாயின் recipe!

கோடீஸ்வரர்களின் பட்டியலில் ஹு குன் (Hu Kun)

சீனாவின் கான்டெக் மருத்துவ அமைப்புகளின் தலைவரான ஹு குன் (Hu Kun) இந்த ஆண்டு கோடீஸ்வரரானார். அவரது சொத்து மதிப்பு 28,677 கோடி ரூபாய் ஆகும். இந்த நிறுவனம் மருத்துவமனை உபகரணங்களை தயாரிக்கிறது.  

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News