Health News: மூட்டு வலிக்கான ருசியான நிவாரணம், மஞ்சள் ஊறுகாயின் recipe!

ஆயுர்வேதத்தில் பல நூற்றாண்டுகளாக மூல மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் உள்ளன.

Written by - ZEE Bureau | Last Updated : Dec 29, 2020, 02:45 PM IST
  • வாதத்தால் ஏற்படும் மூட்டு வலிக்கு மஞ்சள் நல்ல நிவாரணம் அளிக்கிறது.
  • மஞ்சளில் வீக்கத்தைத் தடுக்கும் சிறப்பு குணமும் உள்ளது.
  • மஞ்சள் ஊறுகாய் 1 மாதத்திற்கு கெடாமல் இருக்கும்.
Health News: மூட்டு வலிக்கான ருசியான நிவாரணம், மஞ்சள் ஊறுகாயின் recipe!

புதுடெல்லி: நமது ஆயுர்வேதத்தில் மஞ்சள் மிகவும் பயனுள்ள மருந்தாக கருதப்படுகிறது. முழு ஆரோக்கியத்தையும் சிறப்பாக வைத்திருக்க இது செயல்படுகிறது. மஞ்சள் பொதுவாக சூடான பதார்த்தமாக பார்க்கப்படுகிறது. பச்சை மஞ்சள் ஆயுர்வேதத்தில் குளிர் காலங்களில் பயன்படுத்தப்படுகிறது.

ஆயுர்வேதத்தில் பல நூற்றாண்டுகளாக மூல மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் உள்ளன. இது மஞ்சளை (Turmeric) நம் வாழ்வின் இன்றியமையாத பகுதியாக ஆக்குகிறது. உணவில் சரியான அளவில் மஞ்சளை சேர்க்க அதன் ஊறுகாய் போடும் வழக்கம் உள்ளது. மஞ்சள் ஊறுகாய் செய்யும் முறையைப் பார்க்கலாம்:

மஞ்சள் ஊறுகாய்க்கான பொருட்கள்

1 கப் புதிய மஞ்சள் வேர்கள்

3 தேக்கரண்டி கடுகு எண்ணெய்

1 டீஸ்பூன் கருப்பு கடுகு

ஒரு சிட்டிகை அசாஃபோடிடா

1 டீஸ்பூன் ஊறுகாய் மசாலா தூள்

2 சிட்டிகை உப்பு

4 டீஸ்பூன் எலுமிச்சை சாறு

மஞ்சள் ஊறுகாய் செய்வது எப்படி

மஞ்சள் வேர் மற்றும் ஊறுகாய் மசாலா தூள் ஆகியவை பொதுவாக எந்த மளிகை கடையிலும் கிடைக்கும்.

முதலில் மஞ்சள் வேர்களை நன்கு கழுவி உலர வைக்கவும்.

பின்னர் அதை உரித்து நீண்ட துண்டுகளாக வெட்டவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி கடுகு சேர்த்து தாளிக்கவும். இது குளிர்ந்தவுடன் நறுக்கிய மஞ்சள் மீது ஊற்றவும்.

இப்போது இதில் ஊறுகாய் மசாலா தூள், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

அதன் பிறகு கண்ணாடியாலான ஒரு காற்று இறுக்கமான பாட்டிலில் ஊறுகாயை போட்டு அதை குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

ALSO READ: Health News: ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும் கொடை வள்ளல் இந்த கொடை மிளகாய்

தண்ணீர் படாமல் வைத்திருக்கவும்

இந்த மஞ்சள் ஊறுகாய் 1 மாதத்திற்கு புதியதாக கெடாமல் இருக்கும். ஆனால், ஒரு சொட்டு நீர் கூட அதில் கலக்கக்கூடாது. தண்ணீர் ஊறுகாயைக் கெடுத்துவிடும். சிறிய அளவு ஊறுகாயைத்தான் உணவுடன் சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மஞ்சளின் நன்மைகள்

மூல மஞ்சள் புற்றுநோயை (Cancer) எதிர்க்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக ஆண்களில் இது புரோஸ்டேட் புற்றுநோயின் புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியைத் தடுப்பதொடு அவற்றை நீக்குகிறது. இது தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சின் வெளிப்பாட்டினால் வரும் கட்டிகளிலிருந்தும் பாதுகாக்கிறது.

மஞ்சளில் வீக்கத்தைத் தடுக்கும் சிறப்பு குணமும் உள்ளது. இதன் பயன்பாடு கீழ்வாதம் உள்ள நோயாளிகளுக்கு மகத்தான நன்மைகளை வழங்குகிறது. இது உடலின் இயற்கையான வளர்ச்சி செல்களை அகற்றும் கிருமிகளை நீக்குகிறது. கீழ்வாதத்தில் ஏற்படும் மூட்டு வலிக்கு (Joint Pain) மஞ்சள் நல்ல நிவாரணம் அளிக்கிறது.

மஞ்சள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்

மஞ்சளில் லிபோபோலிசாக்கரைடு என்ற ஒரு அம்சம் இருப்பதையும் அதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) வலுப்படுவதையும் ஆராய்ச்சி நிரூபித்துள்ளது. இதனால் மஞ்சள் உடலில் உள்ள பாக்டீரியாக்களால் உருவாகும் சிக்கல்களைத் தடுக்கிறது. மஞ்சள் தேவையற்ற காய்ச்சல்களிலிருந்து உடலை பாதுகாக்கிறது. மேலும், மஞ்சள் பூஞ்சை தொற்றுகளிலிருந்து உடலைப் பாதுகாக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது.

குறிப்பு: இது பொதுவான தகவல்களைக் கொண்ட கட்டுரையாகும். உங்களுக்கு மஞ்சளுக்கான ஒவ்வாமை இருந்தால், நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனைக்கு பின்னரே மஞ்சளை எடுத்துக் கொள்ளுங்கள்.

ALSO READ: பாதம் வெடிப்பு நீங்க சில இயற்கை வழி டிப்ஸ்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News