Free LPG Cylinder: ரேஷன் கார்டு இருக்கா? இலவச கேஸ் சிலிண்டர் பெறுங்கள்

Free LPG Cylinder: ரேஷன் கார்டு மூலம், குறைந்த விலையில் மக்களுக்கு அரசால் ரேஷன் வழங்கப்படுகிறது. இது தவிர, இனி ரேஷன் கார்டில் இலவச எல்பிஜி சிலிண்டரையும் அரசு வழங்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 1, 2022, 12:25 PM IST
  • இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும்
  • ரேஷன் கார்டு இருந்தா போதும்
  • ரேஷன் கார்டு ஆன்லைன் சோதனை
Free LPG Cylinder: ரேஷன் கார்டு இருக்கா? இலவச கேஸ் சிலிண்டர் பெறுங்கள் title=

பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதே இந்த திட்டங்களின் நோக்கமாகும். அந்த வகையில், ரேஷன் கார்டு மூலம், மக்களுக்கு அரசு மூலம் ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தற்போது பணவீக்கத்தால் அவதிப்படும் பொதுமக்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஆண்டுதோறும் இலவச எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.  பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள சமையலறையின் வரவு செலவுத் திட்டத்தைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியான நபர்கள் ஒரு வருடத்தில் 3 கேஸ் சிலிண்டர்களை இலவசமாகப் பெறலாம்.

மூன்று இலவச எல்பிஜி சிலிண்டர்கள்
இந்த நிலையில் நீங்களும் அந்தியோதயா அட்டை பயனாளியாக இருந்தால் இந்த செய்தி உங்களை உற்சாக படுத்தும். அதன்படி அந்த்யோதயா அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மூன்று இலவச எல்பிஜி சிலிண்டர்கள் வழங்க உத்தரகாண்ட் அரசு முடிவு செய்துள்ளது. இலவச எல்பிஜி கேஸ் சிலிண்டர் திட்டத்துக்கான மொத்த சுமை ரூ.55 கோடியை மாநில அரசே ஏற்கும். இந்த முடிவால் லட்சக்கணக்கான அந்த்யோதயா அட்டைதாரர்கள் பயனடைவார்கள். இந்த திட்டம் உத்தரகண்ட் அரசு மூலம் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மலிவு விலை பெட்ரோல் விரைவில் சாத்தியம்; வெளியான முக்கிய தகவல்

இந்த முக்கிய நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்
இலவச எல்பிஜி கேஸ் சிலிண்டரைப் பெற, உத்தரகாண்ட் அரசு விதித்துள்ள சில நிபந்தனைகளை நிறைவேற்றுவது கட்டாயமாகும். ஒவ்வொரு ஆண்டும் மூன்று எல்பிஜி சிலிண்டர்களை இலவசமாகப் பெறுவதற்கான தகுதி பின்வருமாறு...

* பயனாளி உத்தரகண்ட் மாநிலத்தில் வசிப்பவராக இருப்பது கட்டாயமாகும்.
* தகுதியான பயனாளி அந்தியோதயா ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருக்க வேண்டும்.
* அந்தியோதயா ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் எரிவாயு இணைப்பு அட்டையுடன் லிங்க் செய்யப்பட வேண்டும்.

இலவச எல்பிஜி சிலிண்டர் பெறுவது எப்படி?
உத்தரகாண்ட் அரசால் நடத்தப்படும் திட்டத்தில் பயன்பெற விரும்பினால், ஆதார் அட்டையை அந்தியோதயா அட்டையுடன் இணைக்கப்பட வேண்டும். இந்த இரண்டும் இணைக்கப்படவில்லை என்றால், அரசின் இலவச கேஸ் சிலிண்டர் திட்டத்தில் இருந்து நீங்கள் நீக்கப்படலாம். மாநில அரசு, மாவட்ட வாரியாக அந்தியோதயா நுகர்வோர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, உள்ளுர் கேஸ் ஏஜென்சிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், அந்தியோதயா கார்டுதாரர்களின் தங்களின் ரேஷன் கார்டை, தங்களது கேஸ் இணைப்புடன் லிங்க் செய்ய வேண்டும்.

மேலும் படிக்க | IOCL M15 Petrol: இந்தியன் ஆயிலின் மெத்தனால் கலந்த மலிவு விலை பெட்ரோல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News