எந்த ரேஷன் கார்டுக்கு எவ்வளவு உணவுபொருட்கள் கிடைக்கும் தெரியுமா?

Types Of Ration Cards: பல வகையான ரேசன் கார்டுகள் அமலில் உள்ளன. அந்த ரேசன் கார்டுக்கு ஏற்ப உங்களுக்கு கிடைக்கும் இலவச மற்றும் மானிய விலை உணவு பொருட்கள் அளவு பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 5, 2022, 02:40 PM IST
  • யாரும் பசியுடன் இருக்ககூடாது - ஏழை மக்களுக்கு அரசு இலவச ரேஷன்.
  • வெவ்வேறு வகைகளுக்கு ஏற்ப வெவ்வேறு ரேஷன் கார்டுகள்.
  • சலுகைகளை பெறவும் விண்ணப்பிக்கவும் முக்கிய ஆவணமாக இருப்பது ரேஷன் அட்டை.
எந்த ரேஷன் கார்டுக்கு எவ்வளவு உணவுபொருட்கள் கிடைக்கும் தெரியுமா? title=

Types Of Ration Cards: ரேஷன் கார்டு என்பது அந்தந்த மாநில அரசுகளால் வழங்கப்படும் அதிகாரப்பூர்வ ஆவணமாகும். இந்த அட்டையின் உதவியுடன், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (NFSA), 2013ன் படி தகுதியுள்ள குடும்பங்கள் மானிய விலையில் உணவு தானியங்களை வாங்கலாம். முன்னதாக, மாநில அரசுகளின் கீழ், தகுதியான குடும்பங்கள் பொது விநியோக முறை (TPDS) மூலம் மானிய விலையில் உணவு தானியங்களை வாங்க முடியும். ஆனால் 2013 ஆம் ஆண்டில், மலிவு விலையில் மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு மற்றும் தரமான உணவு பொருட்களை வழங்குவதற்காக தேசிய உணவு மற்றும் பாதுகாப்பு சட்டம் (NFSA) நிறைவேற்றப் பட்டது. தற்போது, NFSA ஐ அமல்படுத்திய மாநில அரசுகள் அந்தந்த மாநிலங்களில் உள்ள தகுதியுள்ள குடும்பங்களுக்கு இரண்டு வகையான ரேஷன் கார்டுகளை வழங்குகின்றன. யாரும் பசியுடன் இருக்ககூடாது என்ற அடிப்படையில் ஏழை மக்களுக்கு அரசு இலவச ரேஷன் வழங்கி வருகிறது.

இந்தியாவில் பல்வேறு வகையான ரேஷன் கார்டுகள் உள்ளன. மாநில அரசு மக்களை வகைப்படுத்தி, வெவ்வேறு வகைகளுக்கு ஏற்ப வெவ்வேறு ரேஷன் கார்டுகளை வழங்குகிறது.

அந்தந்த மாநில அரசாங்கங்களால் வழங்கப்படும் ரேஷன் கார்டுகளை NFSA வழங்குகிறது. NFSA இன் கீழ் உள்ள பல்வேறு வகையான ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகிறது. அதுக்குறித்து பார்ப்போம்.

மேலும் படிக்க: Ration Card பயனாளிகளுக்கு நல்ல செய்தி: இனி பொருட்களின் எடையில் ஏமாற்ற முடியாது

அந்தியோதயா அன்னயோஜனா (AAY)
- மாநில அரசுகளால் அடையாளம் காணப்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு இந்த வகை ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது.

- நிலையான வருமானம் இல்லாத நபர்களுக்கு இந்த அட்டை வழங்கப்படுகிறது.

- வேலையில்லாதவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் இந்த பிரிவின் கீழ் வருகிறார்கள்.

- இந்த அட்டைதாரர்கள் ஒரு குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு 35 கிலோ உணவு தானியங்களைப் பெற தகுதியுடையவர்கள்.

- அரிசி ஒரு கிலோ ரூ.3 க்கும், ஒரு கிலோவு கோதுமை ரூ.2 க்கும் மானிய விலையில் கிடைக்கும். 

- அதேபோல பருப்பு வகையான தானியங்கள் ரூ.1 என்ற மானிய விலையில் பெறலாம்.

முன்னுரிமை உள்ள குடும்பம் (PHH)
- AAY இன் கீழ் வராத குடும்பங்கள் PHH இன் கீழ் வரும்.

- மாநில அரசின் வழிகாட்டுதல்களின்படி பொது விநியோக முறையின் (TPDS) கீழ் முன்னுரிமை குடும்பங்களை இந்த குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. 

- PHH அட்டைதாரர்கள் ஒரு நபருக்கு மாதத்திற்கு 5 கிலோ உணவு தானியங்களைப் பெறுகிறார்கள்.

- இந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி ஒரு கிலோ ரூ.3 க்கும், ஒரு கிலோவு கோதுமை ரூ.2 க்கும் மானிய விலையில் கிடைக்கும். 

- அதேபோல பருப்பு வகையான தானியங்கள் ரூ.1 என்ற மானிய விலையில் பெறலாம்.

மேலும் படிக்க: Ration Card: ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை சேர்ப்பது எப்படி, முழு செயல்முறை இதோ

TPDS திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் கார்டுகள்
NFSA அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, மாநில அரசுகள் பொது விநியோக முறையின் (TPDS) கீழ் ரேஷன் கார்டுகளை வழங்கியது. NFSA அமல்படுத்திய பிறகு, மாநிலங்கள் அதன் கீழ் ரேஷன் கார்டுகளை வழங்கத் தொடங்கின. NFSA முறையை இன்னும் அமல்படுத்தாத மாநில அரசுகள், TPDS இன் கீழ் வழங்கிய பழைய ரேஷன் கார்டுகள் முறையே இன்னும் பின்பற்றுகின்றன.

வறுமைக் கோட்டிற்கு கீழ் (BPL)
- பிபிஎல் கார்டு வைத்திருக்கும் குடும்பங்கள், மாநில அரசால் குறிப்பிடப்பட்ட வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள்.

- BPL குடும்பங்கள் பொருளாதாரச் செலவில் 50% வீதம் ஒரு குடும்பத்திற்கு மாதம் 10 கிலோ முதல் 20 கிலோ வரை உணவு தானியங்களைப் பெறுகின்றனர்.

- குறிப்பிட்ட அளவு கோதுமை, அரிசி, சர்க்கரை மற்றும் பிற பொருட்களுக்கான மானிய விலையானது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். 

- ஒவ்வொரு மாநில அரசும் ஒவ்வொரு அளவிற்கு வெவ்வேறு விகிதங்களை நிர்ணயிக்கிறது.

வறுமைக் கோட்டிற்கு மேல் (APL)
- வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு, இந்த குடும்ப அட்டையை மாநில அரசு வழங்குகிறது.

- ஏபிஎல் ரேசன் அட்டை மூலம், ஒரு குடும்பத்திற்கு 10 கிலோ முதல் 20 கிலோ வரை உணவு தானியங்களை பொருளாதார செலவில் 100% பெறுகின்றன.

- ஒவ்வொரு மாநில அரசும் அரிசி, கோதுமை, சர்க்கரை மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மானிய விலையில் சில்லறை விலையை நிர்ணயிக்கிறது.

மேலும் படிக்க: 15 நாட்களில் புதிய Ration Card பெறலாம்; என்னென்ன ஆவணங்கள் தேவை

அன்னபூர்ணா யோஜனா (AY)
- ஏழை மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு AY ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன.

- இந்த அட்டையின் கீழ் அட்டைதாரர்கள் மாதத்திற்கு 10 கிலோ உணவு தானியங்களைப் பெறுகிறார்கள்.

- இந்த திட்டத்தின் கீழ் வரும் முதியோர்களுக்கு அவர்கள் குறிப்பிட்டபடி மாநில அரசுகள் இந்த அட்டைகளை வழங்குகின்றன.

மத்திய, மாநில அரசின் பொது வினியோக திட்டத்தின் கீழ் உணவுப் பொருட்கள் பெற மட்டும் அல்லாது, இன்னும் பல சலுகைகளை பெறவும் விண்ணப்பிக்கவும் முக்கிய ஆவணமாக இருப்பது ரேஷன் அட்டை. 

தமிழகத்தில் வசிக்கும் அனைவரும் குடும்ப அட்டைக்கு விண்ணபிக்கலாம். விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தினர். தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தாரின் பெயர் வேறு எந்த குடும்ப அட்டையிலும் இருக்கக் கூடாது. தமிழக அரசின் 'ஸ்மார்ட் ரேசன் கார்டு’ வைத்திருப்பவர்கள் அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொருட்களை பெறுகின்றனர். 

மேலும் படிக்க: ரேஷன் கார்ட் இல்லாமலும் இலவசமாக ரேஷன் பொருட்களை பெறலாம்: இதோ வழிமுறை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News