2024 பிப்ரவரி மாதத்தில் GST வசூல் ரூ.1.68 லட்சம் கோடி... நிதி அமைச்சகம் தகவல்

GST Collections in Feb 2024: பிப்ரவரி 2024 காலகட்டத்தில் வசூலான மொத்த ஜிஎஸ்டி தொகை, 12.5 சதவீதம் அதிகரித்து, 1,68,337 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 1, 2024, 08:36 PM IST
 2024 பிப்ரவரி மாதத்தில் GST வசூல்  ரூ.1.68 லட்சம் கோடி... நிதி அமைச்சகம் தகவல் title=

Full Details Regarding GST Collections in Feb 2024: பிப்ரவரி 2024 காலகட்டத்தில் வசூலான மொத்த ஜிஎஸ்டி தொகை, சென்ற ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 12.5 சதவீதம் அதிகரித்து, 1,68,337 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், 2024 பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வருவாயின் நிகர ரீஃபண்ட் தொகை ரூ. 1.51 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் விட 13.6 சதவிகித வளர்ச்சியாகும்.

நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை

ஜிஎஸ்டி வசூல் (GST Collections) தொடர்பாக, நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் " 2024 பிப்ரவரி மாதத்தில், மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (GST) வருவாய் ரூ. 1,68,337 கோடியாக உள்ளது. 2023 ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும் போது, ஜிஎஸ்டி வருவாய் 12.5 சதவீதம் அதிகரித்துள்ளது. உள்நாட்டு பரிவர்த்தனைகள் மற்றும் பொருட்களின் இறக்குமதி அதிகரித்துள்ளதால் ஜிஎஸ்டி வசூல்  8.5 சதவீதம்  அதிகரித்துள்ளது” என்று  தெரிவித்துள்ளது. மேலும்,  2024  பிப்ரவரி மாத வசூலுடன், நடப்பு நிதியாண்டின் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.18.40 லட்சம் கோடியாக உள்ளது.  இது 2022-23 நிதியாண்டில் இதே காலகட்டத்தின் வசூலை விட 11.7 சதவீதம் அதிகமாகும்.

2024 பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வசூல் முழு விபரம்

1. மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (CGST): ரூ.31,785 கோடி

2. மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST): ரூ.39,615 கோடி

3. ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (IGST): இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு வசூலான ரூ.38,593 கோடி உட்பட ரூ.84,098 கோடி

4. செஸ் வரி: இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு வசூலான ரூ.984 கோடி உட்பட மொத்தம் ரூ.12,839 கோடி

5. 2023-24 நிதியாண்டிற்கான சராசரி மாத மொத்த வசூல் தொகை ரூ. 1.67 லட்சம் கோடி. முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்தில் வசூலிக்கப்பட்ட தொகை ரூ. 1.5 லட்சம் கோடி.

மேலும் படிக்க | பயணிகளின் கனிவான கவனத்திற்கு! ரயிலில் பயணிப்பவர்கள் எப்போது தூங்கக்கூடாது? தெரியுமா?

ஜிஎஸ்டி விதிகளில் மாற்றம்: 

ஜிஎஸ்டி தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் இன்று அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில், இனி ரூ.5 கோடிக்கு மேல் வருடாந்திர வருமானம் ஈட்டும் தொழில்கள், தங்களது அனைத்து B2B பரிவர்த்தனையின் (B2B Transactions) மின்னனு விலைப்பட்டியலை சேர்க்காமல் இணையப் பதிவு ரசீதை (E-way Bill) உருவாக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல், இந்த சரக்கு மற்றும் சேவை வரி விதிமுறைகளின் கீழ் ரூ.50,000 என்ற அளவிற்கும் அதிகமான மதிப்புள்ள சரக்குகளை மாநிலங்களுக்கு இடையே கொண்டு செல்வதற்கும் இ-வே பில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜிஎஸ்டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரி

ஜிஎஸ்டி சரக்கு மற்றும் சேவை வரி என்று அழைக்கப்படுகிறது. நாடு முழுவதும், ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை கடந்த 2017ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் இருக்கிறது. பல அடுக்கு நேரடி வரிவிதிப்பு முறைக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து தொழில்களுக்கும் ஒரே வகை இன்வாய்ஸை வழங்குவதே இந்த வரிவிதிப்பின் நோக்கம் ஆகும்.

மேலும் படிக்க | ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: டிஏ கணக்கீட்டு சூத்திரத்தில் மாற்றம், 0% ஆகும் அகவிலைப்படி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News