EPFO உறுப்பினர்களுக்கு ஜாக்பார்ட்! முழு PF வட்டி தொகையும் கிடைக்க வாய்ப்பு!

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை தொடர்ந்து நான்காவது முறையாக 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 5.9 சதவீதமாக உயர்த்தியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Nov 1, 2022, 08:13 AM IST
  • ஊழியர்களின் pf வட்டி விகிதம் உயர்வு.
  • தற்போது முழு pf வட்டி தொகையும் கிடைக்க வாய்ப்பு.
  • அரசு வெளியிட்ட அறிவிப்பால் மகிழ்ச்சியில் ஊழியர்கள்.
EPFO உறுப்பினர்களுக்கு ஜாக்பார்ட்! முழு PF வட்டி தொகையும் கிடைக்க வாய்ப்பு! title=

இபிஎஃப்ஓ 65 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டுள்ளது, இதன் உறுப்பினர்கள் அனைவரும் அவர்களின் பிஎஃப் தொகைக்கான வட்டி எப்போது தங்களது வங்கி கணக்கில் வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலையில், இந்த மாத இறுதிக்குள் பிஎஃப் தொகையின் முழு வட்டியும் உறுப்பினர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.  தீபாவளி பண்டிகைக்கு முன்னர் இந்த தொகையை பெறாதவர்கள் பண்டிகை முடிந்ததும் நிச்சயமாக பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.  கடந்த ஜூன் மாதம் அரசு பணியாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) டெபாசிட்டுகளுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு 8.1% குறைவான வட்டி விகிதத்தை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.  இபிஎஃப் வட்டி தொகை பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஊழியர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்றும் எந்தவொரு உறுப்பினர்களுக்கு வட்டித் தொகை இழப்பு ஏற்படாது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

மேலும் படிக்க | PM Kisan: பிரதமர் கிசான் நிதியின் 12வது தவணை பெற இதைச் செய்யுங்கள்

இதுகுறித்து நிதி அமைச்சகம் வெளியிட்ட ட்வீட்டில் எந்த உறுப்பினருக்கும் வட்டி இழப்பு இல்லை, அனைத்து இபிஎஃப் உறுப்பினர்களின் கணக்குகளிலும் வட்டி வரவு வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.  மார்ச் 2021-ல் மத்திய அறங்காவலர் குழு (சிபிடி) 2020-21 க்கான இபிஎஃப் டெபாசிட்டுகளுக்கு 8.5 சதவீத வட்டி விகிதத்தை வழங்க முடிவு செய்தது.  அதன்பிறகு, 2020-21 ஆம் ஆண்டிற்கான வட்டி வருமானத்தை 8.5 சதவீதமாக உறுப்பினர்களின் கணக்கில் வரவு வைக்குமாறு அலுவலகங்களுக்கு இபிஎஃப்ஓ ​​வழிகாட்டுதல்களை வழங்கியது.  ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை தொடர்ந்து நான்காவது முறையாக 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 5.9 சதவீதமாக உயர்த்தியுள்ளது, ரிசர்வ் வங்கியின் நிர்ணயக் குழு மொத்தம் 190 அடிப்படை புள்ளிகளை உயர்த்தியுள்ளது. 

பிஎஃப் இருப்பை சரிபார்க்க பின்வரும் வழிமுறைகளை பின்பற்றலாம்,

1) இணையதளம் மூலமாக பிஎஃப் இருப்பை சரிபார்த்தல் :

- epfindia.gov.in இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

- உங்கள் யூஏஎன் எண், கேப்ட்சா குறியீடு மற்றும் பாஸ்வேர்டை நிரப்பவும்.

- இ-பாஸ்புக்கில் கிளிக் செய்யவும்

- அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு ஒரு புதிய பக்கம் திறக்கும்.

- உறுப்பினர் ஐடியைத் திறக்கவும்

- இப்போது, ​​உங்கள் கணக்கில் மொத்த இபிஎஃப் இருப்பைக் காணலாம்

2) எஸ்எம்எஸ் மூலம் பிஎஃப் இருப்பை சரிபார்த்தல் :

- 7738299899 என்ற எண்ணுக்கு 'EPFOHO UAN' என்று எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

3) மிஸ்டு கால் மூலம் பிஎஃப் இருப்பை சரிபார்த்தல் :

- யூஏஎன் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.

4) UMANG ஆப் மூலம் பிஎஃப் இருப்பை சரிபார்த்தல் :

1) UMANG ஆப்பை திறக்கவும்.

2) 'இபிஎஃப்ஓ' என்பதைக் கிளிக் செய்யவும்.

3) 'பணியாளர் சென்ரிக் சேவைகள்' என்பதைக் கிளிக் செய்யவும்.

4) 'வியூ பாஸ்புக்' ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

5) உங்கள் யூஏஎன் எண் மற்றும் பாஸ்வேர்டை உள்ளிடவும்.

6) உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும்.

7) இப்போது உங்கள் இபிஎஃப் இருப்பைச் சரிபார்க்கலாம்.

மேலும் படிக்க | பொது வருங்கால வைப்பு நிதி விதியில் மத்திய அரசு செய்துள்ள அதிரடி மாற்றம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News