உங்கள் பிஎஃப் பங்களிப்பை 12% -க்கு மேல் அதிகரிப்பது எப்படி? விவரம் இதோ

EPFO Update: ஊழியர்களின் ஒப்புதலுக்குப் பிறகுதான் VPF ஆனது ஊழியர்களின் சம்பளத்தில் கழிக்கப்படும். இதன் மூலம், ஒரு ஊழியர் எந்த வரம்பும் இல்லாமல் EPF பங்களிப்பை எப்படி வேண்டுமானாலும் அதிகரிக்கலாம். மேலும் VPF இன் பலன்கள் EPF போலவே இருக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 26, 2024, 12:39 PM IST
  • உங்கள் EPF பங்களிப்பை 12%க்கு மேல் அதிகரிப்பது எப்படி?
  • VPFல் முதலீடு செய்வது எப்படி?
  • வரி விலக்கு மற்றும் நிதி பரிமாற்றம்.
உங்கள் பிஎஃப் பங்களிப்பை 12% -க்கு மேல் அதிகரிப்பது எப்படி? விவரம் இதோ title=

EPFO Update: சம்பளம் பெறும் அனைவரது மாத சம்பளத்திலிருந்தும் ஒரு பகுதி ஒவ்வொரு மாதமும் அவர்களின் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகின்றது. இந்த பிஎஃப் நிதி ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPFO) அமைப்பால் நிர்வகிக்கப்படுகின்றது. ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும் அதே அளவு தொகையை நிறுவனமும் தன் சார்பில் ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறது. இருப்பினும், சிறிய முயற்சியின் மூலம் இந்த பிஎஃப் தொகையை நான்கு மடங்காக உயர்த்த முடியும். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

நீண்ட கால முதலீட்டு இலக்குகளுக்கான சேமிப்பைக் சேர்ப்பதற்கு பிஎஃப் (PF) மிகவும் பிரபலமான வழியாகும். ஒரு ஊழியர் தனது அடிப்படை சம்பளம் (Basic Salary) மற்றும் அகவிலைப்படியில் (Dearness Allowance) 12 சதவீதத்தை பிஎஃப் இருப்புக்கு பங்களிக்கிறார். எடுத்துக்காட்டாக: ஒரு தனிநபரின் அடிப்படை சம்பளம் மற்றும் DA ரூ. 18,000 எனில் அவர்களின் பிஎஃப் பங்களிப்பு (PF Contribution) ரூ.18000 x 12/100= ரூ.2,160 ஆக இருக்கும்.

இருப்பினும், பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஒரு நெகிழ்வான வழிமுறையை வழங்குகின்றன. அவர்கள் PF இருப்புக்கு குறைந்த பட்ச தொகையை வழங்கினால், அவர்களின் சம்பள கட்டமைப்பை மாற்ற இது உதவுகிறது. இந்தக் கருவியைப் பயன்படுத்தி, பணியாளர்கள் தங்கள் பிஎஃப் பங்களிப்பை அதிகரிக்குமாறு பணியமர்த்துபவர்களிடம், அதாவது நிறுவனத்திடம் கோரலாம்.

இது கையில் வாங்கும் சம்பளத்தை ஓரளவிற்கு குறைக்கலாம். ஆனால் அதிகரித்த பிஎஃப் கொடுப்பனவுகளின் மூலம் ஊழியர் ஒரே நேரத்தில் வருமான வரியையும் குறைத்து அதிக பணத்தையும் சேமிக்கலாம். மேலும், ஒவ்வொரு ஆண்டு மதிப்பீட்டு சுழற்சிக்குப் பிறகும், கையில் வாங்கும் ஊதியம் அதிகரிக்கும் என்பதால், இதில் பெரிதாக பாதிப்பு எதுவும் இருக்காது. 

உங்கள் EPF பங்களிப்பை 12%க்கு மேல் அதிகரிப்பது எப்படி?

அதிக வட்டி விகிதங்களுக்கு (Interest Rate) உங்கள் EPF பங்களிப்பை அதிகரிக்க விரும்பினால், தன்னார்வ வருங்கால வைப்பு நிதி (Voluntary Provident Fund - VPF) மூலம் அதைச் செய்யலாம். ஆனால், இதை நேரடியாகச் செய்ய இயலாது.

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி! பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்

ஊழியர்களின் ஒப்புதலுக்குப் பிறகுதான் VPF ஆனது ஊழியர்களின் சம்பளத்தில் கழிக்கப்படும். இதன் மூலம், ஒரு ஊழியர் எந்த வரம்பும் இல்லாமல் EPF பங்களிப்பை எப்படி வேண்டுமானாலும் அதிகரிக்கலாம். மேலும் VPF இன் பலன்கள் EPF போலவே இருக்கும்.

VPF ஆண்டுக்கு 8.10 சதவீத வருமானத்தை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், வருமான வரிச் சட்டத்தின் (Income Tax Act) 80C பிரிவின் கீழ் மக்கள் வரிச் சலுகைகளைப் (Tax Benefits) பெறுகிறார்கள். முதிர்வுக்கு பிறகான வருமானத்தில் கூட வரி விதிக்கப்படாது.

இருப்பினும், ஒரு நபர் ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சத்திற்கு மேல் பிஎஃப் மற்றும் விபிஎஃப் ஆகியவற்றில் முதலீடு செய்தால், ஈபிஎஃப் (EPF) மீதான வருமானம் வரிக்கு உட்பட்டது.

VPFல் முதலீடு செய்வது எப்படி? (How to invest in VPF?)

VPF இல் முதலீடு செய்ய, உங்கள் HRக்கு தெரிவிக்க வேண்டும். அவர்களின் உதவியின் மூலம், EPF கணக்குடன் உங்கள் VPF கணக்கையும் திறக்கலாம். அதற்கு, நீங்கள் மாதாந்திர விலக்குகள், சதவீதங்கள் போன்ற விவரங்களுடன் ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும். VPF இன் லாக்-இன் காலம் ஐந்து ஆண்டுகள்.

வரி விலக்கு மற்றும் நிதி பரிமாற்றம்

VPF விதிகள் EPF போலவே இருக்கும். நீங்கள் உங்கள் நிறுவனத்தை மாற்றினால், VPF தொகையை உங்கள் புதிய நிறுவனத்திற்கு மாற்றலாம் மற்றும் இதற்கு வரி விதிக்கப்படாது. இதுவும் 80C இன் கீழ் வருகிறது. மேலும் இதில் ஒருவர் ஒரு வருடத்தில் ரூ.1.50 லட்சம் வரை வரிச் சலுகைகளைப் பெறலாம்.

மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு லேட்டஸ் டிஏ ஹைக் குஷியான அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News