Old Income Tax Regime Vs New: இரண்டுக்கும் உள்ள முக்கிய வித்தியாசங்கள் என்ன?

Old Income Tax Regime Vs New: புதிய வரி முறையில், பழைய வரி முறையின் கீழ் கிடைக்கும் பல முக்கிய அம்சங்கள் நீக்கப்பட்டன. இரண்டு முறைகளிலும் உள்ள முக்கிய வேறுபாடுகளை இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 2, 2022, 07:22 PM IST
  • புதிய வரி முறையில், அரசாங்கம் அதிக வரி ஸ்லேப்களையும் குறைந்த வரி விகிதங்களையும் சேர்த்தது.
  • இது பெரும்பாலான வரி செலுத்துவோரால் நீண்ட காலமாகக் கோரப்பட்டது.
  • எனினும், புதிய முறையில், பழைய வரி முறையின் கீழ் கிடைக்கும் அனைத்து கழிப்புகளும் விலக்குகளும் நீக்கப்பட்டன.
Old Income Tax Regime Vs New: இரண்டுக்கும் உள்ள முக்கிய வித்தியாசங்கள் என்ன? title=

பட்ஜெட் 2023: தனிநபர் வருமான வரி என்பது பட்ஜெட்டின் முக்கிய பகுதியாகும். 2020 ஆம் ஆண்டில், வரி செலுத்துவோருக்கான புதிய வரி முறையை அரசாங்கம் முன்மொழிந்தது. எனினும், இந்த புதிய வருமான வரி முறை கட்டாயமல்ல, விருப்பம் இருந்தால் இதை எடுத்துக்கொள்ளலாம். புதிய வரி முறையில், அரசாங்கம் அதிக வரி ஸ்லேப்களையும் குறைந்த வரி விகிதங்களையும் சேர்த்தது. இது பெரும்பாலான வரி செலுத்துவோரால் நீண்ட காலமாகக் கோரப்பட்டது. எனினும், புதிய முறையில், பழைய வரி முறையின் கீழ் கிடைக்கும் அனைத்து கழிப்புகளும் விலக்குகளும் நீக்கப்பட்டன. 

புதிய வரி விதிப்புமுறை

புதிய வரி முறையில், 15 லட்சம் ரூபாய் வரம்பில் விகிதங்கள் குறைக்கப்படுவதோடு, அதிக வரி ஸ்லேப்களும் உள்ளன. கூடுதலாக, பழைய வரி முறையில் வரி செலுத்துவோர் பயன்படுத்திய அனைத்து கழிப்புகளும் விலக்குகளும் புதிய முறையில் இல்லை. 

பழைய வரி முறை

பழைய வரி முறையில், வரிப் பொறுப்பைக் குறைக்க பல வழிகள் உள்ளன. வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) மற்றும் லீவ் டிராவல் அலவன்ஸ் (LTA) போன்ற விலக்குகள், கழிப்புகள் ஆகியவை, வரி செலுத்துவோர் பல்வேறு இடங்களில் முதலீடு செய்தோ, சேமிப்பு மூலமாகவோ அல்லது செலவு செய்வதன் மூலமோ தங்கள் வரித் தொகையை குறைக்க அனுமதிக்கின்றன.

டிடக்ஷனின் மிகப்பெரிய பிரிவு 80C பிரிவாகும். இதன் மூலம் வரி செலுத்துவோர் தங்களின் வரிக்குரிய வருமானத்தை ரூ. 1.5 லட்சம் குறைக்க முடியும். இது தவிர, உங்கள் கடன்களுக்கான வட்டி (வீடு மற்றும் கல்வி) முதல் சுகாதார காப்பீட்டிற்கு நீங்கள் செலுத்தும் பிரீமியங்கள் வரையிலான விஷயங்களில் வரி விலக்குகளைப் பெற உங்களை அனுமதிக்கும் பல பிரிவுகள் இதில் உள்ளன.

பழைய மற்றும் புதிய வரி ஸ்லேபுகளுக்கு இடையிலான ஒப்பீட்டை இங்கே காணலாம்: 

Photo here

மேலும் படிக்க | Bank Holidays: அலர்ட் மக்களே..டிசம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை 

விலக்குகள் மற்றும் கழிப்புகள்

டேக்ஸ் டிடக்ஷன் என்றால் என்ன?

வரி கழிப்பு என்பது வரி செலுத்துபவரின் வரிக்குட்பட்ட வருமானத்தைக் குறைப்பதற்காக செய்யப்படும் கிளெயிம்களைக் குறிக்கிறது. இது பல்வேறு முதலீடுகள் மற்றும் வரி செலுத்துபவரால் செய்யப்படும் செலவுகள் ஆகியவற்றிலிருந்து எழுகிறது. இதனால், வருமான வரி விலக்கு ஒட்டுமொத்த வரிப் பொறுப்பைக் குறைக்கிறது. இது ஒரு வகையான வரிச் சலுகையாகும், இது ஒருவருக்கு வரியைச் சேமிக்க உதவுகிறது.

வரி விலக்கு என்றால் என்ன?

வரி விலக்கு என்பது ஒருவரின் வருமானத்தில் சில அல்லது மொத்த பகுதிக்கும் நாட்டின் வரிவிதிப்பிலிருந்து விலக்கு பெறுவதற்கான உரிமையாகும். பெரும்பாலான வரி செலுத்துவோர் தங்கள் வரிக்கு உட்பட்ட வருமானத்தைக் குறைக்கப் பயன்படுத்தக்கூடிய பல விலக்குகளுக்குத் தகுதியுடையவர்களாக இருப்பார்கள். சில நபர்களும் நிறுவனங்களும் வரி செலுத்துவதிலிருந்து முழுமையாக விடுபட்டுள்ளனர்.

புதிய வரி விதிப்பு முறையில், பல கழிப்புகள் மற்றும் விலக்குகள் நீக்கப்பட்டன. நீங்கள் சம்பளம் பெறும் தனிநபர் அல்லது வணிகம் அல்லது தொழில் வல்லுநர் என்ற வகையின் கீழ் வந்தால், உங்களுக்கான விரிவான பட்டியலை கீழே காணலாம்.

- சம்பளம் பெறும் நபர்கள் 50,000 ரூபாய்க்கு நிலையான விலக்கு கோரலாம்.

- பயணப்படி (எல்டிஏ) 

- சம்பள அமைப்பு மற்றும் செலுத்தப்பட்ட வாடகையைப் பொறுத்து வீட்டு வாடகை கொடுப்பனவு 

- தொழில்முறை வரி அதிகபட்சம் ரூ. 2,500/-

- பிரிவு 80TTA மற்றும் 80TTB இன் கீழ் கிடைக்கும் விலக்குகள் (சேமிப்பு கணக்கு/டெபாசிட்களில் இருந்து வட்டி)

- அரசு ஊழியர்களுக்கு கேளிக்கை கொடுப்பனவில் வரி விலக்கு மற்றும் தொழில்முறை வரியில் பிடித்தம்

- சுயமாக ஆக்கிரமித்துள்ள அல்லது ஏதேனும் காலியான சொத்திற்கு வீட்டுக் கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டித் தொகை 24 அதிகபட்ச விலக்குகள் ரூ. 2 லட்சம்

- பிரிவு (ii) (a) பிரிவு 57ன் கீழ் குடும்ப ஓய்வூதியத்திலிருந்து ரூ.15,000 கழிக்க அனுமதிக்கப்படுகிறது

- பிரிவு 10(14) இன் கீழ் வழங்கப்படும் சிறப்பு கொடுப்பனவுகள் (இவற்றை தவிர):

- ஊனமுற்ற ஊழியருக்கு வழங்கப்படும் போக்குவரத்துக் கொடுப்பனவு

- போக்குவரத்து கொடுப்பனவு

- ஒரு பணியாளரின் சுற்றுப்பயணம் அல்லது இடமாற்றத்திற்கான பயணச் செலவைச் சந்திப்பதற்காக வழங்கப்படும் கொடுப்பனவுகள்

- தினசரி கொடுப்பனவு

- தேவைகள்

- வணிக உரிமையாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் பிரிவு 10AA இன் கீழ் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான விலக்குகளை இழப்பார்கள்.

- வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 32AD, 33AB, 33ABA, 35(1)(ii),35(1)(ii(a), 35(1)(iii), 35(2AA), 35AD மற்றும் 35CCC ஆகியவற்றின் கீழ் கழிப்புகள் .

- வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 32(ii) (a) இன் கீழ் கூடுதல் தேய்மானத்திற்கான விருப்பங்கள்

- வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரி-சேமிப்பு முதலீட்டு விலக்குகள், அத்தியாயம் VI-A 80C, 80D, 80E, 80CCC, 80CCD, 80D, 80DD, 80DDB, 80EE, 80EEA, 80EEB, 80G, 80G, 80GIACC , 80-IAC, 80-IB, 80-IBA, போன்றவை. இந்த வரி-சேமிப்பு முதலீட்டு விருப்பங்களில் ELSS, NPS, மருத்துவ காப்பீட்டு பிரீமியத்தில் PPF வரி விலக்கு, FDR, மாற்றுத் திறனாளிகள், குறிப்பிட்ட மருத்துவ சிகிச்சைகளுக்கான செலவுகள், கல்வி கடன் மீதான வட்டி மற்றும் பல அடங்கும்.

மேலும் படிக்க | அசத்தும் எல்ஐசி: ஒரே ஒருமுறை முதலீடு.. வாழ்நாள் முழுவதும் ரூ.50,000 ஓய்வூதியம்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News