ரூ.1,000 = ரூ.5 லட்சம்: PPF -இன் இந்த சூப்பர் சூத்திரத்தின் மூலம் இது சாத்தியமாகும், இதோ விவரம்

PPF: வட்டி, வரியில்லா முதலீடு, முதிர்ச்சியின் போது கிடைக்கும் தொகை என அனைத்து வகைகளிலும் இது ஒரு சிறந்த முதலீட்டு கருவியாக உள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 6, 2023, 07:45 AM IST
  • 15 ஆண்டுகளுக்குப் பிறகு முழுப் பணத்தையும் எடுக்கலாம்.
  • 5 வருடங்களாக முதலீட்டை அதிகரிக்கலாம்.
  • முதலீடு இல்லாமல் 5 ஆண்டுகளுக்கு PPF ஐ நீட்டிக்கலாம்.
ரூ.1,000 = ரூ.5 லட்சம்: PPF -இன் இந்த சூப்பர் சூத்திரத்தின் மூலம் இது சாத்தியமாகும், இதோ விவரம் title=

பொது வருங்கால வைப்பு நிதி: பொது வருங்கால வைப்பு நிதியின் சிறப்பு, வட்டி, மக்களிடையே அதற்கு உள்ள பிரபலம் ஆகியவற்றை பற்றி நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். இந்த திட்டத்தின் பலன்களை இந்திய குடிமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளலாம். இது மிகவும் பிரபலமான ஒரு திட்டமாக கருதப்படுகின்றது. இதில் கிடைக்கும் பலன்கள் ஏராளாம். பிபிஎஃப் (PPF) -இல் முதலீடு செய்வதன் நன்மைகளை பற்றி வங்கிகள் அல்லது தபால் நிலையங்களே வாடிக்கையாளர்களுக்கு பொதுவாக விளக்குகின்றன. ஆனால், முதலீட்டாளர் பெரும்பாலும் அறியாத பல விஷயங்களும் இதில் உள்ளன. 

வட்டி, வரியில்லா முதலீடு, முதிர்ச்சியின் போது கிடைக்கும் தொகை என அனைத்து வகைகளிலும் இது ஒரு சிறந்த முதலீட்டு கருவியாக உள்ளது. இதன் மெச்யூரிட்டி அதாவது முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். ஆனால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட பார்முலாவின் படி பார்த்தால், பணம் நம்ப முடியாத அளவில் அதிகரிக்கும். அந்த சூப்பர் சூத்திரத்தை பற்றி இங்கே காணலாம்.

முதலில் 3 சூழ்நிலைகளை புரிந்து கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், நீங்கள் திட்டம் முதிர்ச்சியடைந்த பிறகும் அதில் பணத்தை முதலீடு செய்தாலும் இல்லாவிட்டாலும், வட்டி தொடர்ந்து பெறப்படும். பிபிஎஃப் கணக்கின் (PPF Account) முதிர்ச்சியில் இதுபோன்ற மொத்தம் 3 ஆப்ஷன்கள் உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து முதலீட்டாளர் தங்கள் பணத்தை மேலும் அதிகரிக்கலாம்.

1. 15 ஆண்டுகளுக்குப் பிறகு முழுப் பணத்தையும் எடுக்கலாம்

PPF கணக்கு முதிர்ச்சியடையும் போது, ​​நீங்கள் அதில் டெபாசிட் செய்த தொகையையும், அதற்குப் பெற்ற வட்டியையும் திரும்பப் பெறலாம். இது முதல் ஆப்ஷன். கணக்கு மூடப்பட்டால், உங்கள் முழுப் பணமும் உங்கள் கணக்கிற்கு மாற்றப்படும். முதிர்ச்சியின் போது பெறப்படும் பணம் மற்றும் வட்டிக்கு முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்படும் என்பது சிறப்பு. மேலும், நீங்கள் எத்தனை ஆண்டுகளுக்கு முதலீடு செய்தீர்களோ அந்த கால அளவிற்கு எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை.

மேலும் படிக்க | தன்னார்வ ஓய்வூதிய சேமிப்பு திட்டம் NPS கணக்கை யார் துவங்கலாம்? தொழிலாளி To முதலாளி

2. 5 வருடங்களாக முதலீட்டை அதிகரிக்கலாம்

இரண்டாவது நன்மை அல்லது விருப்பம் என்னவென்றால், முதிர்ச்சியின் போது உங்கள் கணக்கை மேலும் நீட்டிக்கலாம். கணக்கு நீட்டிப்பு 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்படலாம். ஆனால், PPF கணக்கு முதிர்ச்சியடைவதற்கு 1 வருடத்திற்கு முன்பே நீங்கள் நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருப்பினும், நீட்டிப்பின் போது நீங்கள் பணத்தை எடுக்கலாம். இதில் முதிர்வுக்கு முன் பணத்தை திரும்பப் பெறுவதற்கான விதிகள் (Pre-Mature) பொருந்தாது.

3. முதலீடு இல்லாமல் 5 ஆண்டுகளுக்கு PPF ஐ நீட்டிக்கலாம்

PPF கணக்கின் மூன்றாவது பெரிய நன்மை என்னவென்றால், மேலே உள்ள இரண்டு விருப்பங்களை நீங்கள் தேர்வு செய்யாவிட்டாலும், உங்கள் கணக்கு முதிர்ச்சியடைந்த பிறகும் தொடர்ந்து செயல்படும். இதில் முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. முதிர்வு தானாகவே 5 ஆண்டுகள் நீட்டிக்கப்படும். இதில் நல்ல விஷயம் என்னவென்றால், முதலீட்டாளருக்கு தொடர்ந்து இதில் வட்டி கிடைக்கும். இங்கேயும் 5 ஆண்டு கால நீட்டிப்பு பொருந்தும்.

PPF கணக்கை எங்கு திறப்பது?

PPF கணக்கை அனைத்து அரசு அல்லது தனியார் வங்கியிலும் தொடங்கலாம். மேலும், உங்கள் நகரத்தின் அனைத்து தபால் நிலையங்களிலும் (Post Office) கணக்கைத் திறக்கலாம். குழந்தைகளுக்கும் கணக்கைத் திறக்கலாம். ஆனால் அவர்கள் சார்பாக, அவர்களுக்கு 18 வயது ஆகும் வரை பெற்றோர் கணக்கை பராமரிப்பார்கள். 

ரூ.1,000 ரூ.5.32 லட்சமாவது எப்படி? 

தற்போது பொது வருங்கால வைப்பு நிதியில் 7.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதத்தில் நீங்கள் 15 அல்லது 20 ஆண்டுகள் முதலீடு செய்தால், ஒரு பெரிய நிதியை உருவாக்கலாம்.

முதலீடு (மாதம் மாதம்) 15 ஆண்டுகளுக்கு பிறகு 20 ஆண்டுகளுக்கு பிறகு
1000 ரூபாய் 3.25 லட்சம் ரூபாய் 5.32 லட்சம் ரூபாய்
2000 ரூபாய் 6.5 லட்சம் ரூபாய் 10.65 லட்சம் ரூபாய்
3000 ரூபாய் 9.76 லட்சம் ரூபாய் 15.97 லட்சம் ரூபாய்
5000 ரூபாய் 16.27 லட்சம் ரூபாய் 26.63 லட்சம் ரூபாய்

மேலும் படிக்க | வீட்டில் எவ்வளவு பணத்தை வைத்திருக்க முடியும்? விதியை மீறினால் 137% அபராதம்!! உஷார்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News