தன்னார்வ ஓய்வூதிய சேமிப்பு திட்டம் NPS கணக்கை யார் துவங்கலாம்? தொழிலாளி To முதலாளி

NPS For All: 2004 ஆம் ஆண்டில் அறிமுகமான தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ஆரம்பத்தில் அரசு ஊழியர்களுக்கான திட்டமாக மட்டுமே இருந்தது. அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பான ஓய்வூதியம் வழங்கும் திட்டமான இது, 2009 ஆம் ஆண்டில், அனைத்து இந்தியர்களுக்கும் என விரிவுபடுத்தப்பட்டது.  

 

அரசாங்கம் மற்றும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) ஆகிய இரண்டாலும் நிர்வகிக்கப்படுகிறது. இது  ஓய்வூதிய நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட நீண்ட கால முதலீட்டுத் திட்டமாகும்.

1 /8

NPS என்பது அனைத்து குடிமக்களுக்கும் ஓய்வூதிய வருமான பாதுகாப்பை வழங்குவதையும் எதிர்காலத்திற்காக சேமிக்கும் பழக்கத்தை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு தன்னார்வ, நீண்ட கால ஓய்வூதிய சேமிப்பு திட்டமாகும்.

2 /8

இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் போதுமான ஓய்வூதிய வருமானத்தை வழங்கும் திட்டம் ஆகும்.

3 /8

இந்தியாவின் குடிமகன்கள் இந்தியாவில் வசித்தாலும் வசிக்காவிட்டாலும், சில நிபந்தனைகளுடன் இந்த திட்டத்தில் இணையலாம்.  

4 /8

18 முதல் 70 வயதுக்குள் இருக்கும் இந்திய குடிமகன் என்.பி.எஸ் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம், அவர்கள்  KYC விதிமுறைகள் அனைத்திற்கும் இணங்க வேண்டும்.

5 /8

சந்தாதாரர்கள் ஓய்வுபெறும் வயதை அடைந்து, NPSல் இருந்து வெளியேறும்போது, PFRDA-அங்கீகரிக்கப்பட்ட ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து ஆயுட்கால வருடாந்திரத்தை வாங்குவதன் மூலம், அவர்கள் திரட்டப்பட்ட ஓய்வூதியச் செல்வத்தின் ஒரு பகுதியை வழக்கமான வருமானமாக மாற்றிக்கொள்ளலாம். அவர்கள் விரும்பினால் மீதமுள்ள தொகையை மொத்தமாக திரும்பப் பெறலாம். 

6 /8

NPS க்கு பங்களிக்கும் பணியாளர்களுக்கு இரு மடங்கு வரிச் சலுகை கிடைக்கும்! அவர்கள் தங்கள் சொந்த பங்களிப்புகள் மற்றும் அவர்களின் முதலாளியால் செய்யப்பட்ட பங்களிப்புக்கும் வரி விலக்குகளை கோரலாம்;

7 /8

பணியாளரின் சொந்த பங்களிப்பு: பிரிவு 80 CCD(1) இன் கீழ் சம்பளத்தில் (அடிப்படை + DA) 10% வரை வரி விலக்கு பெற தகுதியுடையது. பிரிவு 80 CCE இன் கீழ் 1.50 லட்சம் வரி விலக்கு பெறலாம்  

8 /8

பணியளிப்பவரின் பங்களிப்பு: பிரிவு 80 CCD(2) இன் கீழ் பணி வழங்குநரால் அளிக்கப்படும் சம்பளத்தில் (அடிப்படை + DA) 10% வரை வரி விலக்கு பெற பணியாளர் தகுதியுடையவர். பிரிவு 80 CCE இன் கீழ் 1.50 லட்சம் வரி விலக்கு பெறலாம்.