ரிலையன்ஸ் ஏஜிஎம் 2023: இன்னும் சற்று நேரத்தில், நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் தொடங்கவிருக்கிறது. இந்தக் கூட்டத்தை வர்த்த உலகத்தினர் மிகுந்த எதிர்பார்ப்புடன் உன்னிப்பாக கவனிக்க தயாராகி வருகின்றனர். சில்லறை முதலீட்டாளர்கள், பரஸ்பர நிதிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், கடந்த ஏஜிஎம் முதல் ரிலையன்ஸ் நிறுவனத்தில் தங்கள் பங்குகளை அதிகரித்துள்ளன. ஆய்வாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் குறிப்பாக சில்லறை மற்றும் தொலைத்தொடர்பு துறையில் அறிவிப்புகளை எதிர்பார்க்கின்றனர்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (The Reliance Industries (RIL) ) 46வது ஆண்டு பொதுக் கூட்டம், இன்று மதியம் 2 மணிக்கு முகேஷ் அம்பானி தலைமையில் நடைபெறவிருக்கிறது. இதில், ரிலையன்ஸ் ரீடெய்ல் மற்றும் ஜியோவின் ஆரம்ப பொது சலுகைகள் (ஐபிஓக்கள்) தொடர்பாக பெரிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
RIL இன் டெலிகாம் மற்றும் ரீடெய்ல் பிரிவுகள் குறித்து ஆய்வாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் உற்சாகமாக உள்ளனர். சந்தை தொடங்கியதில் இருந்து பங்குகள் உயர்ந்து வருகின்றன. தரகு நிறுவனமான CSLA, 'வாங்கலாம்' என்ற மதிப்பீட்டைத் பராமரிக்கிறது.
மேலும் படிக்க | டார்க் வெப்பில் உங்கள் தகவல்கள் இருக்கிறதா? நொடியில் ஸ்கேன் செய்து கொடுக்கும் கூகுள்
ப்ளூம்பெர்க் நியூஸ் அம்பானியின் "ஆண்டுக்கு ஒருமுறை பேச்சு" வாரன் பஃபெட்டின் பெர்க்ஷயர் ஹாத்வே பங்குதாரர்களுக்கு வருடாந்திர கடிதங்களுடன் ஒப்பிட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால், டாப்-10 மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் மூன்றின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பீடு கடந்த வாரம் ரூ.82,082.91 கோடி குறைந்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சந்தை மதிப்பு ரூ.58,690.9 கோடி குறைந்து ரூ.16,71,073.78 கோடியாக உள்ளது. இருப்பினும், மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களின் தரவரிசையில் முதல் 10 இடங்களை தொடர்ந்து இருக்கிறது.
மேலும் படிக்க | BSNL-ன் இந்த 'சூப்பர்' திட்டம் ஜியோ-ஏர்டெலை மிரள வைத்தது..
குறிப்பிடத்தக்க வகையில், ரிலயன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள், அதன் வருடாந்திர பொதுக் கூட்டத்திற்கு முன்னதாக 0.5% உயர்ந்துள்ளது. ஆயில்-டு-டெலிகாம் குழுமம் கடந்த வாரம் 3.46% இழந்தது.
2019 ஆம் ஆண்டில் முகேஷ் அம்பானி சில்லறை வணிகம் 5 ஆண்டுகளில் ஐபிஓ-வழிக்கு செல்வதைக் கருத்தில் கொண்டதாகக் கூறி, நான்கு ஆண்டுகள் முடிவடைந்ததை அடுத்து, இந்த ஏ.ஜி.ஏம் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. கத்தாரின் இறையாண்மை செல்வ நிதி, கடந்த வாரம் இந்தியாவில் $1 பில்லியன் முதலீடு செய்ததை அடுத்து உற்சாகம் அதிகமாக உள்ளது.
ஜியோ 5ஜி கட்டணத் திட்டங்கள் உலகில் உள்ள எந்த தொலைத்தொடர்பு நிறுவனத்தையும் விட மிகக் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் என்று கடந்த ஆண்டு அம்பானி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில், 5ஜி திட்டத்திற்கான கட்டணங்கள் 4ஜி திட்டத்திற்கு சமமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
தற்போது தனிநபர்கள் வரம்பற்ற பலன்களுக்காக ரூ.400 முதல் ரூ.600 வரை செலவிடுகின்றனர். எனவே, 5ஜி திட்டங்களின் விலை இந்த வரம்பிற்குள் குறையும் வாய்ப்பு உள்ளது. எந்த நிறுவனம் சிறந்த கட்டணத் திட்டத்தை வழங்க முன்வருகிறது என்பதை இப்போது பார்க்க வேண்டும். ரிலையன்சின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் இதுபோன்ற பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று வாடிக்கையாளர்களும், ரிலயன்ஸ் நிறுவனத்தின் இன்றைய ஏஜிஎம் கூட்டத்தை எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ