BSNL-ன் இந்த 'சூப்பர்' திட்டம் ஜியோ-ஏர்டெலை மிரள வைத்தது..

பிஎஸ்என்எல் தனது ரூ.397 திட்டத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது. இந்த முறை வேலிடிட்டி மற்றும் இதர சலுகைகள் மாற்றப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 27, 2023, 09:05 PM IST
  • பிஎஸ்என்எல் ரூ 397 ப்ரீபெய்ட் திட்டம்.
  • 30 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
  • செல்லுபடியாகும் காலம் மொத்தம் 150 நாட்கள் ஆகும்.
BSNL-ன் இந்த 'சூப்பர்' திட்டம் ஜியோ-ஏர்டெலை மிரள வைத்தது..  title=

பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம்: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) பல கவர்ச்சிகரமான ப்ரீபெய்ட் திட்டங்களை தனது வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வந்துள்ளது, அவை குறைந்த செலவில் அதிக நன்மைகளை வழங்குகின்றன. இது போன்ற ஒரு திட்டத்தை பற்றி தான் இன்று நாம் காண உள்ளோம், இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 150 நாட்கள் ஆகும். இது புதிய திட்டம் அல்ல, ஆனால் இந்த திட்டம் தற்போது திருத்தப்பட்டுள்ளது. எனவே நீங்களும் பிஎஸ்என்எல் பயனராக இருந்து, நீண்ட செல்லுபடியாகும் திட்டத்தைத் தேடுகிறீர்கள் என்றால், இந்தத் திட்டத்தைப் பற்றி நீங்கள் கட்டாயம் அறிந்திருக்கொள்ள வேண்டும். நீங்கள் இரண்டாம் நிலை சிம்மைப் பயன்படுத்தினால், நீங்கள் செல்லுபடியாகும் நிலையில் இருக்க விரும்பினால், இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தலாம். எனவே இப்போது இந்தத் திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்...

பிஎஸ்என்எல் ரூ 397 ப்ரீபெய்ட் திட்டம் | BSNL Rs 397 prepaid Plan
மேலே கூறியது போல், பிஎஸ்என்எல் இன் ரூ.397 திட்டம் புதியதல்ல. ஆனால் அதன் பயன்களில் சில மாற்றங்கள் செய்துள்ளது பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ) நிறுவனம். இந்த திட்டம் தற்போது சற்று விலை உயர்ந்ததாக மாற்றப்பட்டுள்ளது. இந்த திட்டம் தற்போது 150 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. முன்னதாக இந்த திட்டம் 180 நாட்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது. இதில், வாடிக்கையாளர்கள் 60 நாட்களுக்கு 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றைப் பெற்றனர். இப்போது இந்த சலுகைகள் அனைத்தும் 30 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

மேலும் படிக்க | டார்க் வெப்பில் உங்கள் தகவல்கள் இருக்கிறதா? நொடியில் ஸ்கேன் செய்து கொடுக்கும் கூகுள்

என்ன மாற்றம் செய்யப்பட்டுள்ளது?
இந்த திட்டம் நீண்ட கால செல்லுபடியை விரும்புவோருக்கு மட்டுமே பொருந்து என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் மொத்தம் 150 நாட்கள் ஆகும். முதல் 30 நாட்களில் பலன்கள் முடிவடையும். அதன் பிறகு வேலிடிட்டி இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், இந்த திட்டம் தங்கள் சிம்மை செயலில் வைத்திருக்க விரும்பும் பயனர்களுக்கானது. இந்த நாட்களில் அவுட்கோயிங் இருக்கும். அதுமட்டுமல்லாமல், உங்களுக்கு ஒதுக்கப்பட்ட டேட்டாவை முற்றிலும் தீர்த்து விட்டாலும், 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த 4 கேபிபிஎஸ் டேட்டா 150 நாட்களுக்கும் வழங்கப்படும். இந்த திட்டம் இரண்டாம் நிலை சிம் பயனர்களுக்கு மிகவும் சிறப்பான தேர்வாக இருக்கும்.

நீங்கள் தனியார் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களிடமிருந்து ஒரு திட்டத்தைத் தேர்வுசெய்தால், செலவு மிக அதிகமாக இருக்கும். அதே நேரத்தில், அதன் விலை மிகவும் குறைவு. இந்த திட்டத்தில் உள்ள நல்ல விஷயம் என்னவென்றால், காலிங் அழைப்பு தேவை என்று நீங்கள் உணர்ந்தால், அதற்கேற்ப ரீசார்ஜ் செய்துக்கொள்ளலாம்.

ரீசார்ஜ் எப்படி செய்வது
பிஎஸ்என்எல்: https://portal2.bsnl.in/myportal/quickrecharge.do . அனைத்து ஆப்ரேட்டர்களுக்கும் அவர்களது சொந்த ஆப் களும் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி ரீசார்ஜ் செய்வது மிகவும் எளிதானது. Paytm, PhonePe, Google Pay அல்லது வேறு ஏதேனும் BHIM போன்றா UPI apps மூலமாகவும் ரீசார்ஜ் செய்யலாம்.

மேலும் படிக்க | வெறும் 2,550 ரூபாய்க்கு ஐபோன் 14 - இதைவிட தள்ளுபடி இனி கிடைக்காது மக்களே

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News