ஜியோவின் ஜித்து ஜில்லாடி திட்டம்... இந்தியாவின் மலிவான 5ஜி ஸ்மார்ட்போன் - முழு விவரம்!

இந்தியாவின் மலிவான 5ஜி ஸ்மார்போன்களை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து, இதுவரை கசிந்துள்ள தகவல்கள் அடிப்படையில் அறியப்படும் தகவல்களை இங்கு காணலாம்.

  • Aug 11, 2023, 23:29 PM IST

 

 


 
 

 

 

1 /7

இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.  ரிலையன்ஸ் இந்த மாத இறுதியில் வருடாந்திர ஏஜிஎம் நிகழ்வை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு போன்களை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.  

2 /7

ஜியோ அறிமுகப்படுத்த உள்ள ஸ்மார்ட்போன்களில் பெரிய திரை, சிறந்த கேமரா மற்றும் வலுவான பேட்டரியைப் பெறலாம் என தகவல்கள் கூறுகின்றன. இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் ஜியோ ஸ்மார்போன்களில் என்னென்னவற்றை எதிர்பார்க்கலாம் என்று இங்கு பார்ப்போம்.

3 /7

எங்கு தயாரிப்பு: ஜியோ நிறுவனம் ஆகஸ்ட் 28ஆம் தேதி வருடாந்திர AGM நிகழ்வை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு, ஜியோ ஃபோனைப் பற்றி பல கசிவுகள் மற்றும் வதந்திகள் வெளிவந்தன, ஆனாலும் தொடர்ந்து சில தகவல்கள் வெளியாவதை அடுத்து, BIS பட்டியலின் வெளிப்பாடு ஓரளவு இதுகுறித்து காணலாம். டிப்ஸ்டர் முகுல் சர்மா ட்வீட்டில் விவரங்களைப் பகிர்ந்துள்ளார். இந்த பட்டியலின்படி, ஜியோ தொலைபேசியின் தயாரிப்பு நொய்டாவில் இருக்கும் என தெரிகிறது.  

4 /7

இரண்டு மாடல்கள்: JBV161W1 மற்றும் JBV162W1 ஆகிய இரண்டு மாடல்களில் வேலை செய்கிறது. மொபைலின் விவரக்குறிப்புகள் மற்றும் விலை பற்றி எதுவும் வெளியிடப்படவில்லை.   

5 /7

மலிவான 5G மொபைல்:  ஜியோ போன் 5ஜியின் படம் கசிந்தது, இந்த போன் அவற்றில் ஒன்றாக இருக்கலாம். இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே இந்தியாவின் மலிவான 5ஜி போனாகவும் இருக்கலாம்.

6 /7

வெளியான தகவல்கள்: இந்த போன் HD+ தெளிவுத்திறனுடன் 6.5 இன்ச் டிஸ்ப்ளே பெறும். Qualcomm Snapdragon 480 SoC இல் இந்த போன் இயங்கும். இது 4GB RAM மற்றும் 32GB இன்டர்நல் ஸ்டோர்ஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

7 /7

கேமரா: ஃபோனில் இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது 13MP முதன்மை சென்சார் மற்றும் முன்பக்கத்தில் 8MP செல்ஃபி கேமராவைக் கொண்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.