மாத வருமானம் ₹20,500 ... மூத்த குடிமக்களுக்கான அசத்தல் திட்டம்..!

Senior Citizen Saving Scheme: மூத்த குடிமக்கள் முன்பை விட முதலீட்டில் அதிக லாபம் பெறுகிறார்கள். செப்டம்பர் மாதத்துடன் முடிவடையும் காலாண்டில் வட்டி விகிதம் 8.2 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 21, 2023, 02:27 PM IST
  • முதலீட்டு வரம்பு 15 லட்சத்தில் இருந்து 30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • தற்போது 20500 ரூபாய் பலன் கிடைக்கும்.
  • முதலீட்டு வரம்பை ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மாத வருமானம் ₹20,500 ... மூத்த குடிமக்களுக்கான அசத்தல் திட்டம்..! title=

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்: நீங்கள் உங்கள் பணத்தில் அதிக வருமானம் பெற விரும்பினால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வங்கி FD மற்றும் சிறு சேமிப்பு திட்டங்கள் ஆகிய இரண்டும் மிக குறைந்த ரிஸ்க் கொண்ட முதலீட்டு விருப்பங்கள். மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் கிடைக்கும் வட்டி விகிதம் தற்போது இது வரை இல்லாத அளவில் உள்ளது. முதலீட்டிற்கான இந்த விருப்பத்தை கருத்தில் கொள்வதன் மூலம் நீங்கள் அதிக பலன்களைப் பெறலாம். மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான வட்டி விகிதம் 8.2 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதலீட்டு வரம்பு 15 லட்சத்தில் இருந்து 30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது

கடந்த பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மூத்த குடிமக்களுக்கான புதிய வரி விதிப்பை அமல்படுத்துவது தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இதன் கீழ், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் (SCSS) முதலீட்டு வரம்பு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்த மாற்றத்தால், மூத்த குடிமக்கள் முன்பை விட முதலீட்டில் அதிக லாபம் பெறுகின்றனர். செப்டம்பர் மாதத்துடன் முடிவடையும் காலாண்டில் வட்டி விகிதம் 8.2 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. முந்தைய காலாண்டில் இது 8 சதவீதமாக இருந்தது. அதற்கு முன், அதன் வட்டி விகிதம் 7.6 சதவீதமாகவும், முதலீட்டு வரம்பு ரூ.15 லட்சமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்பு ஒவ்வொரு மாதமும் 9500 வருமானம்

அதிகபட்ச முதலீட்டு வரம்பை அதிகரிப்பதாலும், வட்டி விகிதத்தை அதிகரிப்பதாலும், மூத்த குடிமக்கள் ஒவ்வொரு மாதமும் வட்டி வடிவில் சம்பாதிக்கும் வருமானம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. முன்னதாக, திட்டத்தில் ரூ.15 லட்சத்தை முதலீடு செய்தால் 7.6 சதவீத வட்டியில் முதிர்வு காலத்தில் ரூ.20.70 லட்சம் பெறப்பட்டது. இது ஆண்டுக்கு 1.14 லட்சமாகவும், மாதந்தோறும் 9500 ரூபாயாகவும் இருந்தது.

தற்போது 20500 ரூபாய் பலன் கிடைக்கும்

நிதியமைச்சரின் முதலீட்டு வரம்பை ரூ.30 லட்சமாக உயர்த்தி, வட்டி விகிதத்தை 8.2 சதவீதமாக உயர்த்தினால், ஐந்தாண்டு முதிர்வு காலத்தில் ரூ.12.30 லட்சம் வட்டியுடன் மொத்தம் ரூ.42.30 லட்சம் பெறப்படும். அதன் ஆண்டு அடிப்படையில் கணக்கிட்டால், அது 2 லட்சத்து 46 ஆயிரம் ரூபாயாகவும், மாத அடிப்படையில் 20500 ரூபாயாகவும் இருக்கும். அதாவது, நிதியமைச்சரின் அறிவிப்புக்குப் பிறகு, மூத்த குடிமக்களுக்கு முந்தைய ரூ.9,500 உடன் ஒப்பிடும்போது இப்போது ரூ.20,500 கிடைக்கும்.

மேலும் படிக்க | LIC ஜாக்பாட் திட்டம்: ஒருமுறை மட்டுமே டெபாசிட்.... வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம்

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் 

'மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்' நாட்டின் வயதான குடிமக்களுக்காக அரசாங்கத்தால் நடத்தப்படுகிறது. இந்த திட்டத்தை தொடங்குவதன் நோக்கம் ஓய்வு பெற்றவர்களுக்கு மாதாந்திர வருமான பெற உதவுவதாகும். இத்திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்கள் ஒவ்வொரு மாதமும் வட்டி வடிவில் பணம் பெறுகிறார்கள்.

1.5 லட்சம் வரை வரிச்சலுகை

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில், வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒருமுறை அரசாங்கத்தால் மாற்றியமைக்கப்படுகிறது. இதில், கணவன்-மனைவி இருவரும் பரஸ்பரம் ஒரே கணக்கு அல்லது கூட்டுக் கணக்கைத் தொடங்கலாம். இதில் சிறப்பு என்னவென்றால், வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ், இதில் முதலீடு செய்தால் ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகையும் பெறலாம்.

மேலும் படிக்க | LIC Saral: அசத்தலான பென்ஷன் திட்டம்... ஒருமுறை முதலீடு எக்கச்சக்க பலன்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News