தீபாவளி போனஸ்! Tata Punch காம்பாக்ட் SUV காரை பரிசாக வழங்கும் ஃபார்மா கம்பெனி

Diwali Gift 50 Cars To Employees: தீபாவளியை கொண்டாட்டமாக மாற்றிய முதலாளி! போனசாக 50 கார்கள் பரிசு கொடுத்த இப்படி ஒரு முதலாளியை பார்த்ததுண்டா?  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 4, 2023, 11:57 PM IST
  • தீபாவளியை கொண்டாட்டமாக மாற்றிய முதலாளி
  • போனசாக 50 கார்கள்
  • தீபாவளி போனசாக கார் கிடைக்குமா?
தீபாவளி போனஸ்! Tata Punch காம்பாக்ட் SUV காரை பரிசாக வழங்கும் ஃபார்மா கம்பெனி title=

புதுடெல்லி: பண்டிகை காலம் தொடங்கிவிட்டது.  தீபாவளியை முன்னிட்டு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் பரிசுகளை வழங்குகின்றன. வழக்கமாய் பரிசும் போனசும் கொடுக்கும்போது நொந்துக் கொள்ளும் முதலாளிகளையே அதிகம் பார்க்கலாம். ஆனால், சில முதலாளிகள், நம்ப முடியாத போனஸ் கொடுத்து தலைப்புச் செய்திகளில் இடம் பெறுகிறார்கள்.

விலையுயர்ந்த பரிசுகளை வழங்கும் முதலாளிகளை, ஊழியர்கள் தெய்வமாக வணங்குகிறார்கள். அதேபோல, இந்த ஆண்டும் தீபாவளிக்கு முன்னதாக மருந்து நிறுவன உரிமையாளர் எம்.கே. பாட்டியா தனது ஊழியருக்கு கார்களை பரிசாக அளித்துள்ளார். மொத்தம் 12 பேருக்கு கார்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | ஊழியர்களுக்கு தீபாவளி சர்ப்ரைஸா? 44% ஊதிய ஏற்றம்.. காத்திருக்கும் 2 நல்ல செய்திகள்!!

மேலும் 38 கார்களை வழங்க இருப்பதாக, ஃபார்மா நிறுவனத்தின் உரிமையாளர் எம்.கே. பாட்டியா தெரிவித்துள்ளார். தனது பணியாளர்கள் தான் தனக்கு முக்கியமானவர்கள் என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஃபார்மா நிறுவனத்தின் உரிமையாளர் எம்.கே.பாட்டியா தனது தீபாவளி போனஸ் பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா?

“சில காலத்திற்கு முன்பு எங்கள் அணி வளரும்போது நீங்கள்தான் எங்கள் நட்சத்திரம் என்றேன். அவர்கள் நிறுவனத்தை வளர வைத்தார்கள். அவர்களை பிரபலங்களாக உணர வைக்க விரும்பினோம். நான் தொழில் தொடங்கியபோது டெல்லியில் சிறிய அலுவலகம் வைத்திருந்தேன். 2015ல் சண்டிகருக்கு வந்து சின்ன அலுவலகத்தை வாங்கி தொழிலில் மும்முரமாக இறங்கினேன். எங்கள் நிறுவனத்தை இந்த அளவு பெரியதாக வளர்த்த ஊழியர்கள் தானே நட்சதிரங்கள்? அவர்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தமாக கார் இருக்க வேண்டும் என்ற கனவு இருக்கும்... அவர்களுக்கு கார் பரிசு கொடுக்கிறேன்".

மேலும் படிக்க | 7th Pay Commission: ‘இந்த’ மாநில ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு காத்திருக்கிறது!

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் மருந்து நிறுவனத்தில் பணியாற்றும் இந்த 50 ஊழியர்களுக்கும் இது மறக்க முடியாத தீபாவளியாக இருக்கும். நிறுவனம் ஏற்கனவே 12 ஊழியர்களுக்கு Tata Punch காம்பாக்ட் SUVகளை வழங்கியுள்ளது, விரைவில் மேலும் 38 ஊழியர்கள் தீபாவளி பரிசாக கார்களைப் பெறுவார்கள். 2010 ஆம் ஆண்டு எம்.கே பாட்டியாவால் நிறுவப்பட்ட எம்.ஐ.டி.எஸ் ஹெல்த்கேர் மருந்துப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளது.

அலுவலகப் ப்யூனுக்கும் கார் கிடைத்தது
காரை பரிசாக பெற்ற12 ஊழியர்களும் ஷோரூமில் தங்கள் காருடன் மகிழ்ச்சியாக இருப்பதை வீடியோவில் காணலாம். எம்.கே. பாட்டியா ஊழியர்களுக்கு பரிசுகளை வழங்கி வருகிறார். வீடியோவைப் பார்த்ததும் முதலாளி பாட்டியாவைப் புகழாதவர்களே இல்லை என்று சொல்லலாம். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. காரை பரிசாகப் பெற்ற ஊழியர்களில் ஒரு ப்யூனும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அப்டேட்: தேசிய ஓய்வூதிய திட்டத்தில் வரும் லாபகரமான மாற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News