மின்சார வாகனங்களுக்காக 20 ஆயிரம் மெக்கானிக்களுக்கு பயிற்சி கொடுக்கும் HERO Electric

மின்சார வாகனங்களுக்கான தயாரிப்பை ஹீரோ நிறுவனம் மும்முரப்படுத்தியுள்ளது. 20,000 மெக்கானிக்குகளை தயார் செய்து தனது மின்சார வாகனங்களுக்கான அடித்தளத்தை வலுவாக அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது வாகன தயாரிப்பு நிறுவனம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 4, 2021, 08:50 PM IST
  • ஒரு லட்சம் மின்சார இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு
  • 4,000 மெக்கானிக்குகளுக்கு நிறுவனம் பயிற்சி அளித்துள்ளது
  • அது 20 ஆயிரமாக உயர்த்தப்படும்
மின்சார வாகனங்களுக்காக 20 ஆயிரம் மெக்கானிக்களுக்கு பயிற்சி கொடுக்கும் HERO Electric title=

Electric vehicles latest news: மின்சார வாகனங்களுக்கான தயாரிப்பை ஹீரோ நிறுவனம் மும்முரப்படுத்தியுள்ளது. 20,000 மெக்கானிக்குகளை தயார் செய்து தனது மின்சார வாகனங்களுக்கான அடித்தளத்தை வலுவாக அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது வாகன தயாரிப்பு நிறுவனம்.

20,000 மெக்கானிக்குகளை தயார் செய்து தனது மின்சார வாகனங்களுக்கான அடித்தளத்தை வலுவாக அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது வாகன தயாரிப்பு நிறுவனம் ஹீரோ எலக்ட்ரிக் . மின்சார வாகனங்கள் வாங்கலாம் என்ற நம்பிக்கையை நுகர்வோர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த இது உதவும் என்று நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நாட்டின் முன்னணி மின்சார இரு சக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ எலக்ட்ரிக்  (Hero Electric), அடுத்த மூன்று ஆண்டுகளில் சாலையோரத்தில் அமர்ந்திருக்கும் 20,000 மெக்கானிக்குகளுக்கு மின்சார வாகனங்களை சரி செய்வதற்கான பயிற்சிகளை வழங்கும். மின்சார வாகனங்கள் வாங்குவது குறித்து நுகர்வோர் மத்தியில் நம்பிக்கையை வளர்க்க இது உதவும் என்று நிறுவனம் நம்புகிறது.

Also Read | Kim Jong Unக்கு எதிராக US, Japan, Seoul 3 நாடுகளும் ஒன்றிணைந்த காரணம் என்ன?

இதுவரை நிறுவனம் சுமார் 1,500 சார்ஜிங் நிலையங்களை அமைத்துள்ளது. என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குருகிராமில் அமைந்துள்ள  Hero Electric நிறுவனம் கடந்த நிதியாண்டில் 53,000 மின்சார இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது தவிர, அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 20,000 சார்ஜிங் நிலையங்களை அமைக்கவும் நிறுவனம் விரும்புகிறது. 

நிறுவனம் ஏற்கனவே 4,000 மெக்கானிக்குகளுக்கு பயிற்சி அளித்துள்ளது. இது தொடர்பாக பேசிய ஹீரோ எலக்ட்ரிக் மேனேஜிங் டைரக்டர்  நவீன் முன்ஜால், நாட்டில் மின்சார வாகனத் துறை வேகமாக வளரத் தயாராக உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், நிறுவனம் பல்வேறு துறைகளிலும் தனது திறன்களை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

மின்சார வாகன விற்பனைக்காக நிறுவனத்தின் 600 விநியோகஸ்தர்கள் மற்றும் துணை விநியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் எலக்ரிக் வாகனங்களை விற்பனை செய்வதற்காக 600 விநியோகஸ்தர்கள் மற்றும் துணை விற்பனையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று முன்ஜால் கூறினார். 

Also Read | சவப்பெட்டியில் உயிருடன் புதைக்கப்பட்டு 50 மணி நேரம் இருந்த வீடியோவுக்கு 50 மில்லியன் views

சாலையோரங்களில் அமர்ந்து வாகனங்களை பழுது பார்க்கும்  4,000 மெக்கானிக்குகளுக்கு நிறுவனம் பயிற்சி அளித்துள்ளது என்று அவர் கூறினார். 2023 க்குள் அல்லது 2024 இன் தொடக்கத்தில், அதை 20,000 ஆக உயர்த்த உத்தேசித்துள்ளோம். இது தவிர, நிறுவனம் சார்ஜிங் கட்டமைப்பிலும் கவனம் செலுத்துகிறது என்று முன்ஜால் கூறினார்.

இதுவரை, நிறுவனம் 1,500 சார்ஜிங் நிலையங்களை நிறுவியுள்ளது. நிறுவனம் இதை 20,000 ஆக மாற்ற விரும்புகிறது. வாடிக்கையாளர்களுக்கு உறுதியளிக்கும் வகையில் நாங்கள் பல அடுக்கு அணுகுமுறையை பின்பற்றுகிறோம் என்று அவர் கூறினார்.

ஒரு லட்சம் மின்சார இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு

வணிகத் திட்டம் குறித்து முஞ்சல் கூறுகையில், நடப்பு நிதியாண்டில் ஒரு லட்சம் மின்சார இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும்போது இது கிட்டத்தட்ட இரு மடங்காகும். கடந்த நிதியாண்டில், ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் 53,000 மின்சார இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இப்போது மின்சார கார்கள் அல்லது வாகனங்களை உற்பத்தி செய்வதில் மும்முரம் காட்டுகின்றன.

Also Read | சரித்திரத்தில் April 04ஆம் தேதி முக்கிய சம்பவங்கள் சொல்லும் செய்திகள் என்ன?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News