வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டம் குறித்த கவலைகளின் பிண்ணனியில் வாஷிங்டன் (Washington), சியோல் மற்றும் டோக்கியோ ஆகியவை ஒரு "ஐக்கிய முன்னணியாக" இணைந்து செயல்படுவதாக பிடென் நிர்வாகம் வெள்ளிக்கிழமை கூறியது.
வடகொரியாவுக்கு எதிரான ஒரு முக்கியமான திட்டத்தை இறுதி செய்வதற்காக மூன்று நாடுகளும் இணைந்து முத்தரப்பு கலந்தாலோசனைகளை மேற்கொண்டு வருகின்றன.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் (National Security Advisor Jake Sullivan) ஜப்பான் மற்றும் தென் கொரிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் மேரிலாந்தின் அனாபொலிஸில் உள்ள கடற்படை அகாடமியில் வார இறுதியில் இந்த ஆலோசனைக் கூட்டத்தை மேற்கொண்டார்.
"இந்த மூன்று அதிகாரிகளும் வட கொரியாவின் அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்கள் குறித்த தங்கள் கவலைகளைப் பகிர்ந்து கொண்டனர், மேலும் ஒருங்கிணைந்த முத்தரப்பு ஒத்துழைப்பு மூலம் அணுசக்தி பிரச்சனைகளை நிர்வகிப்பதற்கும் தீர்ப்பதற்கும் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்" என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"வட கொரியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் தொடர்புடைய ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் தீர்மானங்களை முழுமையாக அமல்படுத்துவது, அணுஆயுத பெருக்கத்தைத் தடுப்பது மற்றும் கொரிய தீபகற்பத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநிறுத்துவதற்கு ஒத்துழைப்பதற்கு மூன்று நாடுகளும் ஒப்புக் கொண்டன" என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் பிற முக்கிய முன்னுரிமைகள் குறித்து பேசிய முத்தரப்பைச் சேர்ந்த அதிகாரிகளும், கோவிட் -19 மற்றும் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டங்கள் மற்றும் மியான்மரில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான வழிகள் குறித்தும் விவாதித்தனர்.
இதற்கிடையில், ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா (Yoshihide Suga) ஏப்ரல் 16 ம் தேதி வெள்ளை மாளிகைக்கு செல்கிறார். அமெரிக்காவிற்கு சென்று அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பிடனை சந்தித்த முதல் வெளிநாட்டு தலைவர் Yoshihide Suga என்பது குறிப்பிடத்தக்கது.
வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னுடன் நேரடி தொடர்பை மேற்கொள்ளும் ஜோ பிடனின் முன்னோடி முயற்சியில் இருந்து அவர் தற்போது விலகுவதை இந்த முத்தரப்பு கூட்டம் தெள்வுபடுத்துகிறது.
Also Read | April Fool: முட்டாள்கள் தினம்! ஏப்ரல் ஃபூல்; ஏமாந்த ஃபூல்- எப்படி உருவானது?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR