Lemon Juice: எடையை குறைப்பதோடு இதனால் இன்னும் எக்கச்சக்க நன்மைகள் ஏற்படும்

Lemon Juice Benefits: உடலை நீரேற்றமாக வைப்பது, உடல் எடையை குறைப்பது ஆகியவற்றை தவிர, எலுமிச்சை ஜூசால் இன்னும் பல பலன்கள் உள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 11, 2022, 01:26 PM IST
  • எலுமிச்சையில் வைட்டமின்-சி அதிகமாக உள்ளது.
  • இது உங்கள் சருமத்தின் சீர்செய்துகொள்ளும் வேகத்தை அதிகரிக்க உதவுகிறது.
  • செரிமானம் சரியாக இருக்க, சாப்பிட்ட உடனேயே அரை கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சையை பிழிந்து குடிக்கலாம்.
Lemon Juice: எடையை குறைப்பதோடு இதனால் இன்னும் எக்கச்சக்க நன்மைகள் ஏற்படும் title=

எலுமிச்சம்பழ ரசத்தின் நன்மைகள்: எலுமிச்சம்பழ ஜூஸ் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம், அதை நாம் உடலின் நீரேற்றம் மற்றும் உடலை குளிர்விப்பதுடன் மட்டுமே தொடர்புபடுத்தி பார்க்கிறோம். தினமும் ஒரு கிளாஸ் எலுமிச்சை ஜூஸ் குடித்தால் உடல் எடையை குறைக்கலாம் என நாம் பல முறை கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆனால், உடலை நீரேற்றமாக வைப்பது, உடல் எடையை குறைப்பது ஆகியவற்றை தவிர, எலுமிச்சை ஜூசால் இன்னும் பல பலன்கள் உள்ளன. தினமும் எலுமிச்சை ஜூஸ் கிடைப்பதால் கிடைக்கும் முழுமையான பலன்கள் மற்றும் அதை குடிப்பதற்கான சரியான வழிமுறை ஆகியவற்றை இந்த பதிவில் காணலாம். 

ஆண்டி ஏஜிங்:

எலுமிச்சையில் வைட்டமின்-சி அதிகமாக உள்ளது. இது உங்கள் சருமத்தின் சீர்செய்துகொள்ளும் வேகத்தை அதிகரிக்க உதவுகிறது. இதன் காரணமாக, சருமம் இறுக்கமாக இருப்பதோடு, முகம் பளபளப்பாகவும் இருக்கும்.

ஆரோக்கியமான கூந்தல்: எலுமிச்சையில் நீரேற்றம் மற்றும் அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் உள்ளன. எனவே, இது கூந்தலுக்கு உள்ளிருந்து ஊட்டமளிக்கிறது. அதன் வேர்களை வலுப்படுத்த வேலை செய்கிறது.

முகப்பரு இல்லாத சருமம்:

எலுமிச்சை ஜூசை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் முகப்பரு பிரச்சனை நீங்கும். உங்கள் சருமத்தில் முகப்பரு இருந்தால், தினமும் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூசை கண்டிப்பாக உட்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | மூச்சுப்பிடிப்பு குணமாக சித்த மருத்துவம் கூறும் எளிய கைவைத்தியம் 

செரிமானத்தை மேம்படுத்த உதவும்:

தினமும் எலுமிச்சை ஜூசை குடிப்பதால் செரிமானம் மேம்படும் மற்றும் அஜீரணம், வாயுத்தொல்லை, புளிப்பு ஏப்பம் போன்ற பிரச்சனைகள் விலகும். உணவு உண்டவுடன் வயிற்று வலி ஏற்பட்டாலும், ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சையை பிழிந்து உட்கொள்ளலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:

வைட்டமின்-சி மற்றும் சிட்ரிக் அமிலம் காரணமாக, எலுமிச்சை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது உங்கள் வாய் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. உதாரணமாக, ஈறுகளில் இருந்து இரத்தம் கசியும் பிரச்சனையோ, அல்லது தொண்டை புண் பிரச்சனையோ இருந்தால், அவை எலுமிச்சை மூலம் குணமாகும். எலுமிச்சை கலந்த வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளித்தால் போதும், இந்த இரண்டு பிரச்சனைகளும் சில நிமிடங்களில் மறைந்துவிடும்.

எலுமிச்சை சாறு குடிக்க சரியான நேரம்

- எலுமிச்சைப் பழ ஜூசை எந்த நேரத்தில் குடிக்க வேண்டும் என்பது உங்கள் தேவையைப் பொறுத்தது. இருப்பினும், ஒவ்வொரு சீசனிலும், மதிய உணவுக்கு ஒரு மணி நேரத்திற்குப் பிறகு நீங்கள் எலுமிச்சை ஜூசை உட்கொள்ளலாம்.

- உடல் எடையை குறைக்க நீங்கள் எலுமிச்சை தண்ணீரை குடிக்க விரும்பினால், காலையில் அதை உட்கொள்ளலாம். ஒரு கிளாஸ் தண்ணீரில் எலுமிச்சைப் பழத்தை பிழிந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். தண்ணீரை வெதுவெதுப்பாக வைத்திருப்பது நல்லது.

- செரிமானம் சரியாக இருக்க, சாப்பிட்ட உடனேயே அரை கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சையை பிழிந்து குடிக்கலாம். தண்ணீர் வெதுவெதுப்பாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Weight Loss Drinks: கோடையில் இந்த பானங்களை குடித்தால், சட்டுனு எடையை குறைக்கலாம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News