மூச்சுப்பிடிப்பு குணமாக சித்த மருத்துவம் கூறும் எளிய கைவைத்தியம்

 Home Remedies for Gas: மூச்சு பிடிப்புக்கான காரணங்களும் அதற்கான சித்த மருத்துவத் தீர்வும்...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 4, 2022, 08:47 AM IST
  • வாயுத்தொல்லையால் மூச்சுப்பிடிப்பா?
  • அஜீரணத்தால் மூச்சுப்பிடிப்பா? கவலை வேண்டாம்
  • சித்த மருத்துவம் சொல்லும் எளிய தீர்வு
மூச்சுப்பிடிப்பு குணமாக சித்த மருத்துவம் கூறும் எளிய கைவைத்தியம் title=

புதுடெல்லி: மூச்சுப்பிடிப்பு என்ற வார்த்தை நாம் அடிக்கடி கேட்பது. மூச்சுப் பிடிப்பு ஏற்பட்டால் அது மிகவும் கஷ்டத்தைக் கொடுக்கும். மூச்சுப்பிடிப்பால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்  மூச்சை நன்கு இழுத்து விட முடியாது.

கஷ்டப்பட்டு மூச்சை இழுத்து விட முயற்சி செய்தாலும் வலி அதிகரிக்கும். இதனால் மூச்சுப் பிடிப்பு உள்ளவர்கள் மெதுவாகவே மூச்சை விடவேண்டியிருக்கும். இதனால் இயல்பாக இருக்க முடியாது.

ஒருவருக்கு மூச்சி பிடிப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளன. சிலருக்கு எடை தூக்குவதால் மூச்சுப்பிடிப்பு ஏற்படும், வேறு சிலருக்கு மார்பு எலும்புகளில் உள்ள தசை நாறுகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் மூச்சுப்பிடிப்பு ஏற்படலாம்.

இவற்றைத் தவிர, சளித் தொல்லை, ஆஸ்துமா பிரச்சனைகளும் மூச்சுப்பிடிப்பை ஏற்படுத்தும். செரிமானம் தொடர்பான கோளாறும் நோயும் உள்ளவர்களுக்கும் மூச்சுப்பிடிப்பு ஏற்படலாம்.

மேலும் படிக்க | எடை இழப்புக்கான அடுப்பங்கரை மசாலாக்கள்

மூச்சுப்பிடிப்பு குணமாக சித்த மருத்துவம் கூறும் சில எளிய குறிப்புகள் உடனடி நிவாரணம் கொடுப்பவை மட்டுமல்ல செலவே இல்லாதவை. வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே இந்த சுலபமான வைத்தியத்தை, கை வைத்தியமாக செய்துக் கொள்ளலாம்

வாயு தொல்லையால் மூச்சு பிடிப்பு ஏற்பட்டால், கொத்தமல்லி, புதினா, பெருங்காயம், பனைவெல்லம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு நன்றாக இடித்து கலவையாக்கி சாப்பிட வேண்டும். இது வாயு தொல்லையை நீங்கும், வயிற்று வலி உடனடியாகக் குறையும், வாயு தொல்லையால் ஏற்படும் மூச்சுப்பிடிப்புக்கு இந்தக் கலவை உடனடி நிவாரணம் கொடுக்கும்.

பெருங்காயம், சுக்கு, சூடம், சாம்பிராணி ஆகிய நான்கையும் சம அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நான்கு பொருட்களியும் சாதம் வடித்த கஞ்சியில் போட்டு நன்கு கலக்க வேண்டும். கஞ்சி சூடாக இருக்க வேண்டியது அவசியம். இதை, வலி இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று வேலை தடவி வந்தால் மூச்சுப்பிடிப்பு குணமாகும். மூச்சுப் பிடிப்பு மீண்டும் வராமல் இருக்கும்

மேலும் படிக்க | பார்லியின் ஊட்டச்சத்து

ஆஸ்துமா மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பவர்கள், தினமும் காலையில் ஒரு கற்பூர வள்ளி இலையை நன்கு மென்று சாப்பிட வேண்டும். இதன் மூலம் நுரையீரல் நன்கு செயல்படும். மூச்சுப் பிடிப்பு நீங்கி நன்கு சுவாசிக்க முடியும்.

மூச்சுப்பிடிப்பால் உடல்வலியும் ஏற்படும். அதற்கு நல்ல மருந்து சாதம் வடித்த கஞ்சி தான். சாதம் வடித்த கஞ்சியில் அரை டீஸ்பூன் பசுநெய் விட்டு. சிறிது பொடித்த சீரகம், ஒரு பல் நசுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம். சிறிது கல் உப்பு  கலந்து குடிக்க வேண்டும். தினசரி இதனைக் குடித்துவந்தால், உடல் வலி நாளடைவில் சரியாகிவிடும்.

மேலும் படிக்க | தொந்தியையும் கொழுப்பையும் குறைக்கும் உணவுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQ

Trending News