ஆயுர்வேத பார்வையில் வேப்ப இலைகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. பல மருத்துவ குணங்கள் வேப்ப இலையில் காணப்படுவதால் பல பிரச்சனைகளில் இருந்து ஆரோக்கியத்தை காக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வேம்பு கசப்பாக இருக்கும். ஆனால் வேப்ப இலையை தினமும் வெறும் வயிற்றில் உட்கொண்டால், பல உடல்நலப் பிரச்சனைகளை சமாளிக்கலாம். தினமும் 5 முதல் 6 வேப்ப இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியத்திற்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை அறிக்கொள்வோம்.
வேப்ப இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
மேலும் படிக்க | Weight loss Tips: உடல் எடை குறைய தினசரி பழக்கத்தில் ‘சில’ சிறிய மாற்றங்களே போதும்!
1. இரத்த சோகையில் இருந்து நிவாரணம்
வேப்ப இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இரத்தப் பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள், வேப்பங்கொட்டையுடன் தங்கள் நாளைத் தொடங்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இரத்த சோகை பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இரத்தப் பற்றாக்குறையைப் போக்க வேப்ப இலைகள் உங்களுக்குப் பெரிதும் பயன்படும்.
2. தோல் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்
சருமத்தில் இயற்கையான பளபளப்பை அதிகரிக்க வேப்ப இலைகள் உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை கழுவி மென்று சாப்பிடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், சரும பிரச்சனைகளில் இருந்து விடுபடுவது மட்டுமின்றி, சருமத்திற்கு இயற்கையான பொலிவையும் கொண்டு வர முடியும்.
3. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
இன்றைய காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது மிகவும் அவசியம். அத்தகைய சூழ்நிலையில், வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை சாப்பிடுங்கள். இப்படி செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை மட்டும் அதிகரிக்கலாம். ஏனெனில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-பாக்டீரியல், அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு போன்ற பண்புகள் வேப்ப இலையில் காணப்படுவதால், உடலை பல தொற்றுகளில் இருந்து விலக்கி வைக்க முடியும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR