வந்துவிட்டது கோடை வெயில்! இந்த உணவுகளை கண்டிப்பா சாப்பிடாதீங்க!

தக்காளியில் லைகோபீன் போன்ற நன்மை பயக்கும் பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன, அவை நாள்பட்ட நோய்களை சரிசெய்வதில் உதவுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Mar 15, 2023, 05:18 PM IST
  • கோடைகாலத்தில் எலுமிச்சை சாறை விட புத்துணர்ச்சி தரக்கூடிய பானம் வேறெதுவுமில்லை.
  • தர்பூசணி பழத்தில் அதிகளவு நீர்சத்து இருப்பதால் இது கோடைக்கு ஏற்ற உணவு.
  • கோடைக்காலத்தில் அதிகளவு டீ அல்லது காபி குடிக்கக்கூடாது.
வந்துவிட்டது கோடை வெயில்! இந்த உணவுகளை கண்டிப்பா சாப்பிடாதீங்க! title=

கோடை காலம் என்றாலே பலரும் வெயிலின் தாக்கத்தை நினைத்து அச்சமடைவார்கள்.  இந்த காலநிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பலரும் சில உணவு வகைகள் மற்றும் பானங்களை எடுத்துக்கொள்கின்றனர்.  கோடைகாலத்தில் நாம் வயிற்றுக்கு ஏற்றுக்கொள்ளாத உணவுகளை சாப்பிடும்போது அது செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.  இப்போது கோடைகாலத்தில் என்னென்ன உணவு வகைகளை சாப்பிடலாம் மற்றும் எந்த உணவுகளை தவிர்க்கலாம் என்றும் பார்ப்போம்.

கோடை காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்:

1) வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்த தக்காளி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும், இது அதிகளவு நீர் சத்தை கொண்டுள்ளது.  தக்காளியில் லைகோபீன் போன்ற நன்மை பயக்கும் பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன, அவை நாள்பட்ட நோய்களை சரிசெய்வதில் உதவுகிறது.  அதிலும் இது குறிப்பாக புற்றுநோய்க்கு உதவுகிறது மற்றும் இது கோடைக்காலத்திற்கு ஏற்ற உணவாக உள்ளது.  

மேலும் படிக்க | 30 வயது ஆகிவிட்டதா? இதயத்திற்கு இந்த பாதிப்புகள் வரலாம்! ஜாக்கிரதை!

2) தர்பூசணி பழத்தில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நிறைய தண்ணீர் உள்ளது, இதை நீங்கள் பல வழிகளில் சாப்பிடலாம்.  பலருக்கும் பிடித்தமான கோடை உணவாக இருக்கும் இந்த தர்பூசணியில் லைகோபீன் உள்ளது, இது சூரியனின் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுறது.

3) கோடை காலத்தில் நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க ஒரு கிளாஸ் குளிர்ந்த எலுமிச்சை சாற்றை விட இனிமையானது எதுவுமில்லை.  இந்த சாறு உங்கள் உடலை ஹைட்ரேட்டாக வைத்திருக்க உதவும்.

4) அதிக நீர் உள்ளடக்கத்தை கொண்ட சுரைக்காயில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.  இதிலுள்ள அதிகப்படியான நீர் செரிமான மண்டலத்தை சீராக்குகிறது.

கோடை காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்:

1) கோடை நேரத்தில் அதிகளவ கப் டீ அல்லது காபி குடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும், இதிலுள்ள   காஃபின் மற்றும் சர்க்கரை உடலில் நீர்ச்சத்து குறைவை ஏற்படுத்துகிறது.  எனவே கோடையில் உடலை நீரேற்றமாக வைத்திருக்க எலுமிச்சை சாறு பருகுவது நல்லது.

2) பொதுவாக உலர் பழங்கள் ஆரோக்கியமானவை மற்றும் சத்தானவை தான் என்றாலும் கோடை காலத்தில் இவற்றை குறைவாக சாப்பிட வேண்டும்.  உலர் பழங்களை சாப்பிடுவதால் உடலில் வெப்பம் அதிகரிக்கிறது, எனவே இதனை தவிர்ப்பது நல்லது.

3) கோடையில் அதிகப்படியான இறைச்சி உண்பதும் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  குழம்பு மீன், சிவப்பு இறைச்சி, தந்தூரி சிக்கன் அல்லது கடல் உணவுகளை சாப்பிட விரும்பினால், இந்த நாட்களில் ஒரு மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே சாப்பிடுவது நல்லது.

4) கோடை காலத்தில் நீங்கள் அதிக கலோரி நிறைந்த மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.  இந்த உணவுகள் உங்கள் உடலையும், செரிமானத்தையும் பாதிக்கலாம்.

மேலும் படிக்க | ரசாயனம் இல்லாமல் பச்சைப் பப்பாளியை பழுக்க வைப்பது எப்படி? சூப்பரான டிப்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News