இது தெரிஞ்சா வெங்காயத்தோலை தூக்கி எறியமாட்டீங்க: இதுல இருக்கு சூப்பர் நன்மைகள்

Benefits of Onion Peel: வெங்காயத் தோலில் வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் பல ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. வெங்காயத் தோலை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 29, 2022, 07:30 PM IST
  • வைட்டமின் ஏ நிறைந்த வெங்காயத்தோல் தேநீர் கண்களுக்கு நல்லது.
  • ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த வெங்காயத்தோல் டீ, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • இது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
இது தெரிஞ்சா வெங்காயத்தோலை தூக்கி எறியமாட்டீங்க: இதுல இருக்கு சூப்பர் நன்மைகள்  title=

நமது இந்திய சமயலறையில் இன்றியமையாத ஒரு பொருளாக இருப்பது வெங்காயம். வெங்காயம் நமது பெரும்பாலான பதார்த்தங்களில் பயன்படுத்தப்படுகின்றது. எனினும், வெங்காயத்தை பற்றி பலருக்கு தெரியாத பல விஷயங்களும் உள்ளன.

பெரும்பாலான மக்கள் வெங்காயத் தோலை பயனற்றவை என்று தூக்கி எறிந்து விடுகிறார்கள். எனினும் நமக்கு ஏற்படும் பல பிரச்சனைகளை சமாளிக்க வெங்காயத் தோல் உதவும். 

வெங்காயத் தோலில் வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் பல ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. வெங்காயத் தோலை எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

வைட்டமின் ஏ நிறைந்த வெங்காயத்தோல் தேநீர் கண்களுக்கு நல்லது. இது சருமத்தின் அமைப்பையும் மென்மையையும் மேம்படுத்துகிறது. இதற்கு நீரை சுட வைக்கும்போது, அதனுடன் வெங்காயத்தோல், சர்க்கரை, டீத்தூள் சேர்த்து வடிகட்டிக் குடிக்கலாம். இதன் சுவை சற்று வித்தியாசமாக இருக்கும், ஆனால் இது உங்கள் கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் படிக்க | உடல் எடை வேகமாக குறைக்க இந்த மூலிகை தண்ணீரை குடிங்க 

வெங்காயத்தோலின் பிற நன்மைகள் இதோ:

- வெங்காயத்தோலிl வைட்டமின் சி நிறைந்துள்ளதால், பல வகையான நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இது உதவுகிறது.

- வெங்காயத்தோலை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி சூடாக குடிக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் இதய பிரச்சனை நீங்கும். 

- வெங்காயத் தோல்களில் வைட்டமின் ஈ ஏராளமாக உள்ளது. இது உங்கள் சருமம் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது.

- ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த வெங்காயத்தோல் டீ, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் இது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதற்கு வெங்காயத் தோலை தண்ணீரில் போட்டு வேகவைத்து, அதன் பின் வடிகட்டி குடிக்கலாம். இதை தினமும் உட்கொள்ளலாம். 

- இது தவிர, தலைமுடியைக் கழுவுவதற்கு முன், வெங்காயத் தோலை தண்ணீரில் போடவும். ஒரு மணி நேரம் கழித்து இந்த நீரில் தலையை அலசினால், முடி கொட்டும் பிரச்சனையும் தீரும்.

- வெங்காயத் தோல்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கொப்பளித்தாலோ அல்லது தேநீரில் கொதிக்கவைத்து குடித்தாலோ, அது தொண்டை புண் மற்றும் பிற பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. 

- வெங்காயத் தோல்களில் நார்ச்சத்து ஏராளமாகக் காணப்படுகிறது. இதனுடன், இதில் உள்ள ஃபிளாவனாய்டுகள், குர்செடின் மற்றும் பினோலிக் ஆகியவை உடலில் ஏற்படும் வீக்கம், புற்றுநோய் போன்ற பிரச்சினைகளைத் தடுக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.) 

மேலும் படிக்க | சிவகரந்தை இருக்கும்போது நரைமுடியிருந்தால் கவலை எதற்கு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News