நீரிழிவு நோயை கட்டுப்படுத்தணுமா? பிசியோதெரபி உங்களுக்கு கை கொடுக்கும்

Diabetes Cure: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் பிசியோதெரபி முக்கிய பங்கு வகிக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு பிசியோதெரபி எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதைப் இந்த பதிவில் புரிந்துகொள்வோம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 5, 2023, 06:29 PM IST
  • நீரிழிவு நோய் அடிப்படையில் இரண்டு வகைப்படும், டைப் 1 நீரிழிவு மற்றும் டைப் 2 நீரிழிவு.
  • டைப் 1 நீரிழிவு பொதுவாக மரபியல் காரணமாக ஏற்படுகிறது.
  • டைப் 2 நீரிழிவு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கத்தால் ஏற்படுகிறது.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தணுமா? பிசியோதெரபி உங்களுக்கு கை கொடுக்கும் title=

நீரிழிவு நோய் உலக மக்களுக்கு இடையில் நிலவும் பொதுவான நோய்களில் ஒன்றாகும். இது கட்டுப்படுத்தப்படாவிட்டால் மரணத்திற்கும் வழிவகுக்கக்கூடும். இது ஒரு வகையான வளர்சிதை மாற்றக் கோளாறாகும். இதன் காரணமாக உடலில் இன்சுலின் குறைவாகவோ அல்லது உற்பத்தியே ஆகாமலோ இருக்கும். அப்படி இருந்தால், உடலில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கிறது.  உணவுப் பழக்க வழக்கங்களில் ஏற்படும் குளறுபடிகளாலும், உடற்பயிற்சியின்மையாலும் நீரிழிவு நோய் இந்நாட்களில் வேகமாகப் பரவி வருகிறது. இன்று கிட்டத்தட்ட நால்வரில் ஒருவரில் இந்த நோய் காணப்படுகின்றது. இந்த நோய் படிப்படியாக உடலை உள்ளிருந்து அழிக்கிறது. இதன் காரணமாகத்தான் இந்த நோயை ஸ்லோ டெத் என்றும் சொல்வார்கள். 

நீரிழிவு நோய் அடிப்படையில் இரண்டு வகைப்படும். டைப் 1 நீரிழிவு மற்றும் டைப் 2 நீரிழிவு. டைப் 1 நீரிழிவு பொதுவாக மரபியல் காரணமாக ஏற்படுகிறது. அதே நேரத்தில் டைப் 2 நீரிழிவு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கத்தால் ஏற்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, நீரிழிவு நோய்க்கு மருந்து இல்லை. இருப்பினும், வாழ்க்கை முறை மாற்றங்களால் இதைக் கட்டுப்படுத்தலாம். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் பிசியோதெரபி முக்கிய பங்கு வகிக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு பிசியோதெரபி எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதைப் இந்த பதிவில் புரிந்துகொள்வோம்.

வழக்கமான பிசியோதெரபி டைப் 2 நீரிழிவு நோயாளிகள், குறிப்பாக முதியவர்கள் மற்றும் இணை நோய்கள் உள்ளவர்கள் மீது நேர்மறையான விளைவை ஏற்படுத்தும். பிசியோதெரபி நீரிழிவு நோயின் அறிகுறிகள் மோசமடைவதைத் தடுப்பது மட்டுமல்லாமல், ஏற்கனவே உள்ள அறிகுறிகளைக் கட்டுப்படுத்தவும் உதவும். 

மேலும் படிக்க | சர்க்கரை அளவை கட்டுப்படுத்தணுமா? இந்த இலையை இப்படி பயன்படுத்தி பாருங்க 

நீரிழிவு நோயாளிகளுக்கு பிசியோதெரபி எவ்வாறு உதவுகிறது என்பதை அறிந்து கொள்வோம்.

- நோயாளிகள் ஆரோக்கியமான எடையை அடைய உதவுகிறது
- பிசியோதெரபி இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது
- பிசியோதெரபி சோர்வைக் குறைக்கிறது
- பிசியோதெரபி தசைக்கூட்டு பிரச்சினைகளைக் குறைக்க உதவுகிறது

நீரிழிவு அபாயத்தில் இருந்து விலகி இருப்பது எப்படி

பிசியோதெரபி செய்துகொள்வது, சீரான உணவு பழக்கத்தைப் பின்பற்றுவது மற்றும் ஆரோக்கியமான எடையைப் பராமரிப்பது உள்ளிட்ட ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் நீரிழிவு நோய் உருவாகும் அபாயத்தைக் குறைக்கின்றன. எனினும், எந்த வித சிக்கலும் இல்லாமல் இருக்க, எப்போதும் தொழில்முறை பிசியோதெரபி நிபுணர்களின் சேவைகளைப் பெறுவது நல்லது. 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Diabetes Control Tips: இந்த ஒரு பழம் போதும், சுகர் ஏறவே ஏறாது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News