Diabetes Control Tips: இந்த ஒரு பழம் போதும், சுகர் ஏறவே ஏறாது

சர்க்கரை நோயாளிகள் கவனத்திற்கு… இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் இந்த பழத்தை தினமும் உண்ணுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 5, 2023, 05:26 PM IST
  • நீரிழிவு நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும்.
  • மருத்துவ ஆலோசனை பெறவும்.
  • தூக்கமின்மை இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
Diabetes Control Tips: இந்த ஒரு பழம் போதும், சுகர் ஏறவே ஏறாது title=

நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவைத் தேர்ந்தெடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை நோய் பெரும்பாலானோருக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. சர்க்கரை நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றில் மிக முக்கியமான ஒன்று உணவுப் பழக்கம். எந்த உணவை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக் கூடாது என்பதில் பலருக்கு குழப்பம் இருந்து வருகிறது. அதேபோல் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதய நோய் மற்றும் சிறுநீரக நோய் அபாயமும் உள்ளது. எனவே இந்த ரோஜா கலரில் இருக்கும் பழத்தை தொடர்ந்து உட்கொள்வது இரத்த குளுக்கோஸ் அளவை பராமரிக்க உதவுகிறது.  

ஆம், அந்த ரோஜா பழம் வேறு எதுவும் இல்லை அது டிராகன் பழம். மற்ற பழங்களை விட இது விலை உயர்ந்தது, இருப்பினும் இப்பழத்தின் மருத்துவ குணங்கள் ஏராளம். இதில் 60 கிராம் ஆரோக்கியமான கலோரிகள், 1.2 கிராம் புரதம், ஜீரோ கொழுப்பு, 13 கிராம் கார்போஹைட்ரேட், 3 கிராம் நார்ச்சத்து உள்ளது. இதனுடன், இதை உட்கொள்வதால் உடலுக்கு வைட்டமின் சி, இரும்பு மற்றும் மெக்னீசியம் கிடைக்கிறது.

மேலும் படிக்க | நுங்கு சாப்பிட்டா 'அது பெரிதாகுமா' தெரியாது... ஆனா இவ்வளவு நல்லது இருக்கா?

டிராகன் பழம் இரத்த சர்க்கரையை எவ்வாறு குறைக்கிறது?
டிராகன் பழம் என்பது ஒரு வகை கற்றாழை தாவரமாகும். ஆய்வுகளின்படி, இந்த பழம் நீரிழிவு எதிர்ப்பு விளைவைக் கொண்டுள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது. அதுமட்டுமின்றி இப்பழத்தை சாப்பிடுவதால் உடல் பருமனும் கட்டுக்குள் இருக்கும். இது ப்ரீடியாபயாட்டீஸ் மற்றும் டைப்-2 நீரிழிவு நோயாளிகளுக்கு பயனளிக்கிறது.

டிராகன் பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் பிற நன்மைகள்

கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்
டிராகன் பழத்தில் மிகக் குறைந்த அளவு கொழுப்பு உள்ளது, அதனால்தான் உடலில் கொலஸ்ட்ராலை இது அதிகரிக்காது, இது இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது. உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால், கண்டிப்பாக இந்த ஜூசி பழத்தை உங்கள் வழக்கமான உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இதய நோய்கள் நீங்கும்
டிராகன் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதை உணவில் சேர்த்துக் கொண்டால், கரோனரி தமனி நோய் மற்றும் இருதய நோய் அபாயமும் தவிர்க்கப்படும். உண்மையில், நார்ச்சத்து நிறைந்த உணவுகள் இதயத்திற்கு நல்லது, மேலும் இது இரத்த அழுத்தம் மற்றும் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்தே, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது, அத்தகைய சூழ்நிலையில், டிராகன் பழம் உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும். இந்த பழத்தில் வைட்டமின் சி, பொட்டாசியம், தாதுக்கள் அதிக அளவில் உள்ளது, இது உடலின் பல தேவைகளை பூர்த்தி செய்கிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Weight Loss: ஓவரா உடல் எடை ஏறுதா? முட்டைகோஸ் சாப்பிடுங்க, உடனே குறையும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News