உஷார் மக்களே!! இவைதான் நீரிழிவு நோயின் அபாய அறிகுறிகள்!!

Diabetes Symptoms: நீரிழிவு நோய்க்கான அறிகுறிகளை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால், சர்க்கரை நோயை எளிதில் வெல்லலாம். ஆனால் அதை அலட்சியப்படுத்தினால் சர்க்கரை நோய் நம் கட்டுப்பாட்டுக்கு அப்பால் போய்விடும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 20, 2023, 07:07 PM IST
  • இரத்த அழுத்தம் மற்றும் தோல் பிரச்சினைகள்.
  • அதிக பசி மற்றும் சோர்வான உணர்வு.
  • அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
உஷார் மக்களே!! இவைதான் நீரிழிவு நோயின் அபாய அறிகுறிகள்!!  title=

நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள்: நீரிழிவு நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த குணப்படுத்த முடியாத நோயின் பிடியில் உள்ளனர். நீரிழிவு நோயில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதன் காரணமாக இன்னும் பல கடுமையான நோய்களும் உடலை ஆட்கொள்கின்றன. ஆகையால், நீரிழிவு நோயாளிகள் எப்போதும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கண்காணிப்பது மிக முக்கியமாகும். 

சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது உடலில் அறிகுறிகள் தோன்றும். இந்த அறிகுறிகள் தோன்றினால், சர்க்கரை நோய் நம் உடலில் அழிவை ஏற்படுத்துகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அறிகுறிகளை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால், சர்க்கரை நோயை எளிதில் வெல்லலாம். ஆனால் அதை அலட்சியப்படுத்தினால் சர்க்கரை நோய் நம் கட்டுப்பாட்டுக்கு அப்பால் போய்விடும். ஆகையால் இந்த அறிகுறிகள் என்ன என்பதை அறிந்துகொள்வது மிக அவசியமாகும். இவற்றை கண்டவுடன் உடனடியாக அவற்றுக்கான சிகிச்சை அளிக்க வேண்டும். 

உயர் இரத்த சர்க்கரையின் அறிகுறிகள்

நீரிழிவு நோயில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கான அறிகுறிகள் உடலில் மெதுவாக தோன்றும். சில சந்தர்ப்பங்களில், இரத்த சர்க்கரை அளவு அதிகமாக உயரும் போது அறிகுறிகள் தோன்றும். அவற்றில் இந்த அறிகுறிகள் அடங்கும்:

- உடல் சோர்வாக இருப்பது
- மங்கலான பார்வை
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்
- பலவீனமாக உணர்வு
- திடீர் எடை இழப்பு
- தோல் தொற்று
- அதிக தாகம் மற்றும் வறண்ட வாய்

மேலும் படிக்க | ஆனந்த் அம்பானிபோல் உடல் எடை ஏறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? 

இரத்த அழுத்தம் மற்றும் தோல் பிரச்சினைகள்

பொதுவாக, உடலில் குளுக்கோஸ் மற்றும் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது, ​​உயர் இரத்த அழுத்தம் தொடங்குகிறது. ஏனெனில், இரத்தத்தில் குளுக்கோஸ் அதிகரிப்பதால் இரத்தம் உறைந்து, மாசுபட்ட இரத்தத்தின் ஓட்டம் குறைந்து, இதயத்தை சரியான நேரத்தில் சென்றடைய முடியாமல் போகிறது. இரத்தம் இதயத்தை அடைய உடல் கடினமாக உழைக்கிறது. இது உயர் இரத்த அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது. 

இது தவிர, சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது தோல் தொடர்பான பிரச்னைகளும் தலைதூக்குகின்றன. அதிகரித்த குளுக்கோஸ் அளவுகள் காரணமாக, வெள்ளை இரத்த அணுக்கள் செயலிழந்து, இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இது தொற்று, வீக்கம் மற்றும் பிற தோல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது மற்றும் இந்த பிரச்சனைகள் குணமடைய நீண்ட நேரம் எடுக்கும்.

அதிக பசி மற்றும் சோர்வான உணர்வு

உடல் சர்க்கரை மற்றும் குளுக்கோஸ் இரண்டும் நம் உடலுக்கு ஆற்றலை வழங்கும் பணியை செய்கின்றன. அவை நம் உடலின் எரிபொருள் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் அவற்றின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, இன்சுலின் உற்பத்தி குறைகிறது. அதனால் இந்த சர்க்கரையும் குளுக்கோஸும் உடலில் ஒரே இடத்தில் சிக்கிக்கொள்கின்றன. இதனால் உடலுக்கு எந்தப் பயனும் ஏற்படுவதில்லை. அத்தகைய சூழ்நிலையில், உடல் ஆற்றல் பற்றாக்குறையை உணர்கிறது. 

மேலும் உடல் இந்த ஆற்றலை நிரப்ப உங்கள் பசியை அதிகரிக்கிறது. அதனால்தான் சர்க்கரை நோயின் ஆரம்ப கட்டத்தில் திடீரென கடும் பசி ஏற்படும். இந்த குறைந்த ஆற்றலால் ஏற்படும் மற்றொரு பிரச்சனையாக, உடல் அதிக அளவு சோர்வடைகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், கடின உழைப்பு சாத்தியமில்லை. 

அகையால், மேல் கூறிய அறிகுறிகளை கண்டால் உடனடியாக சர்க்கரை அளவை கண்டறிந்து மருத்துவ ஆலோசனை பெற்று சிகிச்சை பெறுவது நல்லதாகும்.

மேலும் படிக்க | குளிர்காலத்தில் தினமும் பேரிட்சை பழம் அவசியம் சாப்பிடுங்கள்..! ஆயுசுக்கு உத்தரவாதம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News