Health Is Wealth: நீரிழிவு நோய் பாதிப்பு இன்று பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் நிலையில், அதற்காக உணவுக் கட்டுபபாடுகள் என சொல்லி பலரும் பயமுறுத்துகின்றனர். உண்மையில், நம் உடல், இன்சுலினையும் உற்பத்தி செய்யாதபோதோ அல்லது உருவாகும் இன்சுலினை சரியாகப் பயன்படுத்த முடியாதபோதோ, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் ஏற்படுகிறது.
கிளைசெமிக் இன்டெக்ஸ்
கிளைசெமிக் இன்டெக்ஸ் என்பது உணவுகளில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் இரத்த சர்க்கரை அளவை எவ்வளவு விரைவாக பாதிக்கலாம் என்பதைக் குறிக்கிறது. குறைந்த ஜிஐ மதிப்பெண் உள்ள உணவுகள், இரத்த சர்க்கரையை மெதுவாக அதிகரிக்கிறது, இது உணவுக்கு பிந்தைய மாற்றங்களை உடல் சிறப்பாக நிர்வகிக்க உதவுகிறது.
நீரிழிவு நோய்
நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உங்களுக்கு உதவ, நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயங்களில் ஒன்று, குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகளைத் தேர்ந்தெடுப்பதாகும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு பழங்களை சாப்பிட பயப்படுவது தவறான பழக்கம். நீரிழிவு நோயை நிர்வகிப்பது என்பது நீங்கள் விரும்பும் உணவுகளை விலக்குவது இல்லை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக கிளைசெமிக் குறியீட்டில் குறைந்த பழங்களை உண்பதை தவிர்க்க வேண்டியதில்லை.
மேலும் படிக்க | நுங்கு சாப்பிட்டா 'அது பெரிதாகுமா' தெரியாது... ஆனா இவ்வளவு நல்லது இருக்கா?
உங்கள் ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும் பழங்கள்
செர்ரிப் பழம்: கிளைசெமிக் குறியீட்டு எண் 20 மட்டுமே உள்ள செர்ரியில், ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பொட்டாசியம், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த செர்ரிகளள், நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் இதயத்திற்கு நன்மை பயக்கும் அம்சங்களைக் கொண்டுள்ளன.
ஆரஞ்சு: ஆரஞ்சுகளில் கிளைசெமிக் இண்டெக்ஸ் 40 உள்ளது. ஆரஞ்சு வைட்டமின் சி-ஐ அதிகரிப்பதைத் தவிர, நல்ல நார்ச்சத்து கொண்டு பழம் என்பதால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஆரஞ்சை சாப்பிடலாம்.
ஸ்ட்ராபெர்ரி: அனைத்து பெர்ரிகளும் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது, ஏனெனில் அவை மற்ற பழங்களை விட குறைவான சர்க்கரை மற்றும் நார்ச்சத்து அதிகம். ஸ்ட்ராபெர்ரியில் 41 ஜிஐ உள்ளது மற்றும் முழு ஆரஞ்சு பழத்தை விட அதிக வைட்டமின் சி உள்ளது.
ஆப்பிள்: கிளைசெமிக் குறியீட்டு எண் 39 கொண்ட ஆப்பிள்கள் நார்ச்சத்து அதிகம் கொண்டது.
பேரிக்காய்: பேரிக்காய்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளது என்பதோடு, உடல் எடையை குறைக்க உதவுகிறது. பேரிக்காயில், கிளைசமிக் குறியீடு 38 மட்டுமே உள்ளது தினசரி நமக்கு தேவையான 20%க்கும் அதிகமான நார்ச்சத்து கொண்ட பேரிக்காய், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.
மேலும் படிக்க | Weight Loss: இது போதும்..வெறும் 10 நாட்களில் உடல் எடையை குறைக்கலாம்
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ