வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடவே வேண்டாம்! காரணம் இதுதான்! ‘சிலருக்கு அறிவுரை’

Eating Garlic Empty Stomach:  சிலருக்கு, பூண்டை பச்சையாக உட்கொள்வது ஆபத்தானது. எந்தெந்த நபர்கள் பூண்டை பச்சையாக சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 25, 2023, 05:46 PM IST
  • வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடாதீங்க
  • சிலருக்கு மட்டும் ஸ்பெஷல் எச்சரிக்கை
  • சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற மூலிகை பூண்டு
வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடவே வேண்டாம்! காரணம் இதுதான்! ‘சிலருக்கு அறிவுரை’ title=

புதுடெல்லி: பூண்டு இந்திய சமையலறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. உணவே மருந்து என்ற வகையில், பூண்டு இந்திய உணவுகளில் பலவிதமான நன்மைகளைக் கொடுக்கும் என்றாலும், உணவின் சுவையை கூட்டவும் பயன்படுத்தப்படும் அருமருந்தாகும். உணவின் சுவையும் மணமும் அதிகரிக்கிறது. உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும் பூண்டை, சமைத்தும், பச்சையாகவும் சாப்பிடலாம்.

பூண்டில் வைட்டமின் பி1, கால்சியம், தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன. பல நன்மைகள் இருந்தபோதிலும், பூண்டில் சில தீமைகளும் உள்ளன. அதிலும், காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் சிலருக்கு மோசமான பாதிப்பு ஏற்படும்.

காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டால் என்ன பாதிப்பு?
பூண்டு ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக பச்சை பூண்டை தொடர்ந்து சாப்பிடுவது பல உடல்நல பிரச்சனைகளை குறைக்கிறது. ஆனால் சில சூழ்நிலைகளில் பச்சை பூண்டை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மேலும் படிக்க | தண்ணியே வேண்டாம்! மரம் வச்சா போதும், வருசத்துக்கு ரூ 20 லட்ச லாபம்

ஆம், நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் பச்சை பூண்டை சாப்பிட்டால், கொஞ்சம் கவனமாக இருங்கள். ஏனென்றால் அது உங்களுக்கு நன்மையை மட்டும்தான் தரும் என்று சொல்ல முடியாது. உண்மையில், பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவது சில பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிக்கலை அதிகப்படுத்திவிடுகிறது.

யாரெல்லாம் வெறும் வயிற்றில் பச்சைப் பூண்டை சாப்பிடக் கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்

வயிற்றுப்போக்கு பிரச்சனை
வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டிருந்தால், பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டாம். இது வயிற்றுப்போக்கு பிரச்சனையை அதிகரிக்கலாம். பூண்டில் சல்பர் போன்ற சேர்மங்கள் உள்ளன, இது வாயு உருவாவதற்கு காரணமாகிறது. அதனால்தான் வயிற்றுப்போக்கின் போது பூண்டை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.  
 
கல்லீரல் பிரச்சனை  
கல்லீரல் நமது உடலின் ஒரு முக்கிய அங்கமாகும். இரத்தத்தின் நச்சுத்தன்மையை குறைப்பதில் பூண்டின் பங்கு மிக முக்கியமானது. அதோடு, கொழுப்பு, வளர்சிதை மாற்றம், புரத வளர்சிதை மாற்றம் மற்றும் நம் உடலில் இருந்து அம்மோனியாவை அகற்றுதல் போன்ற பல செயல்பாடுகளுக்கு இது உதவியாக இருக்கும்.

ஆனால், ஆய்வுகளின்படி, பூண்டில் அல்லிசின் என்ற கலவை உள்ளது, இது அதிகப்படியான கல்லீரல் நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும். அத்தகைய சூழ்நிலையில், கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

மேலும் படிக்க | கோடையில் பேரிச்சம்பழம்: சாப்பிடலாமா கூடாதா? பக்க விளைவுகள் ஏற்படுமா?
 
இரத்தம் தொடர்பான பிரச்சனைகள்
பூண்டில் இயற்கையாகவே இரத்தத்தை உறைய வைக்கும் பொருள் உள்ளது. எனவே, நீங்கள் ஏற்கனவே வார்ஃபரின், ஆஸ்பிரின் போன்ற இரத்த அடர்த்தியை குறைக்கும் மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தால், பூண்டைத் தவிர்க்க வேண்டியது அவசியம் ஆகும். இல்லை என்றால், இரத்தப்போக்கு பிரச்சனை அதிகரிக்கும்.  

கர்ப்ப காலத்தில் பச்சை பூண்டு வேண்டவே வேண்டாம்  
கர்ப்பிணிப் பெண்கள் அல்லது பாலூட்டும் தாய்மார்கள் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது கர்ப்பிணிகளுக்கு பிரசவ வலியை துரிதப்படுத்தும். அதே நேரத்தில், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டை பச்சையாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது பாலின் சுவையை மாற்றும், இதன் காரணமாக குழந்தை பால் குடிக்க முரண்டு பிடிக்கக்கூடும்.
 
இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய்

இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் வெறும் வயிற்றில் பச்சைப் பூண்டை உட்கொள்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். உண்மையில், பூண்டில் இது போன்ற சில சேர்மங்கள் உள்ளன, இது GERD (Gastroesophageal Reflux Disease) இன் அசௌகரியத்தை அதிகரிக்கும்.  உங்களுக்கு வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு போன்ற புகார்கள் இருந்தால், அத்தகைய சூழ்நிலையில் பச்சை பூண்டை உட்கொள்ள வேண்டாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Home Remedies: குடல் பிரச்சனை இருந்தால் இதை மட்டும் சாப்பிடுங்கள் - உடனடி நிவாரணம்: எளிய வீட்டு மருத்துவம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News