பகீர் தகவல்! அளவிற்கு அதிகமான முட்டை நீரிழிவு நோய் அபாயத்தை அதிகரிக்கிறதா..!!

தினமும் முட்டை சாப்பிடுவது நல்லது என்று பொதுவாக அறிவுரை வழங்கப்படுகிறது. ஆனால், இந்த அறிவுரை நீரிழிவு நோயாளிக்கு பொருந்தாது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 14, 2022, 05:20 PM IST
  • நீரிழிவு நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை
  • முட்டைகளை கவனமாக சாப்பிடுங்கள்
  • உடல்நலத்திற்கு ஆபத்து ஏற்படலாம்.
பகீர் தகவல்! அளவிற்கு அதிகமான முட்டை நீரிழிவு நோய் அபாயத்தை அதிகரிக்கிறதா..!! title=

பெரும்பாலான மக்கள் காலை உணவில் சாப்பிட விரும்பும் ஒன்று முட்டை. ஆனால் ஒரு புதிய ஆய்வில், அதிக முட்டைகளை சாப்பிடுவது நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. தினமும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முட்டைகளை சாப்பிடுபவர்களுக்கு, நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம், 60 சதவிகிதம் அதிகரிக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன் தாக்கம் ஆண்களை விட பெண்களிடம் அதிகம் காணப்பட்டது.

முட்டை சாப்பிடுவது சர்க்கரை நோயை அதிகரிக்கும்

சீன மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் கத்தார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் இந்த ஆய்வை மேற்கொண்டது. 1991 முதல் 2009 வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறித்து குறிப்பிட்ட தொற்றுநோயியல் நிபுணரும் பொது சுகாதார நிபுணருமான மிங் லி, டைப் 2 நீரிழிவு இருப்பவர்களுக்கு உணவு முக்கிய பங்கு வகிக்கிறது, எனவே எந்த உணவுக் காரணிகள் இந்த நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது அவசியம் என்றார்.

மேலும் படிக்க | Neeri-KFT சிறுநீரக நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகுமா; மருத்துவர் கூறுவது என்ன..!!

தினசரி உணவு பழக்கத்தின் தாக்கம்

பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக அளவு அசைவ உணவுகள், தின்பண்டங்கள் மற்றும் அதிக கலோரிகள் கொண்ட உணவுகள் நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர் . அதிக அளவில் முட்டை சாப்பிடுவது நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது. சீனாவில் மேற்கொண்ட ஆய்வில், கடந்த பத்தாண்டுகளில் முட்டை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்டுள்ளது.

முட்டைகளை அளவுக்கு அதிகமாக உண்பதால்,  நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிப்பது எப்போதுமே விவாதத்திற்குரிய விஷயம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த ஆய்வில் முட்டையை நீண்ட காலத்திற்கு சாப்பிடுவது சர்க்கரை நோயை அதிகரிக்குமா என்பதை அறியும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முட்டைக்கும் நீரிழிவு நோய்க்கும் உள்ள தொடர்பு

ஒரு நாளைக்கு சராசரியாக 38 கிராமுக்கு மேல் முட்டை சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், 50 கிராமுக்கு மேல் முட்டைகளை உட்கொள்பவர்கள் அல்லது ஒரு நாளைக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முட்டைகளை சாப்பிடுபவர்களுக்கு, நீரிழிவு நோய்க்கான ஆபத்து 60 சதவீதம் அதிகரித்துள்ளது. 

இருப்பினும், முட்டை சாப்பிடுவதற்கும் நீரிழிவு நோய்க்கும் என்ன சம்பந்தம், நீரழிவு நோய் அபாயம் அதிகரிப்பதற்கு என்ன காரணம் குறித்து மேலும் ஆராய்ச்சி தேவை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சீனாவின் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து ஆய்வில் சுமார் 8545 பெரியவர்கள் சேர்க்கப்பட்டனர்.  ஆய்வில் சேர்க்கப்பட்ட மக்களின் சராசரி வயது 50 ஆண்டுகள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | முகத்தின் அழகை சீர்குலைக்கும் ‘கருவளையங்களை’ விரட்ட சில எளிய டிப்ஸ்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News