தனியா நீர்: தைராய்டு, எடை இழப்பு முதல் யூரிக் அமிலம் வரை... தரமான வீட்டு வைத்தியம்

Health Tips: கொத்தமல்லி இலைகள் மட்டுமல்லாமல் கொத்தமல்லி அதாவது தனியா தண்ணீரும் அதிகப்படியான நன்மைகளை அளிக்கின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 18, 2023, 03:02 PM IST
  • எடை இழப்புக்கு உதவும்.
  • தைராய்டு பிரச்சனையில் நன்மை பயக்கும்.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
தனியா நீர்: தைராய்டு, எடை இழப்பு முதல் யூரிக் அமிலம் வரை... தரமான வீட்டு வைத்தியம் title=

Health Tips: கொத்தமல்லி நமது ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும். இது உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அதை உட்கொள்வது பல கடுமையான நோய்களைத் தடுக்கிறது. கொத்தமல்லி விதைகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஆகியவை உள்ளன. ஆகையால், இதை உணவில் சேர்த்துக்கொள்வது பல உடல்நலப் பிரச்சினைகளை அகற்ற உதவுகிறது. இதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அதிகபட்ச நன்மைகளை பெறலாம். கொத்தமல்லி இலைகள் மட்டுமல்லாமல் கொத்தமல்லி அதாவது தனியா தண்ணீரும் அதிகப்படியான நன்மைகளை அளிக்கின்றது. 

தனியா நீரால் கிடைக்கும் நன்மைகள் (Benefits of Coriander Water):

கொத்தமல்லி தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், பல வித ஆரோக்கிய நன்மைகளுடம் சருமம் மற்றும் கூந்தல் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். அதுமட்டுமின்றி, இது நோயெதிர்ப்பு மண்டலத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. தனியா  தண்ணீர் தயாரிக்கும் முறை மற்றும் இந்த தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

எடை இழப்புக்கு உதவும் (Home Remedy For Weight Loss) 

தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொத்தமல்லி தண்ணீர் (Coriander Water) குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, இந்த தண்ணீரை குடிப்பதால், செரிமானம் மேம்படும், வளர்சிதை மாற்றமும் மேம்படும். கொத்தமல்லி நீர் உடலில் உள்ள நச்சுகளை நீக்கும் ஒரு டீடாக்ஸ் ட்ரிங்காக பயன்படுகிறது. ஆகையால் உடல் பருமனை குறைக்க, தினமும் காலையில் கொத்தமல்லி தண்ணீரை குடிக்கலாம்.

தைராய்டு பிரச்சனையில் நன்மை பயக்கும் (Home Remedy For Thyroid Problem) 

தைராய்டு குறைபாடு அல்லது அதிகப்படியான தைராய்டு என இரண்டு பிரச்சனைகளிலும் தனியா நீர் பயனுள்ளதாக கருதப்படுகிறது. கொத்தமல்லியில் உள்ள பல வகையான தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் தைராய்டு ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.

மேலும் படிக்க | முடி கொட்டுதா? தலைமுடி, நரை முடி பிரச்சனைகளை தீர்க்கும் ஆயுர்வேத மூலிகைகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் (Home Remedy For Immunity)

தனியா விதையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளன. மல்லி விதைகளை ஊறவைத்து அதன் தண்ணீரை குடிப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறுவதாகவும் சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி, இந்த தண்ணீரை குடிப்பதால், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களும் அகற்றப்படுகின்றன.

யூரிக் அமிலம் (Home Remedy For Uric Acid) 
 
இது தவிர மல்லி நீரை தொடர்ந்து குடித்து வந்தால், யூரிக் அமில பிரச்சனையும் குறையும். இந்த தண்ணீரைக் குடிப்பதன் மூலம், உடலில் இருந்து நச்சுகள் மற்றும் யூரிக் அமிலம் வெளியேற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கொத்தமல்லி இலை போல மல்லி நீரும் உடலுக்கு பல வழிகளில் நன்மை செய்கிறது. 

இரத்த சர்க்கரை குறைக்க (Home Remedy For Diabetes)  

மல்லி நீர் இரத்த சர்க்கரையை குறைப்பதில் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஆனால், இரத்தத்தில் சர்க்கரை அளவு ஏற்கனவே குறைவாக உள்ளவர்கள் இதை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதன் காரணமாக, அத்தகையவர்களின் இரத்த சர்க்கரை அளவு மேலும் குறையும் ஆபத்து அதிகரிக்கிறது.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த கருப்பு உளுந்து அற்புதம்! வாரத்தில 3 நாள் போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News