தினமும் காலையில் எலுமிச்சை சாறு குடிப்பதால் என்ன நன்மைகள்..

Lemon Water Benefits: காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்போம்

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 6, 2022, 03:04 PM IST
  • வயிற்றில் வெதுவெதுப்பான எலுமிச்சை சாறு குடிக்க வேண்டும்.
  • தேன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் கிடுகிடுவென உடல் எடை குறையும்.
  • உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்களின் தாக்கத்தில் இருந்து உடலைப் பாதுகாக்கும்.
தினமும் காலையில் எலுமிச்சை சாறு குடிப்பதால் என்ன நன்மைகள்.. title=

Lemon Water Benefits: எலுமிச்சை பழத்தில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதனால் தான் எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனைக்கு இயற்கை வழியை நாடும் போதும் அதில் நிச்சயம் எலுமிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தவகையில் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்போம்

பித்தநீரை சுரக்க உதவும்:
செரிமானத்திற்கு உதவும் பித்தநீரை சுரக்க எலுமிச்சை (Lemon) உதவுகிறது. இதில் கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் (Health Vitamins) அதிகம் இருப்பதால், அவை செரிமான பாதையில் உள்ள டாக்ஸின்களை எளிதில் வெளியேற்றும். காலையில் வெதுவெதுப்பான நீரில் செய்யப்பட்ட எலுமிச்சை சாறு குடிப்பதால் குடலியக்கம் சீராக இருக்கும். 

வெறும் வயிற்றில் தேன் சேர்த்து அருந்த வேண்டும்:
ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறினை பிழிந்து, அதில் தேன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். இதனால் எலுமிச்சையில் உள்ள பெக்டின் என்னும் நார்ச்சத்து நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். மேலும் இதனால் கிடுகிடுவென உடல் எடை குறையும்.

மேலும் படிக்க: ஃபிட்டாக இருக்கணுமா, காலையில் எழுந்ததும் இந்த பானங்களை குடிங்க

சருமம் சுத்தமாகவும், பொலிவோடும் இருக்கும்:
எலுமிச்சையானது இரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு மட்டுமின்றி, புதிய இரத்த செல்களின் உற்பத்திக்கும் உதவியாக உள்ளன. அதிலும் இந்த சாறிவில் தேன் சேர்த்து குடிப்பதால், அவை கொலாஜனை ஊக்குவித்து, சருமத்தை சுத்தமாகவும், பொலிவோடும் வைத்துக் கொள்ள உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:
எலுமிச்சையில் வைட்டமின் சி (Vitamin C) வளமாக நிறைந்திருப்பதால், அவற்றை வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து பருகும் போது, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்களின் தாக்கத்தில் இருந்து உடலைப் பாதுகாக்கும். 

உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற உதவும்:
எலுமிச்சையானது செரிமான பாதையில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்ற உதவுகிறது. அதே சமயம் அவை சிறுநீரின் அளவை அதிகரித்து, உடலில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் வழியாக வெளியேற்றி சிறுநீரகத்தை ஆரோக்கியமாக செயல்படவும் வைக்கிறது. அதுமட்டுமின்றி, எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் ஆசிட், கல்லீரலில் உள்ள நொதிகளின் செயல்பாட்டினை ஊக்குவிக்கிறது.

மேலும் படிக்க: வெறும் வயிற்றில் இந்த ஜூஸ் குடிங்க; உடல் எடை கிடுகிடுவென குறையும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News