வெறும் வயிற்றில் இந்த ஜூஸ் குடிங்க; உடல் எடை கிடுகிடுவென குறையும்

Weight loss By Amla Juice: காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால், உடலுக்கு நாள் முழுவதும் தேவையான ஊட்டச்சத்தையும், சக்தியும் கிடைக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 1, 2022, 09:35 AM IST
  • நெல்லிக்காயில் பல பண்புகள் உள்ளன
  • நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
  • உடல் எடை எடையும் கட்டுப்படுத்த உதவும்
வெறும் வயிற்றில் இந்த ஜூஸ் குடிங்க; உடல் எடை கிடுகிடுவென குறையும் title=

காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் பல நன்மைகள் உள்ளன. அதன்படி தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது உண்மைதான். நெல்லிக்காய் சாப்பிட்டால் ரத்தசோகை நீங்கும். நெல்லிக்காயில் உள்ள சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நெல்லிக்காய் போன்ற ஒரு சூப்பர்ஃபுட், ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாற்றை உட்கொள்வது உடலுக்கு பல நன்மைகளை வழங்க உதவும். குறிப்பாக இது நமது உடல் எடையை குறைக்க உதவும்.

நெல்லிக்காயில் இந்த பண்புகள் உள்ளன
பொதுவாக நெல்லிக்காய் வைட்டமின் சியின் சிறந்த ஆதாரமாகக் கருதப்படுகிறது. இது தவிர, வைட்டமின் ஏ, பி காம்ப்ளக்ஸ், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, கார்போஹைட்ரேட், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றின் பண்புகள் நெல்லிக்காயில் காணப்படுகின்றன. அதனால் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால், நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தி, பல நோய்த்தொற்றுகளிலிருந்து உடலைத் தடுக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் இது உதவுகிறது.

மேலும் படிக்க | வாழைப்பழத்தின் உதவியுடன் முடிக்கு கெரட்டின் கிரீம் தயாரிக்கலாம்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் பல நன்மைகள் உள்ளன. கொரோனா போன்ற கொடிய தொற்றுக்கு எதிராக பாதுகாப்பதில் நோய் எதிர்ப்பு சக்தி முக்கிய பங்கு வகிக்கிறது. உண்மையில், வலுவான நோய் எதிர்ப்பு சக்தி பல நோய்களுக்கு இரையாகாமல் உடலைப் பாதுகாக்க உதவுகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கலாம்.

உடல் எடை எடையும் கட்டுப்படுத்த உதவும்
உடல் ஸ்லிம்மாக இருக்க பலர் நெல்லிக்காய் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பார்கள். அதன்படி உங்களின் அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டுமானால், காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸை குடிக்கலாம். 

நெல்லிக்காய் ஜூஸ் செய்முறை
முதலில் 3 நெல்லி எடுத்து அதில் உள்ள விதைகளை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்னர், வெள்ளரியையும் அதே போல் நறுக்கிக்கொள்ளவும். இப்போது ஜூஸ் அடிக்கும் மிக்சி அல்லது வெறும் மிக்சி எடுத்து அதில் முதலில் நறுக்கிய நெல்லி மற்றும் வெள்ளரியை சேர்க்கவும். இவற்றோடு இஞ்சி மற்றும் பிழிந்த எலுமிச்சை சாறை சேர்க்கவும். பின்னர் இவற்றில் 1லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து ஒரு வடிகட்டியால் வடிகட்டவும். வடிகட்டிய சாற்றுடன் தேன் கலந்து பருகவும்.

(பொறூப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News