Heart Health: கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கும் இந்த 4 பருப்புகளை உணவில் அவசியம் சேர்க்கவும்

தவறான வாழ்க்கை முறையால், மனிதர்களின் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேரத் தொடங்குகிறது. இதன் காரணமாக அவர்கள் பல உடல் நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 10, 2022, 04:19 PM IST
Heart Health: கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கும்  இந்த 4 பருப்புகளை உணவில் அவசியம் சேர்க்கவும் title=

தவறான வாழ்க்கை முறையால், மனிதர்களின் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேரத் தொடங்குகிறது. இதன் காரணமாக அவர்கள் பல உடல் நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. அத்தகைய சூழ்நிலையில், கொழுப்பைக் கட்டுப்படுத்த சில பருப்பு வகைகள் பயனுள்ளதாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

பருப்பு வகைகள் நமது உடலுக்கு மிகவும் தேவைப்படும் முக்கியமான உணவுப் பொருட்களில் ஒன்றாகும். பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பருப்பு வகைகளில் காணப்படுகின்றன. இது உடலை பல பிரச்சனைகளில் இருந்து காப்பதோடு மட்டுமல்லாமல் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தவும் உதவும். 

அதிகரித்து வரும் கொலஸ்ட்ரால் அளவின் காரணமாக சிரமப்படுபவர்கள் அல்லது கெட்ட கொலஸ்ட்ராலை உடலில் இருந்து நீக்க விரும்புபவர்களுக்கு இந்த தகவல்கள் பெரும் உதவிகரமாக இருக்கும். உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை நீக்குவதற்கு பருப்பு வகைகள் உங்களுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | Health Alert: சாப்பிட்ட பின் ஒரு போதும் செய்யக் கூடாதவை

கெட்ட கொலஸ்ட்ராலை நீக்க  உங்கள் உணவில் கீழ்கண்ட பருப்புகளை சேர்த்துக்கொள்ளுங்கள்

1. உளுத்தம்பருப்பு

உளுத்தம்பருப்பு உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கி உடலுக்கு தேவையான இரும்பு, கால்சியம், பொட்டாசியம், புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற சத்துக்களை வழங்குகிறது. இதை சாப்பிடுவதன் மூலமும் எலும்புகளும் வலுவடையும்.

2. பாசிப்பயறு

கெட்ட கொலஸ்ட்ரால் பிரச்சனையால் சிரமப்படுபவர்கள், பாசிப் பயறு சேர்த்துக் கொள்ளலாம்.  உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கி உடலுக்குத் தேவையான சத்துக்களை கொடுக்கிறது. இது தவிர, பாசி பயறை உட்கொள்வதன் மூலம் இதயம் வலுவடையும்.

மேலும் படிக்க | மிதமிஞ்சிய உப்பு உயிருக்கே ஆபத்து; எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்

3. மசூர் பருப்பு

மசூர் பருப்பில் புரதம், மெக்னீசியம், கால்சியம், வைட்டமின் பி, ஃபோலேட், நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது கொழுப்பைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல் இரத்த சர்க்கரையையும் கட்டுப்படுத்துகிறது.

4. கொத்துக் கடலை

கொத்துக் கடலை பருப்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ராலை  குறைக்கலாம். அதே நேரத்தில், நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. இது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | நரை முடி கருமையாக, முடி பளபளக்க இதை செய்தால் போதும்: சூப்பர் டிப்ஸ் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News