வாழைப்பழத்தை பத்தி தெரியும்! ஆனா வாழைப்பழத்தோல் போக்கும் நோய்கள் எதுன்னு தெரியுமா?

Banana Peel And Skin: வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் அனைவருக்கும் தெரியும். ஆனால், வாழைப்பழத்தின் தோல்களும் ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் என்பது பொதுவாக பலருக்குத் தெரியாது. 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 28, 2023, 06:32 PM IST
  • வாழைப்பழத் தோலின் சத்துக்கள்
  • வாழைப்பழத் தோல் நன்மைகள்
  • சருமத்திற்கு வாழைப்பழத்தோல் எப்படி உதவும்?
வாழைப்பழத்தை பத்தி தெரியும்! ஆனா வாழைப்பழத்தோல் போக்கும் நோய்கள் எதுன்னு தெரியுமா? title=

சருமத்திற்கு வாழைப்பழத்தோல் பயன்கள்: சொரியாசிஸ் நோய் ஏற்பட்டால், அது தோலில் செதில் போன்ற புள்ளிகளை ஏற்படுத்துகிறது. தடிப்புத் தோல் அழற்சிக்கு வாழைப்பழத் தோல்களை பயன்படுத்தி குணமாகலாம். வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் அனைவருக்கும் தெரியும். ஆனால், வாழைப்பழத்தின் தோல்களும் ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் என்பது பொதுவாக பலருக்குத் தெரியாது. 

வாழைப்பழத்தின் சத்து
வாழைப்பழங்களில், பொட்டாசியம், வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. உண்பதற்கு ருசியான மற்றும் ஆரோக்கியமான பழங்களின் தோல் பொதுவாக வீணாக்கப்படுகிறது. நாம் குப்பையில் போடும் தோலை சாப்பிட்டே உயிர் வாழும் உயிரினங்களும் உண்டு. எந்தவொரு பொருளும் ஏதாவது ஒரு உயிரினத்திற்கு உணவாகிறது என்றால், அதில் கண்டிப்பாக ஊட்டச்சத்து இருக்கும் என்பது அடிப்படையான உண்மை ஆகும். ஆனால், வாழைப்பழத் தோல் பல நன்மைகளை வழங்குகிறது என்றும், அது நோயை குணப்படுத்தும் என்பதும் யாரும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது. 

வாழைப்பழத் தோல்களில் உள்ள சத்துக்கள்

வாழைப்பழத் தோல் என்பது, வாழைப்பழத்தைப் போலவே ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வாழைப்பழத் தோல்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், கரோட்டினாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் ஆகியவை அடங்கியுள்ளன. இவை அனைத்தும், அமது உடல் மற்றும் தோலில் இருந்து தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்ற உதவும். இது தடிப்புத் தோல் அழற்சி எனப்படும் தோல் நிலையையும் சீர் செய்யும்.  

மேலும் படிக்க | வேகமா உடல் எடை குறையணுமா? இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க

சொரியாசிஸ் 
சொரியாசிஸ் என்பது ஒரு நாள்பட்ட ஆட்டோ இம்யூன் தோல் நோயாகும், தோலில் வீக்கம் ஏற்படும். அதோடு, உடலின் சில பகுதிகளில் தோல் சிவந்து போகும். தோலில் வறட்சி ஏற்படுவதுடன், சொறிசொறியாக தோன்றும். சொரியாசிஸ் என்பது ஒரு தன்னுடல் தாக்க நிலையாகும், அங்கு உடலின் நோய் எதிர்ப்பு சக்தி தன்னைத்தானே தாக்கிக் கொள்கிறது, அங்கு நோய் எதிர்ப்புச் செயலிழப்பு உள்ளது. இந்த நோய் ஏற்பட காரணம் என்றால், அது பரம்பரை வழியாக வரலாம் என்றும் சொல்லப்படுகிறது.

வேறு சிலருக்கு மருந்துகள் எடுத்துக் கொள்வதின் பக்கவிளைவாக சொரியாசிஸ் பிரச்சனை வரலாம். அதேபோல, மன அழுத்தம் மற்றும் புகைபிடித்தல் போன்ற காரணிகளால் சொரியாசிஸ் ஏற்படலாம்.

தடிப்புத் தோல் அழற்சிக்கு வாழைப்பழம் 

தடிப்புத் தோல் அழற்சியின் அறிகுறிகளைப் போக்க இதைப் பயன்படுத்தலாம். பேட்ச் தொடர்பான எந்த எரிச்சல் அல்லது வலி ஏற்பட்டால் வாழைப்பழத்தோல் வைத்து அந்த இடத்தில் தேய்த்து விடுவதன் மூலம், சருமத்தில் குளிர்ச்சி மற்றும் ஈரப்பதமூட்டும் விளைவுகள் ஏற்படும். 

மேலும் படிக்க | இந்த மூலிகைகளை சமைச்சு சாப்பிட்டா வேற லெவல்! அப்படியே சாப்பிட்டா ஆரோக்கியம் உறுதி

வாழைப்பழத் தோல்கள் சிறந்த தடிப்புத் தோல் அழற்சி சிகிச்சை என்று முடிவு செய்ய போதுமான ஆதாரம் இல்லை. இருப்பினும், வாழைப்பழத் தோல்கள் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாதவை என்பதால், இதை பயமின்றி மேற்கொள்ளலாம்.

வாழைப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால், சோரியாசிஸ் வராமல் தடுக்கலாம் என்றும், வாழைப்பழத்தோலில் உள்ள கலவைகள் பிரித்தெடுக்கும் போது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடும் என்று ஆராய்ச்சி  ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், வாழைத்தோலில் இயற்கையான அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் குளிர்ச்சியான நன்மைகள் உள்ளன, அவை தடிப்புத் தோல் அழற்சியின் அறிகுறிகளைப் போக்க உதவலாம். 

வாழைப்பழத் தோலை சருமத்தில் எப்படி பயன்படுத்துவது?
வாழைப்பழத்தோலின் உட்புற தோலை உரித்து, அதை அப்படியே சருமத்தில் தடவி, அந்த பகுதியை மெதுவாக தேய்த்து, 10-15 நிமிடங்கள் காயவிடவும். பிறகு சாதாரண நீர் கொண்டு சருமத்தை கழுவவும். தடிப்புத் தோல் அழற்சிக்கு வாழைப்பழத் தோலைப் பயன்படுத்துவதால் எந்த பக்க விளைவுகளும் இல்லை, இருப்பினும், தடிப்புத் தோல் அழற்சியின் தோல் புண்களுக்கு எதையும் பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு தோல் மருத்துவரை அணுகுவது முக்கியம்.

மேலும் படிக்க | வெந்தய நீரின் ஆரோக்கிய நன்மைகள்: பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News