காய்கறிகளும் பழங்களும் நம் உடலுக்கு தேவையான பல வித ஊட்டச்சத்துகளை வழங்குகின்றன. பழங்களினால் நமக்கு கிடைக்கும் பயன்கள் ஏராளம்.
பப்பாளி பழத்தில் பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அனைத்து இடங்களிலும் நமக்கு பப்பாளி மிக எளிதாக கிடைக்கும். பப்பாளி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும் என்று கூறப்படுகிறது. மேலும், இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க மிகவும் உதவிகரமாக கருதப்படுகிறது. பப்பாளி பச்சையாகவும் சமைத்த வடிவத்திலும் உட்கொள்ளப்படுகிறது.
மறுபுறம், வாழைப்பழத்தைப் பற்றி பேசினால், வாழைப்பழத்திலும் பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. வாழைப்பழத்தை உட்கொள்வதன் மூலம் உடலுக்கு பொட்டாசியம் அதிகம் கிடைக்கிறது. இது தசைகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது.
ஆனால் வாழைப்பழத்தையும் பப்பாளியையும் சேர்த்து சாப்பிடலாமா? இரண்டையும் சேர்த்து சாப்பிடுவதால் என்ன பாதிப்பு ஏற்படும்? வாழைப்பழத்தையும் பப்பாளியையும் ஒன்றாகச் சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய தீங்குகளைப் பற்றி பார்க்கலாம்.
வாழைப்பழத்தையும் பப்பாளியையும் சேர்த்து சாப்பிடலாமா?
வாழைப்பழத்தையும் பப்பாளி-யையும் சேர்த்து சாப்பிடுவது பலன் தருமா இல்லையா என்பது உங்கள் செரிமான அமைப்பைப் பொறுத்தது என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். பலருக்கு ஜீரண சக்தி பலவீனமாக இருப்பதால் வாழைப்பழத்தையும் பப்பாளியையும் சேர்த்து சாப்பிட்டால் பிரச்சனைகள் அதிகரிக்கும். நல்ல ஜீரண சக்தி உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்சனை ஏற்படாது.
ஆயுர்வேதத்தின்படி வாழைப்பழமும் பப்பாளியும் ஒன்றுக்கொன்று எதிரான பழங்களாகக் கருதப்படுகின்றன. ஆகையால் ஆயுர்வேதமும் அவற்றை ஒன்றாக சாப்பிடுவதை பரிந்துரைப்பதில்லை. இவற்றை சேர்த்து சாப்பிடுவதால் செரிமானம் தொடர்பான நோய் அதிகரிக்கிறது. இதை அதிகமாக உட்கொள்வதால் அஜீரணம், வாந்தி, குமட்டல், வாயு மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
மெலும் படிக்க | வெள்ளை முடி பிரச்சனையா, இந்த எண்ணெயை யூஸ் பண்ணுங்க
இவர்கள் வாழைப்பழம் மற்றும் பப்பாளி சாப்பிடக்கூடாது:
- வாழைப்பழம் மற்றும் பப்பாளியை சேர்த்து சாப்பிடுவதை அனைவரும்தவிர்ப்பது நல்லது.
- இது தவிர, ஆஸ்துமா அல்லது ஏதேனும் சுவாச நோய் ஏற்பட்டால், பப்பாளியை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
- பப்பாளியில் பப்பான் என்ற ஒரு தனிமம் உள்ளது. இதன் காரணமாக சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுவதாக கூறப்படுகின்றது.
- பப்பாளி சாப்பிட்டால் சிலருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.
- மஞ்சள் காமாலை நோயாளிகளும் பப்பாளி சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இதில் உள்ள பாப்பைன் மற்றும் பீட்டா கரோட்டின் மஞ்சள் காமாலை பிரச்சனையை அதிகரிக்கும்.
- கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளி சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- பப்பாளி மற்றும் வாழைப்பழத்தின் கலவையும் கர்ப்பிணிப் பெண்களுக்கு சரியானதல்ல.
- ஜலதோஷம் வந்தாலும் வாழைப்பழம், பப்பாளி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் படிக்க | மூளைக்கும் மிகுதியான சக்தி தரும் மாதுளையின் நன்மைகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR