பார்வையை கூர்மையாக்கும் வைட்டமின் A நிறைந்த ‘சில’ சைவ உணவுகள்!

முட்டை, கடல் மீன்  போன்றவற்றில் வைட்டமின் ஏ  நிறைந்திருப்பதைப் போல,  சில சைவ உணவுகளிலும் விட்டமின் ஏ நிறைந்துள்ளது. அவற்றை பற்றி அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 3, 2022, 01:35 PM IST
  • உடலுக்கு வைட்டமின் ஏ மிகவும் முக்கியமான சத்து.
  • வைட்டமின் ஏ கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்.
  • வைட்டமின் ஏ நிறைந்த காய்கறிகள்.
பார்வையை கூர்மையாக்கும் வைட்டமின் A நிறைந்த ‘சில’ சைவ உணவுகள்! title=

உடலுக்கு வைட்டமின் ஏ மிகவும் முக்கியமான சத்து. இது கண் பார்வையை  கூர்மையாக்குவது மட்டுமின்றி, செல்கள் , உடல் வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றிற்கு உதவுகிறது. வைட்டமின் ஏ ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ நிறைந்த உணவுகள் ஃப்ரீ ரேடிக்கல்களின் விளைவுகளிலிருந்து உங்கள் செல்களைப் பாதுகாக்கிறது.  ஃப்ரீ ரேடிக்கல்கள் இதயம் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களை உண்டாக்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. வைட்டமின் ஏ கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் மற்றும் நமது அன்றாட உணவின் முக்கிய பகுதியாகும். முட்டை மற்றும் கடல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு வைட்டமின் ஏ கிடைக்கிறது.  அதே சமயம் இதற்காக  சைவ உணவு பிரியர்கள் அச்சப்படத் தேவையில்லை. வைட்டமின் ஏ நிறைந்த பல உணவுகள் உள்ளன.

வைட்டமின் ஏ  நிறைந்த காய்கறிகள்

கேரட் 

கேரட்டில் வைட்டமின் ஏ பீட்டா கரோட்டின் (Beta Carotene) வடிவத்தில் உள்ளது. இது ஆரோக்கியமான ஆக்ஸிஜனேற்றியாகும், எனவே கேரட்டை சாப்பிடுவது உங்கள் கண்பார்வையை மேம்படுத்தும். ஒரு நடுத்தர அளவிலான கேரட்டில் 10190 சர்வதேச வைட்டமின் ஏ உள்ளது.  இது சராசரி தினசரி தேவையை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் கலோரிகளில் குறைவாக உள்ளது, ஆனால்  இவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. அவை வைட்டமின் ஏ சத்தின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும். இது தினசரி தேவையில் 400% க்கும் அதிகமாகும். இதனை வேக வைத்து சாப்பிடுவது பலருக்கும்  பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Health Alert: நாம் வாங்கும் முட்டை புரதம் நிறைந்தது தானா; கண்டறிவது எப்படி..!!

தக்காளி

தாக்காளி ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்களின் வளமான ஆதாரங்களில் ஒன்றாகும். ஒரு நடுத்தர அளவிலான தக்காளி உடலின் தினசரி வைட்டமின் ஏ தேவையில் 20 சதவீதத்தை வழங்குகிறது. இது தவிர, தக்காளியில் வைட்டமின் சி மற்றும் லைகோபீன் நிறைந்துள்ளது.

பட்டாணி 

பாட்டாணியிலும் விட்டமின் ஏ நிறைந்துள்ளது. நீங்கள் 100 கிராம் பட்டாணி சாப்பிட்டால், உடலுக்கு 765 சர்வதேச அளவு வைட்டமின் ஏ கிடைக்கும்.

மேலும் படிக்க | பழச்சாறுடன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது மிகவும் ஆபத்து; எச்சரிக்கும் நிபுணர்கள்!

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News