கோடையில் இந்த பானங்கள் குறைந்த இரத்த அழுத்தத்தை குணப்படுத்த உதவும்

Drinks for Low Blood Pressure: சில எளிய ஆரோக்கியமான பானங்கள் மூலம் குறைந்த இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 4, 2022, 04:53 PM IST
  • குறைந்த இரத்த அழுத்தத்திற்கான பானங்கள்.
  • தண்ணீரில் உப்பு சேர்த்து குடிக்கலாம்.
  • பீட்ரூட் சாறும் பலன் தரும்.
கோடையில் இந்த பானங்கள் குறைந்த இரத்த அழுத்தத்தை குணப்படுத்த உதவும் title=

குறைந்த இரத்த அழுத்தத்திற்கான பானங்கள்: இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த பல வழிகள் இருந்தாலும், சில பானங்களும் இதற்கு மிகவும் உதவியாக இருக்கும். கோடையில், ஆரோக்கியமான பானங்களை உட்கொண்டால், குறைந்த இரத்த அழுத்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம். 

உணவில் கவனம் செலுத்தாமலும், உடற்பயிற்சி செய்யாமலும் இருந்தால், உடலில் பல வகையான பிரச்சனைகள் உருவாகும். பலருக்கு உயர் இரத்த அழுத்தம் பிரச்சினை உள்ளது. பலருக்கு பல காரணங்களால் குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. சில எளிய ஆரோக்கியமான பானங்கள் மூலம் குறைந்த இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1. கேரட் சாறு நன்மை பயக்கும்

உங்கள் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருந்தால், நீங்கள் கேரட் ஜூஸ் குடிக்க வேண்டும். இது நிச்சயம் பலன் தரும். இரத்த அழுத்தத்தை தொடர்ந்து கட்டுக்குள் வைக்க இது உதவும். கேரட் சாற்றில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆண்டு ஆக்சிடெண்டுகள் உள்ளன.

மேலும் படிக்க | Beat The Heat: கோடையையும் காதலிக்க செய்ய இந்த உணவுகள் போதுமே

2. காபி குடிக்க வேண்டும்

இது தவிர, இரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்கள் கண்டிப்பாக காபி உட்கொள்ள வேண்டும். ஏனெனில் அதன் நுகர்வு உங்கள் குறைந்த இரத்த அழுத்த பிரச்சனையை குறைக்கும். இது தவிர சோர்வு, சோம்பல் போன்றவையும் காபியால் குறையும்.

3. தண்ணீரில் உப்பு சேர்த்து குடிக்கவும்

தண்ணீரில் உப்பு சேர்த்து குடித்தால் ரத்த அழுத்தம் குறையும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதாவது, இரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்கள், உடனடியாக தண்ணீரில் உப்பு சேர்த்துக் குடித்தால், இரத்த அழுத்த அளவு சீராகும். 

4. பீட்ரூட் சாறும் பலன் தரும்

பீட்ரூட் சாறு குறைந்த இரத்த அழுத்த பிரச்சனையில் மிகவும் நன்மை பயக்கும். இந்த சாற்றை உணவில் சேர்த்துக் கொண்டால், பிபி கட்டுக்குள் இருப்பது மட்டுமின்றி ரத்தசோகையும் வராது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | இந்த 2 பொருட்கள் உடல் எடையை வேகமாக குறைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News