ரிஸ்க் இல்லாத வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் உணவுகள்

Low Cholesterol Foods To Avoid Illness: கொலஸ்ட்ரால் ஏன்பது உணவில் இருப்பது மட்டுமல்ல, நமது கல்லீரலாலும் உருவாக்கப்படுகிறது. நம்முடைய உடல் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் கொலஸ்ட்ரால் அதிகமானால் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 3, 2023, 03:14 PM IST
  • கொலஸ்ட்ரால் உணவில் இருப்பது மட்டுமல்ல, நமது கல்லீரலாலும் உருவாக்கப்படுகிறது
  • உடல் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது கொலஸ்ட்ரால்
  • கொலஸ்ட்ரால் அதிகமானால் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும்
ரிஸ்க் இல்லாத வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் உணவுகள் title=

கொலஸ்ட்ரால் என்ற வார்த்தை இன்றைய காலகட்டத்தில் நாம் அடிக்கடி கேட்கும் வார்த்தையாகைருக்கிறது. நமது ரத்தத்தில் காணப்படும் மெழுகுப் பொருளான கொலஸ்ட்ரால், நம்முடைய உடல் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நாம் உண்ணும் உணவில், கொலஸ்ட்ரால் இருந்தாலும், இது நம் கல்லீரலாலும் உருவாக்கப்படுகிறது.

கொலஸ்ட்ராலில் இரு வகைகள் உண்டு, அதை பொதுவாக உடலுக்கு நன்மை பயக்கும் வகை என்றும், உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் வகை என இரண்டாக பார்க்கிறோம். ஆரோக்கியமான செல்களை உருவாக்க நல்ல கொலஸ்ட்ரால் தேவை. ஆனால் உடலில் அதிக அளவு கொலஸ்ட்ரால் இருந்தால் அது பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

அதிக கொலஸ்ட்ரால் இருந்தால், நமது ரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து, உடலுக்கு ரத்தம் செல்லும் தமனிகள் வழியே போதுமான ரத்தம் பாயும் செலயல்முறைக்கு பாதிப்புளில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பால், இதயநோய் மற்றும் ரத்தம் உறைந்து கட்டிகள் உருவாகலாம்.

உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் கொலஸ்ட்ராலைக் குறைக்க விரும்பினாலோ அல்லது கட்டுப்படுத்த விரும்பினாலோ சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் போது.  

கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பது எப்படி

கெட்ட கொலஸ்ட்ரால் இதயத்தை பலவீனப்படுத்தும் ஒரு தனிமம், இது நமது இரத்த நாளங்களில் உற்பத்தியாகிறது. இது LDL கொலஸ்ட்ரால் என்றும் அழைக்கப்படுகிறது. இதுவே மாரடைப்புக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருந்தால் மாரடைப்பு போன்ற கொடிய நோய்களை தவிர்க்கலாம்.

மேலும் படிக்க | நல்ல கொலஸ்ட்ராலை உடலில் சேர்க்க இந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்!

கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க எந்தெந்த உணவுகளை உண்ண வேண்டும் என்று பார்ப்போம். இவற்றில் சில விஷயங்கள், உடலில் இருந்து எல்.டி.எல் வெளியேற உதவுகின்றன. அதே நேரத்தில், சில உணவுகள் அதை உடலுக்குள்ளேயே அழித்து விடுகின்றன.

கத்தரிக்காய் மற்றும் வெண்டைக்காய்

ஹெல்த் ஹார்வர்டின் கூற்றுப்படி, கத்தரி மற்றும் வெண்டைக்காய் இரண்டும் குறைந்த கலோரி உணவுகள். இதில் கரையக்கூடிய நார்ச்சத்தும் உள்ளது. இவை, உடலில் இருந்து கொழுப்பை அகற்ற உதவுகின்றன.

காலை உணவாக ஓட்ஸ்
காலை உணவில் ஓட்ஸை உட்கொண்டால், கெட்ட கொலஸ்ட்ரால் குறையும். அதே சமயம் வாழைப்பழத்தை ஓட்ஸுடன் சேர்த்து சாப்பிடுவதும் பலன் தரும். ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது, இது உடலில் இருந்து கெட்ட கொழுப்பை மலம் வழியாக நீக்குகிறது.

சோயா பால் அல்லது டோஃபு
கெட்ட கொழுப்பைக் குறைக்க, நீங்கள் சோயா பால், டோஃபு மற்றும் பிற சோயா பொருட்களை உட்கொள்ள வேண்டும். சோயா பொருட்களில் உள்ள புரதங்களை உட்கொள்வதன் மூலம் கெட்ட கொழுப்பைக் குறைக்க முடியும் என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன.

மேலும் படிக்க | யூரிக் அமிலம் பிரச்னையால் அவதிப்படுகிறீர்களா... இந்த உணவுகளை தொடவே தொடாதீர்கள்!

தாவர எண்ணெய்
கொழுப்பைக் கட்டுப்படுத்த, சூரியகாந்தி அல்லது பிற தாவர எண்ணெயைச் சேர்க்க வேண்டும். இந்த எண்ணெய்களில் இருக்கும் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உடலில் உள்ள நல்ல கொழுப்பின் உற்பத்தியை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலை அழிக்கிறது.

ஆப்பிள் மற்றும் திராட்சை

ஆப்பிள், திராட்சை, சிட்ரஸ் பழங்களை உணவில் சேர்த்துக் கொண்டால், கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கலாம். இந்த பழங்களில் பெக்டின் உள்ளது, இது ஒரு வகை கரையக்கூடிய நார்ச்சத்து ஆகும். இந்த நார்ச்சத்து கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | நரை முடி கருமையாக, முடி பளபளக்க இதை செய்தால் போதும்: சூப்பர் டிப்ஸ் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News