அதிக கொலஸ்ட்ரால் ஆபத்து!! வெங்காயத்தை இப்படி உட்கொண்டால் உடனடியாக குறைக்கலாம்

Onion For High Cholesterol: அதிக கொலஸ்ட்ராலை குறைக்க, வெங்காயத்தை முளைக்க வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 10, 2023, 03:05 PM IST
  • கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் வெங்காயம்.
  • அதிக கொலஸ்ட்ராலை குறைக்க முளைத்த வெங்காயத்தை சாப்பிடலாம்.
  • வெங்காயத்தில் பல ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.
அதிக கொலஸ்ட்ரால் ஆபத்து!! வெங்காயத்தை இப்படி உட்கொண்டால் உடனடியாக குறைக்கலாம் title=

கொழுப்பைக் குறைக்க முளைத்த வெங்காயத்தின் நன்மைகள்: உணவுக் கோளாறுகள், சமநிலையற்ற வாழ்க்கை முறை மற்றும் மது அருந்துதல் போன்றவற்றால் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் நரம்புகளில் படிவதால் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. அதிக கொழுப்பைக் குறைக்க, உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, ​​செல்கள் மற்றும் திசுக்களில் கொழுப்பு மற்றும் லிப்பிட்களின் அடுக்கு உருவாகத் தொடங்குகிறது. இது ஆரம்பித்த உடனேயே உடலில் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கும். அதிக கொலஸ்ட்ராலின் அறிகுறிகளை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம் தீவிர நோய்க்கு ஆளாகாமல் இருக்க முடியும். 

கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் வெங்காயம்

அதிக கொலஸ்ட்ராலை புறக்கணிப்பது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. இதை கட்டுப்படுத்த முளைத்த வெங்காயத்தை சாப்பிடலாம். முளைத்த வெங்காயத்தில் உள்ள பண்புகள் உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. அதிக கொலஸ்ட்ராலை குறைக்க, வெங்காயத்தை முளைக்க வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

அதிக கொலஸ்ட்ராலை குறைக்க முளைத்த வெங்காயத்தை சாப்பிடலாம்

நம் இந்திய சமையலறைகளில் வெங்காயம் அத்தியாவசியமான ஒரு பொருளாக உள்ளது. கறி, குழம்பு, சட்னி, துவையல், சாலட் என இது பல வகைகளில் பயன்படுத்தப்படுகின்றது. வெங்காயத்தில் பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் பண்புகள் இருக்கின்றன. இது உடலை ஆரோக்கியமாகவும், நோய்களிலிருந்து பாதுகாக்கவும் வைக்க உதவுகிறது. வைட்டமின் சி, வைட்டமின் பி, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்கள் வெங்காயத்தில் உள்ளன. இதை உட்கொள்வதால் அதிக கொலஸ்ட்ராலை குறைப்பதில் அதிக நன்மைகள் கிடைக்கும். 

முளைத்த வெங்காயத்தை உட்கொள்வது அதிக கொழுப்பைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. முளைத்த வெங்காயத்தில் உள்ள பண்புகள் உடலில் சேரும் கெட்ட கொலஸ்ட்ராலை அகற்றும். பல ஆய்வுகள் வெங்காயத்தில் உள்ள பண்புகள் அதிக கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

அதிக கொலஸ்ட்ராலின் அறிகுறிகள்: 

- கால் உணர்வின்மை

- நெஞ்சு வலி

- எடை அதிகரித்தல்

- தோல் நிறத்தில் மாற்றம்

- நெஞ்சு வலி

- குமட்டல் மற்றும் வாந்தி பிரச்சனை

- பக்கவாதம் மற்றும் மாரடைப்பு

- குமட்டல் மற்றும் வாந்தி பிரச்சனை

- மிகவும் சோர்வான உணர்வு

- அதிக வியர்வை

மேலும் படிக்க | எடை இழப்பு முதல் நீரிழிவு வரை... ஒரே ஒரு எலுமிச்சை போதும்..!

கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வது, செயலற்ற வாழ்க்கை முறை மற்றும் புகைபிடித்தல் போன்றவற்றால் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம். கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க, உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குறைந்த கொழுப்புள்ள உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்வது மற்றும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது அல்லது ஓடுவது கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது.

வெங்காயத்தின் பிற நன்மைகள்

நீரிழிவு நோய்

வெங்காயம் சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. நீங்கள் தினமும் வெங்காயம் சாப்பிட்டு வந்தால், நீரிழிவு டைப் 2 நோயாளிகளுக்கு ஃபாஸ்டிங் சர்க்கரை அளவைக் குறைக்க உதவலாம்.

இரும்புச்சத்து குறைபாடு

உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், வெங்காயத்தை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வெங்காயம் இரும்பு மற்றும் பொட்டாசியம் பண்புகள் நிறைந்ததாக கருதப்படுகிறது.

தொற்றுநோய்களை தவிர்க்க உதவுகிறது

தொற்றுநோயைத் தவிர்ப்பதற்கு வெங்காயம் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது. வெங்காயத்தில் ஒவ்வாமை எதிர்ப்பு, ஆண்டி ஆக்சிடண்ட் பண்புகள் உள்ளன. இது பல வகையான நோய்த்தொற்றுகளிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த விரும்பினால், நீங்கள் வெங்காயத்தை சாலட் வடிவில் உட்கொள்ள வேண்டும். வெங்காயத்தில் உள்ள பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி போன்ற பண்புகள் காணப்படுகின்றன. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.

எலும்புகளை வலுப்படுத்தும்

எலும்புகளை வலுப்படுத்த வெங்காயத்தைப் பயன்படுத்தலாம். வெங்காயத்தில் உள்ள கூறுகள் எலும்புகளை வலுப்படுத்த உதவுகின்றன.

மேலும் படிக்க | “குட்டி தூக்கம்..பெரிய லாபம்..” மதிய வேளையில் தூங்குவதால் ஏற்படும் நலன்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News