“குட்டி தூக்கம்..பெரிய லாபம்..” மதிய வேளையில் தூங்குவதால் ஏற்படும் நலன்கள்..!

மதிய வேளையில் தூங்குவது நல்லதா கெட்டதா..? முழு விளக்கம் இதோ.   

Written by - Yuvashree | Last Updated : Aug 10, 2023, 02:37 PM IST
  • மதிய வேளை தூக்கம் நல்லதா கெட்டதா...?
  • இது உடல் எடையை அதிகரிக்குமா?
  • முழு விவரம் உள்ளே.
“குட்டி தூக்கம்..பெரிய லாபம்..” மதிய வேளையில் தூங்குவதால் ஏற்படும் நலன்கள்..! title=

நம்மில் பலர் மதிய வேளைகளில் தூங்கும் பழகத்தினை வைத்திருப்போம். ஆனால், இது நல்ல பழக்கம் அல்ல என பலர் நம்மிடம் கூறியிருப்பர். இது உண்மையில் நல்லதா கெட்டதா..? மருத்துவர்கள் கூறுவது என்ன..? 

மதிய வேளையில் தூக்கம்:

காலை என்னதான் விழிப்புடன் இருந்தாலும், மதியம் அல்லது இளவெயில் வேளையில் வேலைகளை முடித்து விட்டு அமரும் போது, நமக்கு தூக்கம் தொற்றிக்கொள்வது வழக்கமான ஒன்று. சிலர் அப்படியே சில மணி நேரம் கண் அயர்வர், ஒரு சிலர் உடல் எடை போட்டு விடுமோ? அல்லது சோம்பேறித்தனம் அதிகமாகி விடுமோ? போன்ற பயத்தினால் தூங்காமல் சமாளிப்பர். பகலில் பல மணி நேரம் தூங்கினால் இரவில் தூக்கம் வராமல் விழிப்புடன் இருப்போம். ஒரு சிலர் மதிய தூக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க, ஒரு சிலர் மதிய தூக்கம் நல்லது என்கின்றனர். இதில் எதை நம்பலாம்..? 

மேலும் படிக்க | எந்த வயதாக இருந்தாலும் எளிதாக எடையை குறைக்கலாம்: இந்த டிப்ஸ் உதவும்

மதியத்தில் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்:

நாம் சிறுவயதில் இருக்கும் போது, துடிப்புடன் அங்கும் இங்கும் ஓடி ஆடி இரவில் மட்டும் தூங்கி பழகி இருப்போம். இந்த பழக்கம் நாம் வளர வளர மாற்றம் பெறும். அதனால்தான் வயதானவர்கள் கண்டிப்பாக மதிய வேளையில் கண் அயர வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மதியானத்தில், 10-20 நிமிடம் தூங்குவது நல்லது என சிலர் பரிந்துரைக்கின்றனர். இதைத்தாண்டி எவ்வளவு நேரம் தூங்கினாலும் நமக்கு மிகவும் சோர்வாகவும் தூக்க கலக்கமாகவும்தான் இருக்குமாம். மதியம் 1-4 மணிக்குள் ஏதாவது ஒரு சமயத்தில் தூங்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். 

எவ்வளவு நேரம் தூங்கினால் ஆபத்து..?

மதிய நேர தூக்கத்தில் பல பின்விளைவுகள் இருக்கிறது. உடல் சோர்வுற்று கண்டிப்பாக தூக்கம் தேவை என தோன்றினால் சில நிமிடங்கள் தூங்கி கொள்ளலாம். ஆனால், எந்த தூக்கமு 30 நிமிடங்களுக்கு மேல் இருக்க கூடாது. இதனால், இரவில் தூக்கம் இல்லாமல் போவது, ரத்த அழுத்தம் அதிகரிப்பது, உடல் எடை அதிகரிப்பது போன்ற பிரச்சனைகள் உருவாகும். 

மதிய வேளை தூக்கத்தினால் ஏற்படும் நன்மைகள்:

>மதிய வேளையில் அளவுடன் தூங்குவது நினைவாற்றலை அதிகரிக்கும் என ஒரு சில ஆராய்ச்சியில் கண்டுபிடிக்க பட்டுள்ளது. இந்த தூக்கத்தால், நாம் ஒரு நாளில் நடக்கும் பல விஷயங்களை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியுமாம். 

>மதிய தூக்கம் கற்பனை திறன் வளர உதவும் என்கின்றனர் மருத்துவர்கள். கலைஞர்கள், எழுத்தாளர்கள் என கலைத்துறையில் உள்ள பலர் மதிய வேளையில் தூங்குவார்களாம். 

>நம்முடைய வயதைப்பொருத்து மதிய வேளையில் தூங்குவதையும் மாற்றிக்கொள்ள வேண்டும். 

>மனநிலையை மகிழ்ச்சிகரமானதாக மாற்ற மதியத்தில் சில மணித்துளிகள் தூங்கலாம். மேலும், மதியானத்தில் தூங்குவது நாம் விழிப்புடன் இருக்க உதவுமாம். 

மேலும் படிக்க | கமகமக்கும் புதினா உணவுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் நன்மை தரும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News