Aspirin: நிமோனியா நோயாளிகளுக்கு மாரடைப்பு, பக்கவாதத்தைக் குறைக்கும் ஆஸ்பிரின்

ஆஸ்பிரின் மருந்து தொடர்பான ஆராய்சி, பல்வேறு சாதகமான முடிவுகளை கொடுத்துள்ளது. பல நாடுகளில் நிமோனியா சிகிச்சைக்கு மருத்துவமனையில் ஆஸ்பிரினை பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 12, 2021, 03:35 PM IST
  • நிமோனியா நோயாளிகளுக்கு மாரடைப்பு, பக்கவாதத்தைக் குறைக்கும் ஆஸ்பிரின்
  • நிமோனியா பாதிக்கப்பட்டவர்களுக்கு இதய பிரச்சனை ஏற்படும்
  • நிமோனியா சிகிச்சைக்கு மருத்துவமனைகளில் ஆஸ்பிரின் பயன்படுத்தப்படுகிறது
Aspirin: நிமோனியா நோயாளிகளுக்கு மாரடைப்பு, பக்கவாதத்தைக் குறைக்கும் ஆஸ்பிரின் title=

ஒரு புதிய ஆய்வின்படி, நிமோனியா நோயாளிகளுக்கு பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற கடுமையான சிக்கல் ஏற்படும் ஆபத்தை ஆஸ்பிரின் குறைக்கும்.

இந்த ஆண்டு ஐரோப்பிய நுண்ணுயிரியல் மற்றும் தொற்று நோய்களின் ஐரோப்பிய காங்கிரசில் (European Congress of Clinical Microbiology and Infectious Diseases) சமர்ப்பிக்கப்பட்ட புதிய ஆராய்ச்சி, European Respiratory Journal சஞ்சிகையில் வெளிவந்தது. நிமோனியா பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான இதய சிக்கல்கள் ஏற்படுவது பொதுவானது.  

இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஃபெர்கஸ் ஹாமில்டன் மற்றும் சகாக்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். பக்கவாதம் (ரத்த நாளங்கள் அடைப்பதால் ஏற்படும் பக்கவாதம், 80 சதவீத பக்கவாதம் ஆகியவற்றைக் குறிக்கும் ischemic stroke) மற்றும் மாரடைப்பு ஆகியவற்றின் அபாயத்தை ஆஸ்பிரின் மாத்திரை குறைக்குமா என்று இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முதன்மை பராமரிப்பு அமைப்புகளில் ஆஸ்பிரினுக்கு தடுப்புப் பங்கு இருக்குமா என்றும் ஆராயப்பட்டது. 

Also Read | DRDO 2-DG மருந்து அனைத்து கொரோனா திரிபுகளிலும் செயலாற்றுகிறது: ஆய்வு
 
61 மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகளின் பெரிய பிரிட்டனின் முதன்மை பராமரிப்பு தரவுத்தளமான கிளினிக்கல் பிராக்டிஸ் ரிசர்ச் டேட்டாலிங்க் (Clinical Practice Research Datalink) இலிருந்து நிமோனியா நோயால் பாதிக்கப்பட்ட 50 நோயாளிகளின் விவரங்களை குழு ஆய்வு செய்தது.

இஸ்கிமிக் ஸ்ட்ரோக் மற்றும் எம்ஐ (ischemic stroke and MI) இரண்டு நோய்களும் ஏற்படுபடுவதை ஆராய்வதே ஆய்வின் முதன்மை விளைவு என வரையறுக்கப்பட்டது. இரு நோய்களில் ஏதாவது ஒன்று ஏற்படுவதை இரண்டாம் நிலை விளைவு என வரையறுத்து, அதன்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
 
ஆய்வு செய்வதற்கு தகுதியானவர்கள் என அடையாளம் காணப்பட்ட 48,743 நோயாளிகளில், 8099 பேர்ஆஸ்பிரின் பயன்படுத்தியவர்கள். 8099 பேர் அந்த மாத்திரையை பயன்படுத்தாதவர்கள் என வகைப்படுத்தப்பட்டனர். 

Also Read | தட்டம்மை தடுப்பூசி குழந்தைகளை கொரோனாவிலிருந்து காக்குமா; ஆய்வு கூறுவது என்ன

ஆய்வில் முதன்மை விளைவுகளின் ஆபத்து (பக்கவாதம் மற்றும் எம்ஐ) பயனர்கள் அல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது ஆஸ்பிரின் பயனர்களில் 36 சதவீதம் குறைவாக இருந்தது. ஆஸ்பிரின் பயனர்களில் இஸ்கிமிக் ஸ்ட்ரோக் மற்றும் எம்ஐ விகிதங்கள் முறையே 30 சதவீதம் மற்றும் 54 சதவீதம் குறைவாக இருப்பதால் இரண்டாம் நிலை விளைவுகளின் குறைவான அபாயத்துடன் ஆஸ்பிரின் தொடர்புடையது என ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர்.
 
"இந்த ஆராய்ச்சி நிமோனியாவிற்குக் ஆஸ்பிரின் மருத்தை பயபடுத்தலாமா என்ற பரிசோதனைக்கு அடித்தளத்தை அமைக்கிறது. பல நாடுகளில் நிமோனியா சிகிச்சைக்கு மருத்துவமனைகளில் ஆஸ்பிரினை பயன்படுத்துகிறார்கள் என்பதற்கான காரணமும் இதுதான்" என்று பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் முனைவர், டாக்டர் பெர்கஸ் ஹாமில்டன் கூறுகிறார்.

Also Read | Vitamin D எடுத்துக் கொண்டால் கொரோனா வைரஸ் அபாயம் குறையுமா? உண்மை இதுதான்…

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News