தற்போதைய கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருக்கும் காலகட்டத்தில் எந்த ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொண்டால் நோய்த்தொற்றை தவிரக்க முடியும் என்பது அனைவரின் கேள்வியாக இருக்கிறது. COVID-19 அபாயத்தை குறைக்க விட்டமின் டி உதவுமா என்ற கேள்விகளும் எழுகின்றன.
கொழுப்பில் கரையக்கூடியது வைட்டமின் டி. இந்த சத்து, மனித உடலில் பல முக்கிய பங்கை வகிக்கிறது.
இந்த ஊட்டச்சத்து நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது, வைட்டமின் டி ஊட்டச்சத்தை உணவில் கூடுதலாகச் சேர்ப்பது COVID-19 ஐ ஏற்படுத்தும் புதிய கொரோனா வைரஸ் திரிபு ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும் என்றும் சொல்லப்படுகிறது.
Also Read | Weight Loss: முட்டைகோஸ் ஜூஸ் குடித்தால் இத்தனை நன்மைகளா!!!
COVID-19 நோய்க்கு தற்போது எந்த சிகிச்சையும் இல்லை என்றாலும், உடல் ரீதியான இடைவெளியை கடைபிடிப்பது மற்றும் சுகாதாரத்தை கடைபிடிப்பது போன்ற தடுப்பு நடவடிக்கைகளால் வைரஸ் தொற்று பாதிக்காமல் பாதுகாக்கலாம்.
வைட்டமின் டி ஆரோக்கியமான அளவில் இருந்தால், ஒருவரின் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் (immune system) ஆரோக்கியமாக இருக்கும் என்றும், இந்தச் சத்து பொதுவான சுவாச நோய்களிலிருந்து பாதுகாக்கக்கூடும் என்றும் சில ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
சமீபத்திய ஆய்வில் COVID-19 உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு போதுமான அளவு வைட்டமின் டி இருந்ததால், அவர்களுக்கு நோய் தீவிரமாகமல் இருப்பதும், இறப்புக்கான ஆபத்து குறைந்துள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.
Also Read | Health Tips: தாம்பத்திய வாழ்வை மேம்படுத்தும் சிவப்பு முள்ளங்கி
வைட்டமின் டி நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் இந்த ஊட்டச்சத்துடன் கூடுதலாகச் சேர்ப்பது சுவாச நிலைமைகளிலிருந்து பாதுகாக்க உதவுமா என்ற கேள்விகள் எழுகின்றன.
சன்ஷைன் வைட்டமின் என்றும் அழைக்கப்படும் வைட்டமின் டி ஆரோக்கியமான எலும்புகளை பராமரிப்பதற்கு அவசியமானது மட்டுமல்ல, உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது.
நோயெதிர்ப்பு மண்டலத்தின் சரியான செயல்பாட்டிற்கு வைட்டமின் டி அவசியம். இது நோய்த்தொற்று மற்றும் நோய்களுக்கு எதிரான நமது உடலின் முதல் தேவையாகும்.
இந்த வைட்டமின், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது அழற்சி எதிர்ப்பு மற்றும் நோயெதிர்ப்பு தடுப்பு பண்புகள் இரண்டையும் கொண்டுள்ளது.
வைட்டமின் டி செல்கள் மற்றும் மேக்ரோபேஜ்கள் உள்ளிட்ட நோயெதிர்ப்பு உயிரணுக்களின் செயல்பாட்டை மேம்படுத்தும். அவை நமது உடலை நோய்க்கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கும்.
Also Read | வெல்லத்திற்கு இளமைக்கும் சம்பந்தம் உள்ளதா; நிபுணர்கள் கூறுவது என்ன..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR