பருமன் எக்கசக்கமா இருக்கா... கோதுமைக்கு பதிலாக ‘இந்த’ தானியங்களுக்கு மாறுங்க!

கோதுமையில் இருந்து தயாரிக்கப்படும் சப்பாத்தி மட்டுமல்லாது, பிஸ்கட், பிரெட் மற்றும் பிற உணவுகள் பொதுவாக நம் அன்றாட உணவில் சேர்க்கப்படுகின்றன. கோதுமையில் அதிக அளவு பசையம் உள்ளது. இது உடல் எடையை அதிகரிக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 19, 2023, 04:15 PM IST
  • கேழ்வரகு அல்லது ராகி என்பது தென்னிந்தியாவில் விளையும் ஒரு தானிய வகை.
  • உடல் எடையை குறைக்க, கோதுமைக்கு பதிலாக பயன்படுத்த வேண்டிய 5 தானியங்கள்.
  • முதுமையில் வரக்கூடிய மூளை குறைபாடுகளை தடுக்கும் திறன் கொண்ட திணை அரிசி.
பருமன் எக்கசக்கமா இருக்கா... கோதுமைக்கு பதிலாக ‘இந்த’ தானியங்களுக்கு மாறுங்க! title=

கோதுமை இந்திய உணவின் முக்கிய பகுதியாக இருக்கும் ஒரு தானியமாகும். கோதுமை சப்பாத்தி என்பது நாம் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவு. வட இந்தியாவில் மட்டுமல்லாது, தற்போது தென்னிந்தியாவிலும் மிகவும் அதிகம் விரும்பி சாப்பிடப்படுகிறது.  கோதுமையில் இருந்து தயாரிக்கப்படும் சப்பாத்தி மட்டுமல்லாது, பிஸ்கட், பிரெட் மற்றும் பிற உணவுகள் பொதுவாக நம் அன்றாட உணவில் சேர்க்கப்படுகின்றன. கோதுமையில் அதிக அளவு பசையம் உள்ளது. இது உடல் எடையை அதிகரிக்கும். இது தவிர, கோதுமை அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இது நமது இரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கச் செய்யும். 

சப்பாத்தி  தயாரிக்க பொதுவாக கோதுமை பயன்படுத்தப்படும் நிலையில், கோதுமைக்கு பதிலாக, வேறு சில முழு தானிய மாவு பயன்படுத்துவது சிறந்த பலனைக் கொடுக்கும். கோதுமை மாவில் கார்போஹைட்ரேட் மற்றும் சற்று அதிக கலோரிகள் உள்ளன. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கோதுமை சாப்பாத்திக்கு பதிலாக, உங்களுக்காக  இங்கே கொடுக்கப்பட்டுள்ள சிறந்த 5 தானியங்களை கொண்டு சப்பாத்தி தயாரித்து, அதனை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், உங்கள் எடையை விரைவாகக் குறைக்கலாம் (Weight Loss Tips). ஏனெனில் அதிவற்றில் அதிக நார் சத்து இருக்கிறது. இங்கே கீழே குறிப்பிட்டுள்ள மாவுகளில் மாவுச் சத்து இல்லாததால், சாப்பாத்தி செய்வது சிறிது கடினமாக இருக்கும். அதனால், ஆரம்பத்தில், இந்த மாவுகளுடன் சிறிது கோதுமை மாவை சேர்த்துக் கொண்டு செய்வது எளிதாக இருக்கும். 

உடல் எடையை குறைக்க, கோதுமைக்கு பதிலாக இந்த 5 தானியங்களை சாப்பிடுங்கள் (5 Grains to Lose Weight)

1. ராகி

கேழ்வரகு அல்லது ராகி என்பது தென்னிந்தியாவில் விளையும் ஒரு தானிய வகை. ராகியில் புரதம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. ராகியின் புரத அளவை அரிசியுடன் ஒப்பிடுகையில், ராகியின் புரத அளவானது அரிசியை விட இரு மடங்காக உள்ளது. ராகி மாவில் பசையம் இல்லை. ராகி மாவில் நார்ச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இதனால் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வு இருக்கும். ராகியின் கிளைசெமிக் இண்டெக்ஸ் கோதுமையை விட குறைவாக உள்ளது. ராகி ரொட்டி மற்றும் கஞ்சி நமது எடையை குறைக்க உதவுகிறது. 

2. தினை

தினை பசையம் இல்லாத மற்றும் நார்ச்சத்து நிறைந்த தானியமாகும். சாப்பிட்ட பிறகு, உங்கள் வயிறு நீண்ட நேரம் நிரம்பியதாக உணர்கிறது. இதன் காரணமாக, நீங்கள் அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கிறீர்கள். விரைவாக எடை இழக்கிறீர்கள். முதுமையில் வரக்கூடிய மூளை குறைபாடுகளை தடுக்கும் திறன் கொண்ட திணை அரிசியில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் போன்ற மேலும் பல்வேறு சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.  தினை நமது கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுப்படுத்துகிறது.

மேலும் படிக்க | இந்த பானங்களை காலையில் குடிச்சா போதும்: வேகமா எடையை குறைக்கலாம்

3. பார்லி

பார்லியில் அதிக அளவு நார்ச்சத்து காணப்படுகிறது. இது உங்களை நீண்ட நேரம் பசியாக உணராமல் தடுக்கிறது. இதனுடன், செலினியம், தாமிரம், டிரிப்டோபன், மாங்கனீஸ், சோடியம் போன்ற சத்துக்களும் பார்லியில் உள்ளன. உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் கண்டிப்பாக பார்லி ரொட்டியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும், ஏனெனில் பார்லியில் மிகக் குறைந்த கலோரிகள் உள்ளன.

4. குயினோவா மாவு

அரிசி மற்றும் கோதுமை மாவைப் போலவே, குயினோவா மாவும் மெதுவாக பிரபலமடைந்து வருகிறது. குயினோவா மாவில் நிறைய சத்துக்கள் உள்ளன.  இது ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம் என்றால் மிகையில்லை. குயினோவா மாவு பசையம் இல்லாதது. புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்றவை இதில் ஏராளமாக உள்ளன. இது அதிக அளவிலான கலோரிகளை உதவுகிறது.  இந்த மாவு நம் வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துகிறது.  இதனால் பசி குறைகிறது. இதனால் நமது எடையை குறைக்க உதவுகிறது.

5. சோளம்

கோதுமைக்கு பதிலாக சோளம் ஒரு ஆரோக்கியமான தானிய விருப்பமாகும். கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்கள் நிறைந்த சோளத்தில் இரும்பு, பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனுடன், சோளம் ஒரு பசையம் இல்லாத தானியமாகும். இது நமது எடையைக் குறைக்க உதவுகிறது.

அதிகரித்து வரும் உடல் எடையை கட்டுப்படுத்த, மேலே குறிப்பிடப்பட்ட தானியங்களை உங்கள் தானியங்களில் சேர்த்துக்கொள்ளலாம். இருப்பினும், எடை இழக்க ஒரே வழி தானியங்கள் மட்டும் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதற்கு, சிறந்த உணவுப் பழக்கத்துடன் சரியான வாழ்க்கை முறையையும் பின்பற்ற வேண்டும். மேலும், நீங்கள் ஏற்கனவே ஏதேனும் உடல நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே உங்கள் உணவில் மாற்றங்களைச் செய்யுங்கள்.

(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)

மேலும் படிக்க | உயர் ரத்த அழுத்தத்தில் 4 வகை: அதனை எவ்வாறு தடுக்கலாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News