முள்ளங்கி இலை ஜூஸ்சில் மகத்தான பயன்கள்

Amazing Benefits of Radish Leaves: குளிர்காலத்தில், முள்ளங்கி இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் சாற்றை நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பல நன்மைகளை பெறலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 12, 2021, 10:24 AM IST
முள்ளங்கி இலை ஜூஸ்சில் மகத்தான பயன்கள் title=

புதுடெல்லி: குளிர்காலத்தில் (Winters) முள்ளங்கி இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் சாற்றை (Radish Leaves) நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பல நோய்களில் இருந்து விடுப்படலாம். 

முள்ளங்கி இலையில் (Radish Leaves) புரதம், கார்போஹைட்ரேட், குளோரின், சோடியம், இரும்புச்சத்து, மெக்னீசியம் போன்ற சத்துக்களுடன் வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி உள்ளது. இந்த இலைகளில் உள்ள பண்புகள் குளிர்காலத்தில் பல உடல்நல பிரச்சனைகளில் இருந்து உங்களை காப்பாற்றும். முள்ளங்கி இலைகளின் சாறு எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்-

ALSO READ | Health Tips: மன அழுத்தத்தை விரட்டும் 6 பழங்கள்.!!

எப்படி செய்வது

* முதலில் முள்ளங்கி இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

* இலைகளை 2-3 முறை சுத்தமான தண்ணீரில் கழுவவும்.

* பின்னர் இலைகளை சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைக்கவும்.

* பிறகு அதில் உப்பு, ஒரு சிட்டிகை கருப்பு மிளகு தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

* இந்த ஜூஸை தினமும் காலையில் குடிக்கலாம்.

செரிமானத்திற்கு நல்லது: இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானத்தை சீராக பராமரிக்க உதவுகிறது. செரிமான அமைப்பு பலவீனமாக இருந்தால், முள்ளங்கி இலைகளின் சாற்றை தொடர்ந்து உட்கொள்வது உங்களுக்கு நன்மை பயக்கும்.

கொழுப்பு குறைக்க உதவும்: உடல் எடை அதிகரிப்பதால் நீங்கள் சிரமப்படுகிறீர்கள் என்றால், முள்ளங்கி இலைகளின் சாறு உட்கொள்வது உங்களுக்கு நன்மை பயக்கும். இது உடல் எடையை குறைக்க உதவும்.

குறைந்த இரத்த அழுத்தம் பிரச்சனையில் விடுப்படலாம்: குறைந்த இரத்த அழுத்தம் பிரச்சனையில் கூட, முள்ளங்கி இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் சாறு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். முள்ளங்கி இலையில் உள்ள சோடியத்தின் அளவும் உங்களுக்கு நன்மை பயக்கும். இதனால் உடலில் உள்ள உப்புப் பற்றாக்குறை நீங்கும்.

ALSO READ | Health Alert: காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத ‘5’ உணவுகள்..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News